Puthandu Palan: மகர ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும் காலம்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் மகரம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.

2026 புத்தாண்டு பலன்
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும். இந்த புத்தாண்டில் மகரம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மகரம் புத்தாண்டு பலன்
மகர ராசிக்காரர்கள் காதல் அமைப்பில், துணையின் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். துணையிடம் எந்தவிதமான பிரச்சனையும் வைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். மற்றவர்கள் குடும்பத்தில் நீங்களும், உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது.
உடற்பயிற்சி அவசியம்
ஏழரை சனி பரிபூரணமாக விலகிவிட்டது. இருப்பினும் சனி உங்களுக்கு ராசிக்கு அதிபதியாக இருப்பதால் உடற்பயிற்சியை தவறாமல் செய்வது உங்களுக்கு பெரும் வெற்றியைத் தரும். உங்களுடைய தாரக மந்திரமே உடற்பயிற்சி தான். மகர ராசிக்கு 3 இல் சனி 2027 ஆம் ஆண்டு வரை இருக்கிறார். சனி பகவான் உங்களுக்கு எல்லாவிதமான ஏற்றங்களையும் கொடுக்கக் கூடியவர்.
திருமணத் தடை நீங்கும்
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. 8 இல் கேது இருப்பால் நெகட்டிவான யோசனைகள், எதிர்மறையான சிந்தனை, நரம்புக் கோளாறு, மயக்கம், தலைசுற்றல் போன்றவை ஏற்படும். மருந்துகளைத் தவறாமல் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். மே மாதம் முதல் சந்தோஷம் களைகட்டும்.
பாக்கியம்
புத்திர சந்தான பாக்கியம் உண்டாகும். லாபம் ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். தைரியம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். அஷ்டமலட்சுமி யோகம் கிடைப்பதால் அடுத்தடுத்து நல்ல விஷயம் ஏற்படும். லாட்டரி டிக்கெட் வாங்கினால் அதிர்ஷ்டம் ஏற்படும். ஏழைகளுக்கு உணவு, பொருள்களை வாங்கிக் கொடுப்பது நல்லது.
வழிபாடு
இந்தப் புத்தாண்டில் உங்களுடைய வசதி வாய்ப்புகளைப் பெருக்கும் யோகம் உண்டாகும். அடுத்தடுத்து நந்மைகள் ஏற்படும் யோகமான காலகட்டமாக இருக்கும். பல், தொண்டு, கழுத்து முதல் தலை வரைக்குமான உடல் உறுப்புகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். விநாயகர் வழிபாடு, மகான்கள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications