Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு ராசி பலன் 2026: துலாம் ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

New year Rasi Palan 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 1 மாதம் மட்டுமே உள்ளது. வரும் மார்கழி 17 ஆம் தேதி புத்தாண்டு 2026 பிறக்கிறது. இந்த புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், வரும் 2026 புத்தாண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது. 1.1.2026 மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று புத்தாண்டு பிறக்கிறது.

new-year-rasi-palan-2026-what-kind-of-benefits-will-get-thulam-libra-rasi-people-during-this-new

நிலம், தங்கத்தில் முதலீடு

2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.

அந்த வகையில், இந்த ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு பழைய கடன்கள் தீரும் அமைப்பு ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். முதலீடுகளை செய்வீர்கள். வீடு கட்டும் யோகம் ஏற்படும். ஏற்கனவே வீடு கட்டியவர்கள் இன்டீரியர் டெக்கரேஷன் செய்வது, வீடுகளை விரிவுபடுத்துவது போன்ற வசதிகளைச் செய்து கொள்வீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் ஏற்படும். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தொழில் தொடங்கும் யோகம்

உத்தியோகத்தில் நல்ல ஏற்றத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகமான மாற்றங்களைப் பெறும் யோகம் உண்டு. படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் இதில் எதுவாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் பெறும். திடீரென முடிவுகளை எடுப்பீர்கள். தனியாக தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடுகளுக்கு வியாபாரம் செய்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி, வாடகைக்கு விடுவது, ஒப்பந்தம் எடுத்து தொழில் செய்யும் யோகம் ஏற்படும்.

சிக்கல்கள் தீரும்

தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும் அமைப்பு ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பெரிய அளவு அனுகூலத்தை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். மன சோர்வுகள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகளுடன் கோபதாபப்படாமல் இருப்பது நல்லது.

ஆரோக்கியம்

தோல், ஜாயிண்டில் ஏற்படும் வலிகள் போன்றவற்றில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடல்களை படிப்பது நன்மை பயக்கும். கோயில் கும்பாபிஷேகம், கோயில் திருப்பணிகளுக்கான காரியங்களைச் செய்வீர்கள். நிறைய கைங்கரியங்கள் செய்வீர்கள். மாகன்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

உடற்பயிற்சி முக்கியம்

மலைக் கோயில்களுக்குச் செல்வது, காசி செல்வது, ராமேஸ்வரம், ராமர் கோயில்களுக்குச் செல்வது போன்ற யோகம் ஏற்படும். சத்ரு ஜெயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் நம்பிக்கை, புத்துணர்வு ஏற்படும். சனி உச்சம் பெறக்கூடிய ராசிக்காரர்கள் என்பதால் தினந்தோறும் உடற்பயிற்சியை தவறாமல் செய்வது நல்லது. எல்லா விதத்திலும் மன அழுத்தம் தீரும்.

வழிபாடு

வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படும். பண வரவு உண்டாகும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். நீதிமன்றம், வழக்கு என்று இருந்த நிலைமைகள் மாறி ஜெயம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வாராஹி அல்லது நரசிம்மரை வழிபாடு செய்வது முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+