Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி மாத ராசி பலன்கள் 2020 - துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான மாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறக்கப் போகும் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்குமே சந்தோஷமாக இருக்குமா? அதிர்ஷ்டம் தேடி வருமா? புதிய வேலை கிடைக்குமா? வருமானம் வருமா என்ற எதிர்பார்ப்புகள் பல ராசிக்காரர்களுக்கும் இருக்கும். ஜனவரி மாதம் மாதம் புத்தாண்டின் புதிய மாதம் இந்த முதல் மாதத்தில் சூரியன், சனி, புதன்,கேது, குரு ஆகிய ஐந்து கிரகங்கள் தனுசு ராசியில் கூடியுள்ளன. மகரம் ராசியில் சுக்கிரன் மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

இந்த மாதம் சில கிரகங்கள் தனுசு ராசியில் இருந்து பிரிகின்றன. முதலில் சுக்கிரன் 9ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு மாறுகிறார். 13ஆம் தேதி புதன் தனுசுவில் இருந்து பிரிந்து மகரம் ராசிக்கு மாறுகிறார். 15ஆம் தேதி சூரியன் மகரம் ராசிக்கு செல்கிறார். மாத இறுதியில் அதாவது 24ஆம் தேதி தனுசு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரித்த சனி பகவான் மகரத்திற்கு மாறுகிறார். மாத பிற்பகுதியில் மகரம் ராசியில் 3 கிரகங்கள் கூட்டணி இணைகிறது.

இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் சஞ்சாரத்தினால் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை, இடமாற்றம், பண வருமானம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

பத்திரமாக இருங்க

பத்திரமாக இருங்க

துலாம் ராசிக்காரர்களுக்கு கோள்கள் சாதகமாக இருக்கிறது. குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகம், குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். ரொம்ப கோபமாக பேசாதீங்க. மூன்றாம் வீட்டில் குரு, புதன் சஞ்சரிப்பதால் பெயர் புகழ் கிடைக்கும். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். அதே நேரத்தில் பாப கிரகங்களின் சஞ்சாரம் மூன்றாம் வீட்டில் உள்ளதால் உங்களிடம் உள்ள பொருட்களை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளுங்கள் திருடு போக வாய்ப்பு இருக்கிறது. நிறைய பொருட்கள் வாங்க நினைப்பீங்க தரமானதாக பார்த்து வாங்குங்க. இடம் வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை பார்த்து வாங்குங்க.

சந்தோஷம் அதிகமாகும்

சந்தோஷம் அதிகமாகும்

சுப விரைய செலவுகள் அதிகமாக இருக்கும். ராசி அதிபதி சுக்கிரன் முதல் சில நாட்கள் சுக ஸ்தானத்தில் இருக்கிறார். சுக்கிரன் ஜனவரி 9ஆம் தேதிக்கு மேல் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவது உங்களுக்கு நல்லது அதிகம் நடக்கும். வீடு பராமரிப்பு வேலைகளை செய்வீர்கள். செவ்வாய் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இரண்டுக்கு உடையவன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல அம்சம். அதே நேரம் நெருப்பு தொடர்பான காரியங்களில் கவனமாக இருக்கவும். இந்த மாதம் முழுங்க உங்க குடும்பம் சந்தோஷமாக இருக்கும்.

அர்த்தாஷ்டம சனி

அர்த்தாஷ்டம சனி

மூன்றாம் வீட்டில் சனி, கேது, குரு,புதன்,சூரியன் ஆகிய ஐந்து கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஞாபக மறதி அதிகமாக இருக்கும். கேதுவும் சனியும் இணைந்து சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். விலை உயர்ந்த நகைகளை போட்டுக்கொண்டு வெளியே போக வேண்டாம். பணத்தை அதிகமாக பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக்கொண்ட சுற்ற வேண்டாம். மாத இறுதியில் சனி நகர்ந்து நான்காம் வீட்டிற்கு போகிறார். அர்த்தாஷ்டம சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

குரு சொந்த வீட்டில் இருந்தாலும் சனி கேது சேர்க்கை அவரை அமைதியாக இருக்க வைத்திருக்கிறது. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. கடன் கிடைக்கும் ஆனா வாங்காதீங்க. திருமணம் பற்றி பேசலாம். திருமண தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளைப் பற்றி பேசலாம். பணவரவு அதிகமாக இருக்கும். தொழிலில் எந்த பாதிப்பும் இல்லை. வெளிநாடு போக யோகம் வரும். மாணவர்களுக்கு அற்புதமான மாதம் உற்சாகமாக தேர்வுகளை எதிர்கொள்வீர்கள். சூரியன் நான்காம் வீட்டிற்கு நகர்ந்து சுக்கிரன் உடன் சஞ்சரிக்கிறார். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு நன்மைகளும், தீமைகளும் கலந்த மாதமாக உள்ளது.

ஏழரை சனி முடியுது

ஏழரை சனி முடியுது

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடியப்போகுது. அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். கடந்த ஏழரை ஆண்டுகாலமாக பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது. ஜனவரி இறுதியில் சனி பெயர்ச்சி நடக்குது. இதனால் உங்களை பிடித்திருந்த கஷ்ட காலம் முடிவிற்கு வருகிறது. கொடுத்த பலன் திரும்ப வரும், இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தில் குரு நல்ல வாக்கு வன்மை கிடைக்கும்.

சந்தோஷ சம்பவங்கள்

சந்தோஷ சம்பவங்கள்

குருவினால் தன வருமானம் கிடைக்கும். தனுசு ராசியில் இருந்து புதன் இடமாற்றம் அடைகிறார். இது முயற்சியில் வெற்றி கிடைக்கும். சூரியனும் மூன்றாம் வீட்டிற்கு மாறுவது சிறப்பு. கூடாவே சனியும் பின் தொடர்ந்து செல்கிறார். நல்ல வாய்ப்புகள் கதவை தட்டப்போகிறது. இதுநாள் வரை உங்களை விட்டு விலகிப் போனவர்கள் இனி தேடி வருவார்கள். உங்க திறமைக்கு மதிப்பு கிடைக்கும். ஆதரவு அதிகரிக்கும். சுபமான பேச்சுக்கள் நடைபெறும். சொத்துக்கள் வாங்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அற்புதமான ஜனவரி

அற்புதமான ஜனவரி

சனி பகவான் சகாயம் செய்வார். வெளிநாடு செல்லும் யோகம் வரும். இனி நீங்க எடுக்கிற காரியம் எல்லாம் ஜெயமாகும். காரணம் உங்க ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்ந்து தைரியத்தை அதிகரிக்கச் செய்வார். 2020ஆம் ஆண்டு ஆரம்பமே அமர்களமாக இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் நடைபெறும். மொத்தத்தில் ஜனவரி மாதம் அற்புதமான ஆரம்பமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு அமைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+