2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்: மேஷம் ராசிக்கு அற்புதம் அபாரம்
2020ஆம் புத்தாண்டு மேஷம் ராசிக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் அபாரமாக அமைந்துள்ளது. நல்ல விசயங்கள் நிறைய நடக்கும்.
சென்னை: 2020 புத்தாண்டு பிறக்கும் போதே கிரகங்கள் கும்பத்தில் சந்திரன், மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசு லக்னம் லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. ஜனவரி மாத இறுதியில் சனி பெயர்ச்சியாகி மகரத்திற்கு நகர்கிறார். தர்ம ஸ்தானத்தில் குரு கேது கர்ம ஸ்தானத்தில் சனி முயற்சி ஸ்தானத்தில் ராகு என கிரகங்களின் அற்புதமான சஞ்சாரத்தினால் மேஷம் ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் ஆண்டாக அமைந்துள்ளது.
செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் புத்தாண்டில் குரு, சனி, ராகு கேது கிரகங்களின் சஞ்சாரத்தினால் உத்தியோகத்தில் உற்சாகம், திருமண வாழ்க்கையில் சந்தோஷம், வருமானத்தில் வளர்ச்சி என பல அற்புதங்கள் நிகழப்போகிறது.
கிரகங்களின் பார்வை பலத்தாலும் மாத கோள்களின் நகர்வு கூட்டணியாலும் மாற்றங்களுடன் கூடிய முன்னேற்றம் நடைபெறும். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து மேஷம் ராசிக்காரர்களுக்கு திருமணம், தொழில் வளர்ச்சி, குழந்தை பாக்கியம், புதிய வேலைகள், கல்வி எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

உற்சாகமான நிலை
ஆண்டின் துவக்கத்தில் குரு, சனி, கேது ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் மேஷம் ராசிக்காரர்களுக்கு அரசு வேலைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு வளர்ச்சியும் லாபமும் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம். காரணம் மாத இறுதியில் சனி பகவான் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். புதிய வேலைகள் கிடைக்கும் சனியின் பார்வையும் சாதகமான இடங்களில் விழுகிறது.

தொழிலில் முன்னேற்றம்
வேலையில் இருப்பவர்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும். தொழில் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும் காலம் வந்து விட்டது அஷ்டமத்து குருவினால் சில கஷ்டங்களை பட்டிருந்தாலும் அதை எல்லாம் கடந்து இனி வேகமாக உற்சாகமாக வளர்ச்சியை நோக்கி பயணிப்பீர்கள்.

திருமணம் குழந்தை பாக்கியம்
முயற்சி ஸ்தானத்தில் இருக்கும் ராகுவினால் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் நபர்களுக்கு கெட்டி மேளச்சத்தம் காதில் கேட்கும் நேரம் வந்தாச்சு. கன்னிபெண்களுக்கு மெட்டி போடும் நேரம் வந்தாச்சு. திருமணம் முடிந்த பெண்களுக்கு 2020ஆம் ஆண்டில் வளைகாப்பு நடைபெறும் காலம் கூடி வருது. பாக்ய குரு பலன்களை அள்ளிக்கொடுக்கப் போகிறார்.

பயணங்களினால் நன்மை
பாக்ய ஸ்தானம் தர்ம ஸ்தானத்தில் குரு கேது சேர்க்கையினால் செல்லாத கோவிலுக்கு எல்லாம் செல்வீர்கள். ஆன்மீக பயணம் அற்புதமாக இருக்கும். ஆன்மீக பயணத்தினால் பலன்கள் அதிகம் கிடைக்கும். மேஷ ராசிக்கார மாணவர்கள் படிப்புக்காக கடல் கடந்து செல்வார்கள். காரணம் கடகத்தில் விழும் சனியின் பார்வைதான். வேலைக்காக வெளிநாடு செல்லும் நேரமும் கூடி வருது.

முன்னேற்றம் அதிகரிக்கும்
சனிபகவான் பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமருவதால் உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். பணவருமானம் அதிகமாகி கடன்கள் அடைபடும். உங்கள் ராசிக்கு தர்ம கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவார்கள். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அப்பாயின்மெண்ட் ஆர்டர் வரும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு அதிக வருமானத்துடன் கூடிய வேலை கிடைக்கும். மொத்தத்தில் வரப்போகும் புத்தாண்டு மேஷம் ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. ஜோரா கைத்தட்டுங்க.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications