ஜிஎஸ்டியால் 2018 ல் தொழில், வியாபாரம் எந்த ராசிக்கு எப்படியிருக்கும்? - பலன்கள்
புது தொழில் ஆரம்பிக்கலாம் என்று பலர் நினைத்திருப்பார்கள். 2018ஆம் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரம் செய்ய வாய்ப்பு அமையும், தொழில் வாய்ப்பு அமையும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: 2017 ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2018ஆம் ஆண்டிலாவது தொழில், வியாபாரம் செழிக்குமா? அல்லது நஷ்ட கணக்குதான் காட்ட வேண்டுமா என்று கலங்குபவர்களுக்கு ஆறுதல் சொல்லவே இந்த கட்டுரை.
தொழில்கிரகம் சனிபகவான் நெருப்பு ராசியான தனுசிலும், குரு பகவான் காற்று ராசியான துலாமிலும் அமர்ந்துள்ளனர். ராகு நீர் ராசியான கடகத்திலும், கேது நில ராசியான மகரத்திலும் அமர்ந்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு இறுதியில் பணமதிப்பு நீக்கம் பலரை கடன்காரர்களாக்கியது. 2017ல் ஜிஎஸ்டி அமல்படுத்தியது தொழில், வியாபாரிகள், வணிகர்களுக்கு சுணக்கத்தை ஏற்படுத்தியது. தொழில், வியாபாரத்தை விடலாம் என்று நினைப்பவர்களுக்கும், புதிய தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு 2018ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

சிந்தித்து செயல்படவும்
குரு சமசப்தம ஸ்தானமான 7ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்பதால் தொழில், வியாபார ரீதியாக ஏற்றமிகு பலன்களை அடைவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களை ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.

புதிய வாய்ப்புகள் உருவாகும்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் போன்ற யாவும் உண்டாகும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடும், தொழிலாளர்களால் வீண்பிரச்சினைகளும் ஏற்படும். என்றாலும் ராகு 3ல் சஞ்சரிப்பதாலும், 2018 அக்டோபரில் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலமும் குரு 7ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.

லாபம் பெருகும்
மிதுன ராசிக்கு குரு 5ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் வருவாய் சூடுபிடிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். மந்தநிலை விலகி லாபம் பெருகும். இந்த வருடம் முழுவதும் கூட்டுத்தொழில் ஸ்தானமான ராசிக்கு 7ஆம் வீட்டில் தொழில் கிரகமான சனி சஞ்சரிப்பதால் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது.

முன்னேற்றம் ஏற்படும்
சனிபகவான் சஞ்சாரத்தால் எதிரிகள் விலகி ஓடுவார்கள். புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வரும். புதிய இடங்களில் கிளைகள் நிறுவும் நோக்கங்களும் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கப் பெறும். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவுகள் உங்களின் வளர்ச்சிக்கு மேலும் உற்சாகத்தை தரும்.

வெளிநாட்டு தொடர்பு
சிம்ம ராசிக்காரர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு சற்று ஒத்துழைப்பாகச் செயல்படுவதால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். எந்த வித போட்டிகளையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும்.

பணவரவு சிறப்பு
தனகாரகன் குரு 2ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றாலும் ஆதாயங்களைப் பெற முடியும். முடிந்த வரை கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தொழிலாளர்களிடம் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

லாபம் அதிகரிக்கும்
புத்தாண்டில் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் பெருகும். கூட்டாளிகள் மிகவும் நட்புடன் செயல்பட்டு ஆதரவாக இருப்பார்கள். தொழிலாளர்களின் உதவிகள் மேலும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். அக்டோபர் முதல் குருபகவான் தன ஸ்தானமான 2ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் அமையும்.

சவாலே சமாளி
புத்தாண்டில் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. வேலையாட்களாலும் வீண் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கூட்டாளிகளிடமும் கலந்தாலோசித்து செயல்படுவது அபிவிருத்தியைப் பெருக்கிக் கொள்ள உதவும். கேதுவின் புண்ணியத்தால் எதையும் சமாளித்து போட்ட முதலீட்டினை எடுக்கும் அளவுக்கு லாபங்கள் கிடைக்கும்

கடன்கள் தீரும்
தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் போட்டி, பொறாமைகளால் சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாமல் சமாளித்து விடமுடியும். குரு 11ல் இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலமான பலன்கள் அமையும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வங்கிக் கடன்களும் தீரும்.

கூட்டாளிகளிடம் கவனம்
ஏழரை சனி காலமாகும். ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் சிறப்பாக அமையும். வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஏற்படவுள்ள குருபெயர்ச்சியின் மூலம் குரு லாப ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.

குதூகலம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி 11ஆம் இடத்தில் சஞ்சரிப்பதாலும் குரு பாக்கிய ஸ்தானமான 9ஆம் இடத்தில் சஞ்சரிப்பதாலும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். புதிய கிளைகளை உருவாக்கும் நோக்கம், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் போன்ற யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும், தொழிலாளர்களின் ஆதரவும்

வியாபாரிகளுக்கு லாபம்
குரு, சனி சாதகமற்று சஞ்சாரம் செய்வதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications