Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2020 புத்தாண்டில் தனுசு முதல் மீனம் வரை 4 ராசிக்காரர்களும் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க

நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே அனைவரும் ஆரோக்கியம் முக்கியமானது. உடல் ஆரோக்கியம் எல்லோருக்கும் ரொம்ப அவசியமானது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. இந்த புத்தாண்டில் நமது ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் நோய் நொடியில்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழவே அனைவரும் ஆரோக்கியம் முக்கியமானது. உடல் ஆரோக்கியம் எல்லோருக்கும் ரொம்ப அவசியமானது. 2020ஆம் புத்தாண்டில் அதிக வருமானம் வருவது பற்றி யோசித்தாலும் உடல் ஆரோக்கியம் பற்றியும் அதிகம் யோசிப்பார்கள். இறைவனிடம் வேண்டுவதே நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். தனுசு முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டில் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ஒருவரின் ஆரோக்கியத்தினை கிரகங்களின் சஞ்சாரமும் தீர்மானிக்கின்றன. சூரியன்,சனி, புதன், குரு, சுக்கிரன், செவ்வாய், ராகு கேது சில நேரங்களில் சந்திரன் கூட சாதகமில்லாத நிலையில் இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். பெற்றோர்கள், வயது மூத்தவர்களின் ஆரோக்கியத்தையும் கிரகங்கள் தீர்மானிக்கின்றன. குரு உடன் சேரும் கிரகங்கள், குருவின் பார்வையும் நோய்களை நீக்குகின்றன. சனியின் சஞ்சாரமும் ஒருவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

ஏழரை சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி காலங்களிலும் ஒருவருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆறாம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் காலத்திலும் குருவின் பார்வை ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழும் போதும் ஒருவரின் உடலில் உள்ள நோய்கள் வெளிப்படும். இந்த 2020ஆம் ஆண்டில் குரு, சனியின் சஞ்சாரம் பார்வைகளினால் தனுசு முதல் மீனம் வரையிலான நான்கு ராசிக்காரர்களின் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் ஏழரைச்சனியின் பிடியில் சிக்கியிருக்கிறீர்கள். ஜென்ம சனி முடிந்து இனி பாத சனி ஆரம்பமாகப்போகிறது. 2020ஆம் ஆண்டு முழுக்க நீங்க ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க காரணம் குரு உங்க ராசி நாதன் உங்க ராசியிலேயே சஞ்சரிக்கிறார். வருட ஆரம்பத்தில் சனி உங்க ராசியில் இருந்து இடம் மாறுகிறார். இதுவே பெரிய ரிலீஃப் காரணம் தலைமேல் இருந்த பாரம் இறங்கியது போல இருக்கும். ஜென்ம கேது இடம்மாறுகிறார். அதே போல இறுதியில் ஜென்ம குருவின் இடமாற்றமும் உங்களுக்கு நன்மையைத் தரும். சில நேரங்களில் பதற்றமாகவும் அதனால் மன அழுத்தமாகவும் உணர்வீர்கள். இதனால் கோபமும் வரும். உங்க சக்தியை நீங்க இழக்க வேண்டாம். உங்க சக்தியை சேமியுங்கள் அப்போதுதான் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருக்க முடியும். நேர்மறையான எண்ணங்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். உணவுப்பழக்கத்தில் கவனமாக இருங்க. வேலை வேலை என்று அலையும் உங்களுக்கு ஓய்வு அவசியம் இல்லாவிட்டால் நரம்பு பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை.

மகரம்

மகரம்

சனிபகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே உங்களுக்கு 2020ஆம் ஆண்டு அற்புதமாக இருக்கும். உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது ஆனாலும் ஏதாவது நோய் இருப்பது போலவே ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க. உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அதிக வேலை உங்களை சோர்வை ஏற்படுத்தும். விரைய ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் அதிக செலவுகளைத் தருவார். சோம்பேறியாக இருக்காதீங்க அதுவே உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஜென்ம சனிபகவான் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சில சங்கடங்களைத் தருவார் குருவின் பார்வை உங்க ராசிக்கு ஆறாவது வீட்டின் மீது விழுவதால் உங்களின் உடம்பிற்குள் மறைந்திருந்த நோய்கள் வெளிப்பட்டு பின்னர் குணமாகும். நீங்க ரொம்ப பலவீனமாக இருப்பது போல இருந்தாலும் உங்களுக்குள் இருக்கும் நேர்மறை எண்ணங்கள் உங்களை உற்சாகப்படுத்தும். உணவில் கவனமாக இருங்க வயிறு பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. செப்டம்பர் மாதம் விரைய ஸ்தானத்தில் இருந்த கேது லாப ஸ்தானத்திற்கு நகரும் காலத்தில் நன்மைகள் அதிகமாகும். உடலில் சுறுசுறுப்பும் ஏற்படும்.

கும்பம்

கும்பம்

சனிபகவானை ராசி நாதனகாக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே உங்களுக்கு 2020ஆம் ஆண்டு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த ஆண்டாக அமைகிறது. சனி உங்களுக்கு ஏழரை சனியாக அமரும் காலத்தில் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். வேலைப்பளுவினால் உறக்கமின்மை, கண் கோளாறுகள் ஏற்படும். சரியான நேரத்தில் சரியாக சாப்பிடுங்கள். மூச்சுப்பயிற்சி செய்யுங்கள் மூச்சுக்கோளறுகள், சளி தொந்தரவுகள் நீங்கும். இரவு நேரங்களில் காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம் தவிர்த்து விடுங்கள். வறுத்த கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். மன அழுத்தத்தை தவிர்த்து விடுங்கள். தினசரி சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கும். கண் பிரச்சினைகள் நீங்கும். ஆரோக்கியம் அதிகமாகும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே 2020ஆம் ஆண்டு உங்களுக்கு ஆரோக்கியம் நிறைந்த அற்புதமான ஆண்டாக அமைகிறது. உங்களின் பிரச்சினைகள் குறைந்து போவதால் மன அழுத்தமும் குறையும். கடந்த காலத்தில் பெரிய நோய்கள் இருப்பது போல சங்கடப்பட்டுக்கொண்டு இருந்தீர்கள். இந்த நோய்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. வேலைச்சுமை, ஓய்வில்லாத பிசினஸ் உங்களுக்கு சோர்வை அதிகமாக்கும். பருவநிலை மாற்றத்தினால் உங்களுக்கு சளித்தொந்தரவுகள் அதிகமாகும். அவ்வப்போது கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். சனியின் சஞ்சாரமும், குருவின் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. வருட மத்தியில் நீங்க அசைவ உணவுகளை தவிர்த்து விடுங்கள் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். விஷ்ணு சகஸ்ராநாமத்தை ஓதுங்கள் மகா மிருத்யூஞ்சய மந்திரத்தை சொல்லுங்க நோய் பயம் நீங்கும் வருடம் முழுவதும் உற்சாகமாக இருப்பீங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+