புத்தாண்டு ராசி பலன் 2026: கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தில் புரளும் யோகம்.. ஆபத்தும் இருக்கு கவனம்
New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது.

நிலம், தங்கத்தில் முதலீடு
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கொடுத்த வாக்கை குடும்பத்தில் காப்பற்றும் யோகம் ஏற்படும். லாபமும், அனுகூலமும் காணப்படும். தொழில் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வேலை, உத்தியோகம், வியாபாரம், படிப்பு சரியாக வரவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படும்.
ஆரோக்கியம்
மறைமுக எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மருந்து, மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கடன் அமைப்பில் இருந்த மனத் தாங்கல்களை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நட்பில் கவனம்
கூடா நட்பு கேடு விளைவிக்கும் என்பதால் அதை நினைவில் வைத்து செயல்படுவது நல்லது. தொழிலே இல்லை, வியாபாரமே இல்லை என்று கவலைப்படத் தேவையில்லை. நல்ல தொழில், நல்ல வியாபாரம், முதலீடுகள் கிடைக்கும். பல தொழில் செய்யும் அனுகூலம் காணப்படும். பயணங்கள் மேற்கொள்வீர்கள். இடம் விட்டு இடம் போகும் யோகம் உண்டாகும்.
பதவி உயர்வு கன்ஃபார்ம்
பதவி உயர்வில் இருந்த தடைகள் நீங்கும். சம்பள உயர்வு கிடைக்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகள், அரசாங்கப் பொறுப்பில் இருப்பவர்கள் பெரிய பொறுப்புகளுக்கு வரும் பாக்கியம் உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வண்டி, வாகனத்தில் மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் புதிய வரவுகள் கிடைக்கும்.
வழிபாடு
பிள்ளைகள், பேரக் குழந்தைகள் என்று அனுகூலங்கள் பெறும் ராசிகளில் கும்ப ராசிக்காரர்களும் ஒருவர், யோக பலத்தையும், சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். அடிவயிறு, கழிவுப் பாதை, கீழ்முதுகு, கழிவுப் பாதை, கழுத்து வலி, மறைமுக ஸ்தானம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தோல் பகுதியில் வரும் சிறு பாதிப்புகளைக் கூட மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது. நரசிம்மர் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications