Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Puthandu Palan: 2026 இல் தங்கம் விலை குறையுமா?.. ஜோதிடம் சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டிலாவது தங்கத்தின் விலை குறையும் வாய்ப்புள்ளதா என்று பலரும் காத்திருக்கின்றனர். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் தங்கம் விலை குறையுமா, கூடுமா என்பது குறித்து ஜோதிடம் சொல்வதென்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

new-year-rasi-palan-will-the-price-of-gold-fall-in-2026-what-does-astrology-say

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும்.

தங்கம் விலை குறையுமா

எந்த அளவுக்கு தங்கம் விலை உயருகிறதோ அதே நேரத்தில் விலை இறங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. குரு பூச நட்சத்திரத்தில் இருந்து ஆயில்ய நட்சத்திரத்திற்கு வரும்போது தங்கம் விலை கண்டிப்பாக குறையும். உயர்ந்த கிரகம், உயர்ந்த விஷயம், உயர்ந்த கடவுள் என்றால் குரு பகவான். குருவுக்கான ஸ்தானம் தான் தங்கம். அதனால் தங்கம் விலை பிரம்மாண்டமாக குறைவதற்கான வாய்ப்பு என்பது இல்லை. ஆனால், 10 முதல் 12 சதவீதம் குறைவதற்கான வாய்ப்புள்ளது.

அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் காப்பர் விலை 38 சதவீதம் உயருவதற்கான வாய்ப்புள்ளது. அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருக்கும் வாகனங்கள் எல்லாமே ஹைபிரிட் ஆக மாறும் வாய்ப்புள்ளது. ஈவி வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்குவோம். அதனால் கண்டிப்பாக காப்பர் விலை உயரும். குரு மாறி சூரியன் வீட்டுக்கு செல்லும்போது சூரிய வெளிச்சத்தில் வரக்கூடிய விஷயங்களை அதிகளவில் பயன்படுத்துவோம். சனி நீச்சம் பெற்று மேஷத்திற்கு செல்லும்போது, எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க அரசு மானியம் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டம் பெறும் 5 ராசியினர்

2026 இல் மகர ராசிக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 2026 இல் ஜாக்பாட் அடிக்கும் ராசி என்றால் மகர ராசியினர் தான். அதற்குப் பிறகு மீனம், நிறைய பிரச்சனைகளைச் சந்திக்கும் விருச்சிகம் அதிர்ஷ்டத்தை பெறும். நிறைய பேர் புதிய வேலை வியாபாரத்தை தொடங்கும் யோகம் என்றால் கடக ராசியினருக்கு உண்டு. கன்னி ராசியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தின் உச்சத்தைப் பெறுவார்கள். அந்த அளவுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். இந்த 5 ராசியினருக்கு புத்தாண்டு யோகங்களை அள்ளிக் கொடுக்கும்.

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகளவில் முன்னேற்றமடையும். புதிய வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற மாணவர்கள் உண்டாகும். மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்து வரும் சிம்ம ராசியினருக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். மொத்தத்தில் 2026 ஆம் ஆண்டு நல்ல நிலையில் தான் ஆரம்பிக்கிறது.

கெட்ட சம்பவங்கள்

பிப்ரவரி மாதம் வரை குரு வக்கிரமாக இருப்பார் என்பதால் மடம், கோயில், தர்மசத்திரம், அறக்கட்டளைகள், கோயிலுக்குள் நடக்கும் விஷயங்கள் போன்றவற்றில் கெட்ட சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. அதிக அளவில் கூட்ட நெரிசல்கள் ஏற்படும். டிசம்பர் மாதத்தில் கொங்கு மண்டலத்தில் அதீத வெள்ளம் ஏற்படும். கோயில்களில் இடிக்கப்படுவது, பேராசிரியரால் கல்லூரியை மூடும் நிலையை உண்டாகுக்குவது போன்ற நிலை ஏற்படும்.

சனியின் குரூர பார்வை ரிஷபம், கன்னி, தனுசு ராசியில் இருப்பதால் ஹாஸ்டல்களில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். மருந்துகளால் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. 2027 மே மாதம் வரை இந்த நிலை இருக்கும். 2026 ஜூன் மாதத்திற்குப் பிறகு நல்ல நிலைமை ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+