Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி மாத ராசி பலன்கள் 2020 - மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்

2020ஆம் புத்தாண்டின் முதல் மாதம் புதிய மாதம் ஜனவரி மாதம், இந்த புத்தாண்டில் கோள்களின் சஞ்சாரம் கூட்டணி பார்வைகளின் படி மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறக்கப்போகும் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்குமே சந்தோஷமாக இருக்குமா? அதிர்ஷ்டம் தேடி வருமா? புதிய வேலை கிடைக்குமா? வருமானம் வருமா என்ற எதிர்பார்ப்புகள் பல ராசிக்காரர்களுக்கும் இருக்கும். ஜனவரி மாதம் மாதம் புத்தாண்டின் புதிய மாதம் இந்த முதல் மாதத்தில் சூரியன், சனி, புதன்,கேது, குரு ஆகிய ஐந்து கிரகங்கள் தனுசு ராசியில் கூடியுள்ளன. மகரம் ராசியில் சந்திரன் சுக்கிரன் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

இந்த மாதம் கிரகங்கள் சில தனுசு ராசியில் இருந்து பிரிகின்றன. முதலில் சுக்கிரன் 9ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு மாறுகிறார். 13ஆம் தேதி புதன் தனுசுவில் இருந்து பிரிந்து மகரம் ராசிக்கு மாறுகிறார். 15ஆம் தேதி சூரியன் மகரம் ராசிக்கு செல்கிறார். மாத இறுதியில் அதாவது 24ஆம் தேதி தனுசு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரித்த சனி பகவான் மகரத்திற்கு மாறுகிறார். மாத இறுதியில் மகரம் ராசியில் 3 கிரகங்கள் கூட்டணி இணைகிறது.

இந்த கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தினால் மேஷம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, இடமாற்றம், பண வருமானம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

அற்புதமான மாதம்

அற்புதமான மாதம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே நவகிரகங்களுமே உங்களுக்கு சாதகமாக உள்ளன. ஐந்து கிரகங்கள் பாக்ய ஸ்தானமான தனுசு ராசியில் இருக்க ராசி நாதன் செவ்வாய் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். தன காரகன் சுக்கிரன் ஜனவரி 9 ஆம் 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். தொழிலில் லாபம் பண வரவு அதிகமாகும். மனைவியின் மூலம் வருமானம் வரும்.

குரு பார்வை உற்சாகம்

குரு பார்வை உற்சாகம்

ஒன்பதில் குரு இருக்க அதிர்ஷ்டம் ஏற்படும் திருமண யோகம் வரும். குரு உங்க ராசியை பார்க்கிறார் பண வரவும் தொழில் லாபமும் ஏற்படும். செவ்வாய் எட்டில் இருப்பதால் வண்டி வாகனத்தில் போகும் போது எச்சரிக்கை விழிப்புணர்வு தேவை. சுக்கிரன் அதிர்ஷ்டத்தையும் தன விருத்தியையும் தன வரவையும் தரப்போகிறார். பயணங்களில் பலன் கிடைக்கும். இந்த மாதம் வருமானம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

பல தொழில் யோகம்

பல தொழில் யோகம்

புதன் 13ஆம் தேதி பாக்ய ஸ்தானத்தில் இருந்து பத்தாம் வீட்டிற்கு மாறுகிறார். பத்தில் புதன் இருந்தால் பல தொழில் புரியும் யோகம் வரும். புதிய வேலைகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிக்க அற்புதமான மாதம் படித்தது அப்படியே மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அற்புதம்

அரசியல்வாதிகளுக்கு அற்புதம்

ஜனவரி 15 மகரம் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வருகிறார். அரசு அரசியலில் உள்ளவர்களுக்கு பலன் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். இடமாற்றம் ஏற்படும். சனி பகவான் 24ஆம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார். மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமையப்போகிறது. அதிகாரம் மிக்க பதவி கிடைக்கும். சனி பத்தில் இருப்பதால் வயதானவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் இந்த மாதம் பெருமாள் கோவிலுக்கு போங்க உங்களுக்கு நன்மைகள் நடைபெறும்.

நன்மைகள் அதிகம்

நன்மைகள் அதிகம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பத்தாம் வீட்டிற்கு ஜனவரி 9ஆம் தேதி இடம் மாறுகிறார். மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். 13ஆம் தேதி புதன் இடம் மாறுகிறார். எட்டாம் வீட்டில் இருந்து சூரியனும் இடப்பெயர்ச்சியாகி ஒன்பதாம் வீட்டில் புதனோடு இணைகிறார். ஜனவரி 24ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு நகர்கிறார். உங்க ராசிக்கு விரைய ஸ்தான அதிபதி, களத்திர ஸ்தான அதிபதி செய்வாய் விருச்சிகம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து உங்க ராசியையும் குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார். கெட்ட காலம் எல்லாம் முடிந்து விட்டது.

திருமணம் கைகூடி வரும்

திருமணம் கைகூடி வரும்

தொழில், வருமானம், அதிர்ஷ்டம் நிறைந்த மாதம் 2020 ஜனவரி மாதம் காரணம் இரண்டாம் வீட்டில் உள்ள ராகுவை எட்டில் உள்ள குரு பார்க்கிறார். கேது எட்டாம் வீட்டில் குரு உடன் இணைந்து கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார். சொத்து சேர்க்கை ஏற்படும். காதல் உங்களுக்கு கை கூடும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை கிடைக்கும்.

சனியால் லாபம் வரும்

சனியால் லாபம் வரும்

இந்த மாதத்தில் இருந்து சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். வீடு இடம் மாற புதிய வீடு கட்ட வாஸ்து பண்ணுங்க மள மளவென 2020ல் கட்டி முடிப்பீங்க. 2020 ஆம் ஆண்டு ஆரம்பமே அமர்களமாக அமைகிறது சந்தோஷமாக கொண்டாடுங்க. இந்த மாதம் வெள்ளிக்கிழமைகளில் நீங்க அம்மன் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள் அதிகமாக சந்தன நிறத்தை பயன்படுத்துங்கள். நன்மைகள் நிறைந்த மாதம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+