Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி மாத ராசி பலன்கள் 2020 - இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாண ராசி வந்திருச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறக்கப் போகும் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்குமே சந்தோஷமாக இருக்குமா? அதிர்ஷ்டம் தேடி வருமா? புதிய வேலை கிடைக்குமா? வருமானம் வருமா என்ற எதிர்பார்ப்புகள் பல ராசிக்காரர்களுக்கும் இருக்கும். ஜனவரி மாதம் மாதம் புத்தாண்டின் புதிய மாதம் இந்த முதல் மாதத்தில் சூரியன், சனி, புதன்,கேது, குரு ஆகிய ஐந்து கிரகங்கள் தனுசு ராசியில் கூடியுள்ளன. மகரம் ராசியில் சுக்கிரன் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

இந்த மாதம் சில கிரகங்கள் தனுசு ராசியில் இருந்து பிரிகின்றன. முதலில் சுக்கிரன் 9ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு மாறுகிறார். 13ஆம் தேதி புதன் தனுசுவில் இருந்து பிரிந்து மகரம் ராசிக்கு மாறுகிறார். 15ஆம் தேதி சூரியன் மகரம் ராசிக்கு செல்கிறார். மாத இறுதியில் அதாவது 24ஆம் தேதி தனுசு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரித்த சனி பகவான் மகரத்திற்கு மாறுகிறார். மாத பிற்பகுதியில் மகரம் ராசியில் 3 கிரகங்கள் கூட்டணி இணைகிறது.

இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் சஞ்சாரத்தினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, இடமாற்றம், பண வருமானம் போன்றவை ஜனவரி மாதத்தில் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சந்தோஷமான மாதம்

சந்தோஷமான மாதம்

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு 2020 ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டு பிறக்கும் போதே உங்க ராசியில் சூரியன், குரு, சனி, கேது, புதன் ஆகிய ஐந்து கிரகங்கள் உங்க ராசியில் கூடியுள்ளன. இரண்டாம் வீட்டில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய், ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கையால் உங்களுக்கு பல நன்மைகள் நடக்கப் போகின்றன. ஏழரை சனி அதுவும் ஜென்மசனியாக இருப்பதால் பல பிரச்சினைகளை சந்தித்து வந்த உங்களுக்கு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அற்புதமான பலன்களைத் தரப்போகிறது.
வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும், புதிய வேலைக்கு முயற்சி செய்தாலும் கிடைக்கும். சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். காரணம் உங்க ராசியில் உள்ள புதன், சூரியன் மாத பிற்பகுதியில் இடம் மாறி இரண்டாம் வீட்டிற்குப் போகின்றனர். 12க்கு அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பது விபரீத ராஜயோகம் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டினை செவ்வாய் பார்க்கிறார். திருமண பேச்சுவார்த்தையை தொடங்கலாம். உங்களை பாடாய் படுத்திய ஜென்ம சனி விலகி பாத சனியாக போகிறார். தலைக்கு மேல் தொங்கிய கத்தி விலகுகிறது. நம்பிக்கை அதிகரிக்கும். கடன்கள் படிப்படியாக அடையும் காலமாகும். பண வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சந்தோஷங்கள் அதிகமாகும் காலம் உங்களுக்கு ஆரம்பமாகிறது. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் தன்னம்பிக்கையோடு உங்க இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

ஜென்ம சனி

ஜென்ம சனி

விரைய சனியாக இருக்கிறது. இனி மகர ராசிக்கு சனி பகவான் ஜென்ம சனியாக அமரப்போகிறார். 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உங்களுக்கு ராசியில் சுக்கிரன் இருக்கிறார். விரைய ராசியில் ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. படிப்படியாக கிரகங்கள் நகர்ந்து உங்க ராசிக்கு மாறுகின்றனர். மாத பிற்பகுதியில் சூரியன் உங்க ராசிக்கு வந்து புதனோடு அமரப்போகிறார். உங்க ராசியில் இருந்த சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கு மாறுவது சிறப்பு. தொழில் லாபத்தில் வருமானம் அதிகரிக்கும். உங்க ராசிநாதன் சனி விரைய ஸ்தானத்தில் இருந்து உங்க ராசிக்கு வந்து அமரப்போகிறார். உங்க ராசிக்கு அதிபதி உங்க ராசியில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு பலம் அதிகரிக்கும். அதோடு லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பது சிறப்பு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். குரு விரைய ஸ்தானத்தில் இருந்தாலும் அவருடைய பார்வையால் உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் சுகங்களையும் அள்ளித்தரப்போகிறார். சுக்கிரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்வதால் திருமணப்பேச்சுவார்த்தையில் சுபமாக இருக்கும். புதனால் கல்வியில் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். காரணம் 13ஆம் தேதி முதல் புதன் உங்க ராசிக்குள் நுழைகிறார். சூரியன் 15ஆம் தேதி உங்க ராசிக்குள் வருவதால் அரசு துறையில் இருப்பவர்களுக்கு நன்மைகள் அதிகமாகும். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள் புதிய தொழில்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். நன்மைகள் அதிகம் நடைபெறும். 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது.

லாபம் அதிகரிக்கும்

லாபம் அதிகரிக்கும்

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்ப ராசியில் பிறக்கிறது. கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் இருக்கிறார். லாப ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், பஞ்சம ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் கூடியுள்ளன. மாத இறுதியில் சனி பெயர்சியாகி உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்க வருகிறார். ஏழரை சனியின் காலம் துவங்குகிறது. எந்த புதிய விசயத்தை தொடங்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பண்ணுங்க. புதிய இடம் மாறுவதற்கு முன்பாக நீங்க கவனமாக இருங்க. காதல் வலையில் விழுந்தவர்கள் கவனமாக இருங்க. லாப ஸ்தானத்தில் கிரகங்கள் இருப்பதால் தொழில் வருமானத்தில் லாபம் அதிகமாக இருக்கும். மாத பிற்பகுதியில் விரைய ஸ்தானத்தில் புதன், சூரியன், சனி உள்ளிட்ட கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. விரைய சனி காலமாக இருப்பதால் நீங்க பணத்தை முதலீடு பண்ணுங்க சொத்துக்களை வாங்குங்க. இரண்டாவது சுற்று சனி இருப்பவர்களுக்கு லாபமும் பலமும் அதிகமாகும். செவ்வாய் பத்தாம் வீட்டில் இருப்பதால் வேலை தொழிலில் உற்சாகமாக இருக்கும். உங்க தசாபுத்திக்கு எற்ப நன்மைகள் அதிகம் நடைபெறும்.

உற்சாகமான மாதம்

உற்சாகமான மாதம்

மீனம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் தொழில் ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களை நிறைய வாங்குவீர்கள். ராசி அதிபதி குரு பத்தாம் வீட்டில் சனி, கேது, சூரியன் புதனோடு இணைந்துள்ளார். புதிய வேலை கிடைக்கும். அரசு தேர்வுகள் எழுதினால் வெற்றிகள் கிடைக்கும். பத்தில குரு பதவியில மாற்றத்தை கொடுப்பார். சனி பத்தாம் வீட்டில் இருந்து லாபத்திற்கு வரப்போகிறார். நிறைய பண வருமானத்தை கொடுப்பார். மிகப்பெரிய பலனை கொடுக்கப்போகிறார். உடலில் மனதில் உற்சாகமாக இருப்பீர்கள். 2 மற்றும் 9ஆம் வீட்டிற்கு உரிய செவ்வாய் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பு. குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரன் லாப வீட்டில் இருந்து லாபத்தை தரப்போகிறார். 9ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் விரைய ஸ்தானத்திற்கு வருவதால் எச்சரிக்கையாக இருங்க. எதிர்பாலினரிடத்தில் எச்சரிக்கை தேவை. சூதாட்டத்தில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். சொந்த விருப்பு வெறுப்பு எதுவும் வேண்டாம். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மீக தரிசனம் அற்புதமாக அமையும் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் கிரகங்களின் பார்வை விழுவதால் புத்திர பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 11ஆம் வீட்டிற்கு புதன், சூரியன் கூட்டணி சேருவரு சிறப்பு. திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர்களுக்கு திருமணம் நடைபெறும். பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் சொத்துக்கள் சேர்க்கை அதிகமாகும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். நிறைய நல்ல விசயங்கள் நடக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். தடைகள் நீங்கும். நீங்க தொட்டது துலங்கும் மாதம் வெற்றிகள் தேடி வரும். சின்ன விசயத்திற்கு ஆசைப்பட்டு பெரிதாக மாட்டிக்க வேண்டாம் எச்சரிக்கை தேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+