மிதுனத்தில் சந்திரன்... மகரத்தில் குடியேறும் புதன்... 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை இன்றைய தினத்தில் யாருக்கு என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனோகாரகன் சந்திரன் இன்று மிருகசிரீடம் நட்சத்தில் இருக்கிறார். ரிஷபத்தில் இருந்து பிற்பகலில் மிதுனம் ராசிக்கு நகர்கிறார். இதேபோல புத்திநாதன் புதன் மகரம் ராசியில் குடியேறுகிறார்.

12 ராசிகளையும் 9 கோள்கள் ஆட்சி செய்கின்றன. கோள்கள் ஒவ்வொன்றுக்கும் ஆட்சி வீடு, உச்சவீடு, நீச வீடு உள்ளன.

விரைவில் நகரும் கோளான சந்திரன் இன்றைக்கு மிதுனம் ராசியில் நுழைகிறார். புத்திநாதன் புதன் இன்று மகரத்தில் சூரியன், கேது, சுக்கிரனுடன் குடியேறுகிறார்.

மேஷம்

மேஷம்

ராசிக்கு 3வது இடத்தில் சந்திரன் அமர்கிறார். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் அமர்வது நன்மையை தரக்கூடியது. சகோராா்கள் உதவிகள் தாராளமாக கிடைக்கும். இளைய சகோதரர்கள் நன்மைகளை பெறுவதற்குாிய கால கட்டமாக இரு இருக்கும். குடும்ப வழியில் நன்மைகளை எதிா்பாா்க்கலாம். கணவன் மனைவி மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவாா்கள். ராசி எண்: 9 ராசி நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ப்ரவுன்

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு இரண்டாவது இடத்தில் சந்திரன் அமர்கிறார். நேற்று வரை இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோபம் குறையும். தோற்றப் பொலிவுக் கூடும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். ராசிக்காரர்களுக்கு புதன் 9வது இடத்தில் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் பணியிடங்களில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அலுவலகத்தில் மேலதிகாரி உதவுவார். தம்பதியாிடையே உற்சாகம் ஏற்படும். ராசி எண்: 7 ராசி நிறங்கள்: மஞ்சள்,பிங்க்

மிதுனம்

மிதுனம்

ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். அலுவலகத்தில் அலட்சியம் வேண்டாம். ராசி நாதன் புதன் உங்கள் ராசிக்கு 8வது இடத்தில் அமர்வதால் பண வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். குடும்ப வகையில் விருத்தி உண்டாகும். குடும்பத்தில் புதிய உறுப்பினா் சோ்க்கை இருக்கும். வீடு கட்டிக் கொண்டிருப்பவா்கள் பணியினை துாிதமாக முடிப்பாா்கள். ராசி எண்: 4 ராசி நிறங்கள்: சில்வர் கிரே,ப்ரவுன்

கடகம்

கடகம்

ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் உங்கள் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம்.உடல் நிலையில் கவனம் தேவை. பயணத்தில் எச்சாிக்கை தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும்.
ராசி எண்: 2 ராசி நிறங்கள்: ஆரஞ்சு,பச்சை

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்கிறார். செயலில் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் கைகூடி வரும். சிம்மம் ராசிக்கு 6வது இடத்திற்கு புதன் அமர்வதால் தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண வரவு அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். இன்று இன்பச் சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். இது திருப்தியான காலமாகும்.
ராசி எண்: 5 ராசியான நிறங்கள்: மெரூண்,ப்ரவுன்

கன்னி

கன்னி

ராசிக்கு 10வது இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்கிறார். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கன்னி ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் அமர்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இன்றைக்கு மனைவியுடன் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.ராசி எண்: 3 ராசி நிறங்கள்: மெரூண்,ஆரஞ்சு

துலாம்

துலாம்

ராசிக்கு 9வது இடத்தில் சந்திரன் நுழைகிறார்.இன்று பிற்பகல் வரை சந்திராஷ்டமம் உள்ளது. எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். பிற்பகல் முதல் கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். 4வது வீட்டில் புதன் அமர்ந்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு புதிய மதிப்பு கிடைக்கும். உறவினர்கள் அன்புடன் பழகுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்கலாம்.
ராசி எண்: 1 ராசி நிறங்கள்: கிரே,மஞ்சள்

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு 8வது இடத்தில் சந்திரன் அமர்கிறார். பிற்பகல் முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் ராசிக்கு புதன் 3வது இடத்தில் அமர்வதால் துலாம் ராசிக்கு நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரமாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். இன்று உங்களைப் பற்றி வதந்திகள் உலா வரும். ராசி எண்: 6 ராசி நிறங்கள்: ஆரஞ்சு,ஊதா

தனுசு

தனுசு

ராசிக்கு 7வது இடத்தில் சந்திரன் அமர்கிறார். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். 2வது இடத்தில் புதன் அமர்ந்துள்ளார். உற்சாகமான கால கட்டமாகும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்.
ராசி எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,கருநீலம்

மகரம்

மகரம்

ராசிக்கு 6வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். மகர ராசியில் அமரும் புத பகவானால் சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவிகளில் உயர்வு அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். ராசி எண்: 8 ராசியான நிறங்கள்: ரோஸ்,கிரே

கும்பம்

கும்பம்

ராசிக்கு 5வது இடத்தில் சந்திரன் அமர்வதால் சிக்கல்கள் தீரும். குழந்தைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். . உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: வெள்ளை,மஞ்சள்

மீனம்

மீனம்

ராசிக்கு 4வது இடத்தில் சந்திரன் இருப்பதால் வீட்டில் தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். .புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்கிறார். உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். பண வருவாய் அதிகரிக்கும். ராசியான எண்: 2 ராசியான நிறங்கள்: ஊதா,இளம்சிவப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+