ஜனவரி மாத ராசி பலன்கள் 2020 - சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு உற்சாகமான மாதம்
சென்னை: பிறக்கப் போகும் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்குமே சந்தோஷமாக இருக்குமா? அதிர்ஷ்டம் தேடி வருமா? புதிய வேலை கிடைக்குமா? வருமானம் வருமா என்ற எதிர்பார்ப்புகள் பல ராசிக்காரர்களுக்கும் இருக்கும். ஜனவரி மாதம் மாதம் புத்தாண்டின் புதிய மாதம் இந்த முதல் மாதத்தில் சூரியன், சனி, புதன்,கேது, குரு ஆகிய ஐந்து கிரகங்கள் தனுசு ராசியில் கூடியுள்ளன. மகரம் ராசியில் சுக்கிரன் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.
இந்த மாதம் கிரகங்கள் சில தனுசு ராசியில் இருந்து பிரிகின்றன. முதலில் சுக்கிரன் 9ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு மாறுகிறார். 13ஆம் தேதி புதன் தனுசுவில் இருந்து பிரிந்து மகரம் ராசிக்கு மாறுகிறார். 15ஆம் தேதி சூரியன் மகரம் ராசிக்கு செல்கிறார். மாத இறுதியில் அதாவது 24ஆம் தேதி தனுசு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரித்த சனி பகவான் மகரத்திற்கு மாறுகிறார். மாத பிற்பகுதியில் மகரம் ராசியில் 3 கிரகங்கள் கூட்டணி இணைகிறது.
இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் சஞ்சாரத்தினால் சிம்மம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, இடமாற்றம், பண வருமானம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கோடீஸ்வர யோகம்
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் பார்வை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நல்ல தசாபுத்திகள் நடந்தால் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது. சிம்ம ராசிக்காரர்கள் ரொம்ப அதிர்ஷ்ட சாலிகள் எப்படின்னு கேட்கறீங்களா ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசியை பார்ப்பது அற்புதமான அம்சம். ஐந்தாம் வீட்டில் குரு கேது கூட்டணி இருப்பது அற்புதம் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.

விபரீத ராஜயோகம்
மாத துவக்கத்தில் ஆறில் இருந்து சுக்கிரன் 7 ஆம் வீட்டிற்கு மாறுவது சிறப்பு. சுக்கிரன் உங்க தொழில் ஸ்தான அதிபதி, அவரது பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. குரு சுக்கிரன் பார்வை ஒரே நேரத்தில் கிடைப்பது சிறப்பு. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி ஆறாம் வீட்டிற்கு வரப்போகிறார். ஆறுக்கு உடைய சனி பகவான் மாத இறுதியில் ஆறாம் வீட்டில் அமர்வது விபரீத ராஜயோகம். சுக்கிரன் பார்வை சஞ்சாரம் வேலை, தொழிலில் உற்சாகத்தை தருவார். பயணங்களுக்கு சந்தோஷமான மாதம்

சந்தோஷமான ஜனவரி
செவ்வாய் பகவான் உங்க தளபதி 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பது. வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வீடு, மனை வாங்கலாம். மாணவர்களுக்கு அற்புதமான அம்சம் படிக்க இருந்த தடைகள் நீங்கும். தை பிறந்தால் வழி பிறக்கும். காதல் இனிக்கும் திருமணம் கை கூடி வரும். பிசினஸ் செழிக்கும் புதிய தொழில் தொடங்கலாம். 13ஆம் தேதி புதன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டிற்கும் 15ஆம் தேதி சூரியன் ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார். இது கொஞ்சம் சின்ன தடைகளை தரலாம். 2020 ஜனவரி மாதம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் சந்தோஷ நிலைகள் உருவாகும்.

நிம்மதி பெருமூச்சு
புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. புதன் உங்க ராசி நாதன் மட்டுமே அவரே பத்தாம் வீடான தொழில் ஸ்தானாதிபதியும் புதன் தான். 13ஆம் தேதி புதன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு மாறுவது சிறப்பு. கூடவே பிற்பகுதியில் சூரியன் பஞ்சம ஸ்தானத்தில் இணைகிறார். இந்த மாதம் இறுதியில் சனிப்பெயர்ச்சி வருகிறது. அர்த்தாஷ்டம சனி முடிந்து சனி ஐந்தாம் வீட்டிற்கு மாறுவது சிறப்பு. கஷ்டங்கள் நீங்கி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். குருவும் சுக ஸ்தானத்தில் இருக்கிறார். தடைகள் நீங்கும், இதுநாள் வரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பயணம் அதிகமாகும்
சுக்கிரன் 9ஆம் தேதி முதல் ஐந்தாம் வீட்டில் இருந்து ஆறாம் வீட்டிற்கு செல்வதால் சுப செலவுகள் அதிகரிக்கும். வீட்டை அலங்கரிக்கும் பொருட்களை வாங்கலாம். குரு கேது உடன் இணைந்து பண வரவை தருவார். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகம். தொழில் ரீதியான பயணம் செய்வீர்கள். வெளிநாட்டிற்கு படிக்கவோ, வேலை செய்யவோ போகலாம். அதற்கான முயற்சிகளை இந்த மாதம் தொடங்கலாம். செவ்வாய் மூன்றாம் வீட்டில் அமர்ந்து தைரியத்தையும் முயற்சிகளில் வெற்றியையும் தருவார். திருமணத்திற்கு ஜனவரி மாதம் ஏற்றதல்ல தை முடிந்து மாசியில் ஆரம்பிக்கலாம். மொத்தத்தில் ஜனவரி மாதம் உற்சாகம் நிறைந்த மாதமாக ஜனவரி மாதம் அமைகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications