Puthandu Palan 2026: மேஷ ராசிக்கு இந்தப் புத்தாண்டு எப்படி இருக்கும்?.. முழு விவரம்
New year rasi palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் 2026 பிறக்க போகிறது. கல்வி, உத்யோகம், தொழில் உள்ளிட்ட பலவற்றுக்காக மக்கள் 2026 புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டில் மேஷ ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2026 தொடக்கத்தில் சனி பகவான் குரு பகவான் வீட்டில் உள்ளார். அதன் பிறகு 2026 இறுதியில் சனி செவ்வாய் வீட்டிக்கு செல்லவுள்ளார். மருத்துவத்துறையில் புரட்சி ஏற்படும். விவசாயத்திலும் பெரிய முன்னேற்றம் காணப்படும். தங்கம் விலை உயர்வு அதிகமாக இருக்கும். நிலநடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் இருக்கும்.

2026 புத்தாண்டு பலன்
குஜராத், மும்பை நகரங்களில் பெரியளவுக்கு பாதிப்பு இருக்கும். இமயமலை சுற்றுவட்டார பகுதிகளில் சேதம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மழை வெள்ளம் பாதிப்பு இருக்கும். உலகளவில் இலங்கை மீண்டும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கும். வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு பல பகுதிகளில் பாதிப்பு இருக்கும். பெரிய நோய்கள் பரவும். தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
தீவிரவாதிகளின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடிகர்கள், விளையாட்டு துறை பிரபலங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். ஊடகம், ஐடி, உணவு, விவசாயம், உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். புதிய தொழில் தொடங்குவோர் அந்த துறைகளை சார்ந்து திட்டமிட்டுக் கொள்ளவும்.
மேஷம் புத்தாண்டு பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். எந்த விஷயங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அவை நீங்கும். சுபவிரய பிராப்தம் உண்டாகும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, வீடு புதுப்பிப்பது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது போன்ற யோகம் உண்டாகும்.
திடீர் அதிர்ஷ்டம்
அலுவலகத்தை மாற்றுவது, கூடுதல் டிகிரி, படிப்பு படிக்கும் யோகம் உண்டாகும். வேற்று மொழி பேசும் நபர்களால் ஆதாயம் உண்டாகும். ராகு உங்களுக்கு நன்றாக உதவிகளைச் செய்வார். 11 ஆம் இடத்தில் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். லாட்டரியில் பணம் கிடைக்கும். பூர்வீகத்தில் இருக்கும் சொத்துப் பிரச்சனைகள் தீரும். எதிரிகள் விலகுவார்கள். வழக்குகளில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். எதிரிகள் சரணடைவார்கள்.
சொத்துகள் யோகம்
அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். ஜூன் மாதத்திற்குள் சுபகாரியங்கள் நடக்கும். குடும்பத்தாருடன் யாத்திரைகள், தொலைதூரப் பயணங்கள் செல்லும் யோகம் உண்டாகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பவர்கள் மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்து சந்தோஷமாக இருப்பீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக சேர்ந்திருக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.
சங்கடங்கள் தீரும்
பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த மன சங்கடங்கள் படிப்படியாக குறையும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் அந்நியோன்யம் ஏற்படும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 49, 75 ஆவது பாடல்களை படிக்க படிக்க பெரிய பலம் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு ஏற்றம் பெறும்.
மாற்றம், முன்னேற்றம்
ஜூன் மாதத்திற்குப் பிறகு தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் உண்டாகும். தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். மீடியாவில் நல்ல பெயர் வாங்குவீர்கள். யூடியூப் ஆரம்பிக்கும் யோகம் உள்ளது. விருதுகள் வாங்குவீர்கள். தேர்தல் வேலைகளில் பங்காற்றுவீர்கள். தேர்தலில் திடீர் அதிர்ஷ்டம், வெற்றி உண்டாகும். அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
பண வரவு நன்றாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். அனுமன் சாலிஷா கேட்பது நன்மை பயக்கும் ஏழரை சனியில் இருப்பதால் உடற்பயிற்சி அவசியம். அடிவயிறு, நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஏழரை சனி நடப்பதால் விநாயகர், அனுமன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications