Puthandu Palan: 2026 இல் காதலில் ஜெயிக்கப் போகும் 6 ராசியினர்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
New Year Rasi Palan: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் காதலில் ஜெயிக்கப் போகும் 6 ராசிக்காரர்கள் யார், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும். இந்தப் புத்தாண்டில் காதலில் ஜெயிக்கப் போகும் 6 ராசிக்காரர்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
கடகம்
புத்தாண்டில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். கமையை உணர்ந்து செயல்பட்டால் கட்டாயமாக வெற்றி ஏ்படும். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். உழைப்புக்கான அங்கீகாரம் உண்டாகும். காதல் மலரும். புதிய வேலைவாய்ப்பு கைகூடி வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு அற்புதமான ஆண்டாக இருக்கும். சொல்லாமலேயே இருந்த காதலை இந்த ஆண்டில் சொல்வீர்கள். காதல், திருமணம் கைகூடும். எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையாக செயல்படுவது நன்மை பயக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களுடைய உழைப்புக்கான அங்கீகாரம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறும் யோகம் ஏற்படும்.
மீனம்
நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய அற்புதமான ஆண்டாக இருக்கும். சோம்பலைத் தவிர்த்து வேகமாக செயல்படுவது நன்மை பயக்கும். காதல் வாழ்க்கையில் வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்வது புத்திசாலித்தனம்.
மேஷம்
காதல் மலரும், பெற்றோர்களின் ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பதவி, பொறுப்புகள் தேடி வரும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கும். திட்டமிட்டு செய்தால் காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி, பொறுப்புகள் தேடி வரும். உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும்.
கும்பம்
காதல், திருமணம் கைகூடும் வாய்ப்புள்ளது. கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல ஆண்டாக இந்த ஆண்டு அமையும். பொறுமையைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தை தரும். பொறுமையும், நிதானமும் அவசியம்.
தொழில் நிரந்தரமாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் யோகம் உண்டாகும். வீண் தர்க்கத்தை செய்வதை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு உத்தியோகமும், ஏற்றமும் உண்டாகும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். கையெழுத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு வாய்ப்புகள், பயணங்கள் வந்தால் அதனை பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். பணம் தொடர்பான விஷயங்களை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது.
சிம்மம்
திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். அலுவலகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பேசும் வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. முக்கியமான வேலைகளை மற்றவர்களை நம்பிக் கொடுக்காமல் நீங்களே செய்வதை நல்லது. முக்கியமான ஆவணங்களை கவனமாக கையாளுவது நல்லது.
காதலில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications