புத்தாண்டு ராசி பலன் 2026: தனுசு ராசிக்கு தெய்வ வாக்கு – டபுள் டக்கர் லாபம்
New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது.

நிலம், தங்கத்தில் முதலீடு
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 2026 வருடத்தில் யோக பலன்களை அதிகளவு பெறப் போகிறீர்கள். உங்களின் வாக்கு ஸ்தானம் பலமடைய போகிறது. கொடுத்த வாக்குறுதியை குடும்பம், சமூகம் என எல்லா இடங்களிலும் நிறைவேற்றுவீர்கள். உங்களின் பேச்சுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உங்களால் பலர் உதவி பெற்று பயனடைவார்கள்.
முன்னேற்றம்
பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். சுப காரிய தடைகள் விலகி, சுப செலவுகள் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்திற்கு நல்ல வரன் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு இரண்டிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்யோத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு நிச்சயம் உண்டு.
உற்சாகம்
மனதிற்கு பிடித்தபடியான வண்டி, வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் அமோகமான வளர்ச்சி இருக்கும். கடந்த காலங்களில் தடைபட்ட காரியங்கள் விலகி அடுத்தடுத்து நல்ல மாற்றங்கள் நிகழும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை இருக்கும். மன சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும்.
கவனம், பரிகாரம்
குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்பத்தில் உங்கள் தலையீடு இருக்க கூடாது. கோபத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, தைராய்டு பிரச்சனை இருப்போர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களின் வீட்டின் அருகில் உள்ள சிவன் கோயில் சென்று வழிபடுவதும், சிவன் மந்திரிங்களை உச்சரிப்பதும் உங்களுக்கு அற்புதமான பலன்களை அள்ளி கொடுக்கும். பசு மாட்டிற்கு உணவு தானம் செய்வது அவசியம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications