புத்தாண்டு ராசி பலன் 2026: கன்னி ராசிக்கு காத்திருக்கும் கண்டம்.. ஜூன் மாதம் வரை கப் சிப்னு இருங்க
New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது.

நிலம், தங்கத்தில் முதலீடு
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளின் படிப்பு தடை, உத்தியோக தடை, வியாபார தடை, தொழில் தடை போன்ற அனைத்து தடைகளும் தவிடு பொடியாகும். அடுத்தடுத்து முன்னேற்றங்கள் ஏற்படும். கிடைக்கவே இல்லையா என்று காத்திருந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். உரிமங்கள் கிடைக்கும். அரசியலில் வெற்றி ஏற்படும். தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. அமைச்சர்கள் பதவி கிடைக்கும் யோகம் உள்ளது.
திருமண யோகம்
புதிய பொறுப்புகள் வரும். அரசாங்க உத்தியோகங்கள் கிடைக்கும். குரூப் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். ஆடிட்டிங் படிப்பவர்கள் தேர்ச்சி பெறும் யோகம் ஏற்படும். திருமணத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். மறுமணத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ஜூன் மாதம் வரை கவனம்
அலர்ஜி, ஒவ்வாமை, தலைவலி, மயக்கம் போன்ற பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் ஜூன் மாதம் முதல் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஜூன் மாதம் வரைக்கும் குடும்ப விஷயத்தில் ரோஷம் காட்டாமல் இணக்கமாகச் செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும்.
அனுகூலம்
உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட ஏற்றமும், நம்பிக்கையும் அனுகூலத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். கோபம், ரோஷப்படாமல் இருப்பது நன்மை பயக்கும். பெருமாள், நரசிம்மர், விஷ்ணு வழிபாடு, திவ்ய தேசங்களுக்கு செல்வது, பிடித்த இடங்களுக்குச் செல்வது, பெருமாளை தொடர்ந்து வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும்.
பரிகாரம்
தினந்தோறும் கோவிந்த நாமங்களைக் கேட்பது, குருவாயூர் கிருஷ்ணர் வழிபாடு, நாராயணியத்தில் 100 ஆவது பாடல் கேட்பது, ஆழ்வார்கள் பாசுரம் கேட்பது, ஆண்டாளை வழிபாடு செய்வது, துளசி கொடுப்பது, பெருமாள் கோயிலில் அன்னதானத்துக்கு மிளகு, சீரகம், உப்பு போன்ற மளிகை சாமான்களை கொடுப்பது ஏராளமான நன்மைகளைக் கொடுக்கும்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications