Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது தோஷம் நீக்கும் கணபதி - எந்த ராசிக்காரர்கள் எப்படி விநாயகரை வணங்குவது

கணபதியை வணங்கிட கவலைகள் பறந்திடும். வினைகள் தீர்ப்பவர் விநாயகர். ராகு கேதுவினால் ஏற்படும் தோஷங்களை போக்கக்கூடியவர் கணபதி. பிள்ளையாருக்கு பிடித்தமானது எளிமை. அருகம்புல்லும் எருக்கம்பூவும் போதுமானது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விநாயகர் வினைகள் தீர்ப்பவர். சங்கடங்களை தீர்ப்பவர் சங்கரன் மைந்தன். கவலைகளை போக்குபவன் கணேசன், விநாயகருக்கு பல பெயர்கள் உண்டு. ஆதி விநாயகர் தொடங்கி வித்யா கணபதி, வீர கணபதி, செல்வ கணபதி பல கணபதிகள் உள்ளனர். விநாயகரை வணங்கினால் தோஷங்கள் பறந்தோடும். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்கள் எந்த கணபதியை வணங்கலாம் என்று பார்க்கலாம்.

முழுமுதற்கடவுளாக வணங்கப்படுபவர் பிள்ளையார். விநாயகரை சிவ ஆலயங்களில் வணங்குவது போல விஷ்ணு ஆலயங்களில் தும்பிக்கை ஆழ்வாராக வணங்குகின்றனர். சக்தியின் மைந்தன் கணபதியை சின்ன பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விருப்பத்தோடு வணங்குகின்றனர். ஆனைமுகத்தோனை வணங்குபவர்கள் எத்தகைய துன்பங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.

விநாயகருக்கு பல வடிவங்கள் உண்டு. பல பெயர்கள் உண்டு. 108 கணபதிகள் உள்ளனர். இன்றைக்கு ராக்கெட் விநாயகர் முதல் அத்திவரதர் விநாயகர் வரை பல விநாயகர்கள் உள்ளனர். ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் பொறுத்தும் ராகு கேது தோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் கடன் பிரச்சினை உள்ளவர்கள் வணங்க வேண்டிய கணபதியை பார்க்கலாம்.

வீர விநாயகர்

வீர விநாயகர்

மேஷ ராசிக்காரர்கள் வீரமானவர்கள். செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் உங்க மனசுக்கு பட்டதை சரியென்று சொல்வார்கள். மனோதைரியம் மிக்க நீங்கள் வீர கணபதியை வணங்க வெற்றிகள் தேடி வரும். சனிபகவான் குருபகவான் உங்க ராசியில் இருந்து பத்தாம் வீட்டிற்கு சனியும், ஒன்பதாம் வீட்டிற்கு குருவும் இடப்பெயர்ச்சி அடையப்போவதால் நீங்கள் சித்தி விநாயகரை ஒன்பது வாரங்கள் வணங்க காரியங்கள் சித்தியாகும்.

ஸ்ரீ வித்யா கணபதி

ஸ்ரீ வித்யா கணபதி

சுக்கிரனை ஆதிக்க நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே... அம்பிகையின் அருளுக்கு பாத்திரமானவர்கள். சந்திரன் உச்சம் பெறுவது உங்க ராசியில்தான். உங்களுக்கு ராஜ ராஜேஸ்வரி யோகம் கிடைக்க வேண்டும் எனில் கல்வி செல்வம் கிடைக்க ஸ்ரீ வித்யா கணபதியை வணங்கலாம். சங்கடங்கள் தீர சதுர்த்தி நாளில் மஞ்சள் ஆடை அணிந்து வணங்கலாம் நன்மைகள் அதிகம் நடக்கும்.

லட்சுமி கணபதி

லட்சுமி கணபதி

புதனை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு திறமையும் அதிர்ஷ்டமும் வந்து சேரும். உங்களின் வளர்ச்சி கண் திருஷ்டியால் பாதிக்கப்படலாம். போட்டி பொறாமை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் போட்டிகளை சமாளிக்க நீங்க லட்சுமி கணபதியை வணங்குங்கள். சகல செல்வமும், லட்சுமி காடாட்சமும் கிடைக்கும்.

நவரச விநாயகர்

நவரச விநாயகர்

பல கலைகளுக்கு சொந்தக்காரர் நீங்கள். உங்களுக்கு கற்பனைத்திறன் அதிகம் இருக்கும். அபாரமான சக்தி கொண்ட நீங்கள் சந்திரனை ராசி நாதனாகக் கொண்டவர். சாந்தமாகவும், சில நேரங்களில் கோபமாகவும் இருக்கும் நீங்கள் வணங்க வேண்டிய கணபதி ஹேராம்ப கணபதி. ராகு கேதுவினால் ஏற்படும் தொந்தரவுகளை போக்க சிறு விநாயகரை டாலரில் கோர்த்து போட்டுக்கொள்ளலாம்.

விஜய கணபதி

விஜய கணபதி

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் தலைமைப்பண்புடையவர். உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். அற்புதமான திறமை அசாத்தியமான மன வலிமை கொண்ட நீங்கள் வணங்க வேண்டிய கணபதி ஸ்ரீவிஜய கணபதி. உங்களுக்கு வெற்றி அதிகம் கிடைக்கும். ஒன்பது ஞாயிறுக்கிழமை சூரிய ஓரையில் விநாயகர் ஆலயம் சென்று சிதறுகாய் போட்டு வழிபடலாம்.

மோகன கணபதி

மோகன கணபதி

கன்னி ராசிக்காரர்கள் புதனை ஆட்சி நாதனாகக் கொண்டவர்கள். காரியங்களில் வெற்றியும் புத்திசாலித்தனமும் கொண்டவர்கள். அர்த்தாஷ்டம சனி பாதிப்பு குறைய மோகன கணபதியை வணங்கலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் இணைந்து வெற்றி பெறுவீர்கள். வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் கணபதியை வணங்க நன்மைகள் கிடைக்கும்.

பஞ்சமுக விநாயகர்

பஞ்சமுக விநாயகர்

சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்ட நீங்க லட்சியவாதிகள். லட்சியத்தில் வெற்றி பெற பஞ்சமுக விநாயகரை வீட்டில் வைத்து வணங்கலாம். வாழ்க்கையில் வெற்றிகள் மேன்மேலும் கிடைக்க திங்கட்கிழமைகளில் கணபதியை வணங்க சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்.

சக்தி கணபதி

சக்தி கணபதி

சுறுசுறுப்பானவர் நீங்கள். செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் உற்சாகமானவர்கள். நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் சக்தி கணபதியை வணங்க எண்ணற்ற சக்திகள் செல்வங்கள் தேடிவரும். தினசரி விநாயகரை வணங்க எண்ணற்ற பலன்களும் நன்மைகளும் கிடைக்கும்.

சங்கடஹர கணபதி

சங்கடஹர கணபதி

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் நேர்மையானவர்கள். நேர்வழியில் சென்று எதையும் சாதிப்பீர்கள். உங்களின் வெற்றி நிரந்தரமாக நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சங்கடஹர கணபதியை வணங்க வேண்டும். ஏழரை சனியில் பாதிப்பில் இருந்து விடுபட தினசரியும் விநாயகரை வழிபடலாம்.

யோக கணபதி

யோக கணபதி

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் உங்கள் ஆசையும் எண்ணமும் நிறைவேற யோக கணபதியை வணங்க வேண்டும். யோக கணபதியை வணங்க வெற்றிகள் தேடி வரும். சனியினால் ஏற்படும் சங்கடங்கள் ஒருபுறம் இருந்தாலும் ராகு கேதுவினால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்க நீங்க பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கலாம்.

சித்தி கணபதி

சித்தி கணபதி

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்க புதிய புதிய விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். தனித்திறமையால் முன்னேறும் நீங்கள் புதிய புதிய விசயங்களை எளிதில் கற்றுக்கொள்வீர்கள். சித்தி கணபதியை வழிபட சந்தோஷங்கள் அதிகரிக்கும். அருகம்புல்லால் விநாயகரை அர்ச்சனை செய்து வர நன்மைகள் நடைபெறும்.

பால கணபதி

பால கணபதி

குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் வணங்க வேண்டிய கணபதி பால கணபதி. உங்கள் மனம் போல் நல்ல வாழ்வு அமைய நல்லவைகளையே நினையுங்கள். அரசமரத்தடி விநாயகரை சதுர்த்தி நாளில் வணங்க சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் சங்கடங்கள் தீரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+