New Year Rasi Palan 2026: கடக ராசிக்கு தடைகள் தவிடு பொடியாகும் நேரம்.. ஒரு விஷயத்தில் கவனம்
New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது.

நிலம், தங்கத்தில் முதலீடு
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இடமாற்றம, வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து மாற்றங்களும் வந்தே தீரும். ஊருக்குச் செல்லும் மாற்றங்கள் எடுத்துக் கொள்வது நன்மையைத் தரும். அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். வண்டி, வாகனத்தில் அதிகமாக முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடைய விஷயத்தில் உங்களுக்கு ஏற்றத்தைப் பெறுவீர்கள்.
தடைகள் தவிடுபொடியாகும்
பிள்ளைகளின் படிப்புத் தடை, உத்தியோகத் தடை, தொழில் தடை, வியாபாரத் தடை பரிபூரணமாக நீங்கும். ரத்த அழுத்தம், இடது பக்க தேக ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. இதய நரம்புகள், மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நன்மை பயக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி
குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிறிய வயது பிள்ளைகளின் காதல் அமைப்புக்கு பெற்றோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். மூதாதையர்கள் சொத்துக்கள் கிடைக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
பரிகாரம்
இடமாற்றங்கள் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டாகும். 2 ஆம் இடத்தில் கேது, 8 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் பதட்டங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. கோளார் பதிகத்தை கேட்பது சிறந்த பரிகாரமாக இருக்கும். குரு உச்சமடைவதால் பசு மாடுகளுக்கு வியாழக்கிழமைகளில் உணவு அளிப்பது தடைகளை தவிடு பொடியாக்கும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். குரு உங்கள் ராசிக்கே வருவதால் சுப காரியங்கள் எல்லாமே நடக்கும். ஏற்றத்தை ஏற்படுத்தி தரும்.
ஆரோக்கியம் கவனம்
ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சுயமாக மருந்துகள் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவ ஆலோசனைகள் பெறுவது நல்லது. இல்லையெனில் பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். குரு வழிபாடு, நவக்கிரகத்தில் இருக்கும் குரு, ஆலங்குடி குரு, தென்திட்டை குரு வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications