புத்தாண்டு ராசி பலன் 2026: அடித்து ஆடப்போகும் மீன ராசி.. ஜென்மசனியிலும் ஜாக்பாட் அடிக்கும் யோகம்
New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது.

நிலம், தங்கத்தில் முதலீடு
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்த ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் சனி இருப்பதால் உடற்பயிற்சி செய்யாவிட்டால் சிக்கல்கள் ஏற்படும். உயரமான இடங்கள், படிக்கட்டுகள், தீப்பிழம்புகள் போன்ற விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செல்போனை பயன்படுத்தும்போது எச்சரிக்கை தேவை. அதனால், தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். தள்ளிப் போடுவதால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
பிரச்சனைகள் தீரும்
பாரம்பரியமாக இருக்கும் பிரச்சனைகள் தீரும். உங்களுக்கும், உங்களுடைய உங்கள் பெற்றோருக்கும் இருந்து வந்த மன வருத்தங்கள் தீரும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு செய்வீர்கள்.
ஏற்றம்
அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடல்களை அடுத்த ஆண்டு முழுவதும் படிப்பது மேன்மையைத் தரும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இடைவெளிகளை வைத்துக் கொள்ளாமல் நல்ல தோழன், தோழி போல தோள் கொடுத்து நிற்பது அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். எல்லா விதத்திலும் ஏற்றம் ஏற்படும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமையில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது மீன ராசியினருக்கு சகல விதத்தில் ஏற்றத்தை ஏற்படுத்தும். அகத்திக்கீரையை தவிர மற்ற உணவுகளைக் கொடுப்பது நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தும். நிம்மதி ஏற்படும். கெளரவம் உண்டாகும். வீடு, நிலம், நகை பணத்தை குவிக்கும் யோகம் உண்டாகும்.
கடன்கள் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். உங்களை விட மூத்தவர்கள் உங்களுக்கு உதவி செய்ய வரும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. உங்களைவிட மூத்தவர்கள் நல்லது செய்வார்கள். அற்புதமான முன்னற்றங்கள் உண்டாகும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை கடைப்பிடிப்பது நல்லது. காரியசித்தி மாலை மந்திரம், அனுமன் சாலிஷா மந்திரம், நரசிம்மர் கவசம் கேட்பது சுபிக்ஷத்தை ஏற்படுத்தும்.
வழிபாடு
பிள்ளைகளுக்காக அபிராமி அந்தாதியை படிப்பது ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அடிவயிறு, முதுகுத் தண்டுவடம், கழிவுப் பாதை, பாதம், நகம் வரை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். கணபதி, அனுமன், நரசிம்மர், வாராஹி போன்ற ஏதோ ஒரு தெய்வத்தை தொடர்ந்து வழிபாடு செய்வது ஏற்றத்தை தரும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications