Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2020 ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் ஆகப்போகும் ராசிக்காரங்க நீங்கதான்

ஏழையாக பிறந்தாலும் மரணிக்கும் போது கோடீஸ்வரனாக இருக்க வேண்டும் என்பதே பலருக்கும் ஆசை. எல்லாருக்கும் கோடீஸ்வர யோகம் வாய்த்து விடாது. சிலருக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் கோடீஸ்வர யோகம் வரும். ஜாதக கட்ட

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2020 ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் ஆகப்போகும் ராசிக்காரங்க நீங்கதான்

    சென்னை: கோடீஸ்வரன் என்ற வார்த்தையை கேட்கும் போதே ஆசையா இருக்கா? மாத சம்பளத்தை வாங்கி மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கோமே,15 தேதியிலேயே வந்த பணம் செலவாகிப் போச்சு எப்போ அடுத்த 1ஆம் தேதி வரும் என்று எதிர்பார்ப்பது நடுத்தர வர்க்கம். தினசரி வேலை செய்து அன்றாடம் கூலி வாங்கி சமைத்து சாப்பிடுவது ஏழை வர்க்கம். கட்டுக்கட்டாக வீட்டில் பணத்தை அடுக்கி வைத்துக்கொண்டு கணக்கு வழக்கு பார்க்காமல் செலவு செய்வது கோடீஸ்வர வர்க்கம். ஏழையாக பிறந்தாலும் மரணமடையும் போதாவது கோடீஸ்வரனாக இருக்க வேண்டும் என்பதே பலருக்கும் ஆசை. எல்லாருக்கும் கோடீஸ்வர யோகம் வாய்த்து விடாது. சிலருக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் கோடீஸ்வர யோகம் வரும். அந்த அதிர்ஷ்டமும் ராஜயோகமும் 2020ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வாய்க்கப் போகிறது என்று பார்க்கலாம்.

    சனியின் பார்வை ராஜாவை பிச்சைகாரனாகவும், பிச்சைக்காரனை ராஜாவாகவும் மாற்றும் சக்தி வாய்ந்தது. அதனால்தான் சனியை போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனென்றால் சனிபகவான் தான் விரும்பியவர்களுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்குவார். 2020ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறது. அதே போல குரு பெயர்ச்சியும் ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தையும் அளிக்கப் போகிறது. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பார்கள். அதே போல கெடுதல் செய்யும் கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்தாலும் கோடி கோடியாக பணம் தேடி வரும்.

    கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்லலாம். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன் குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர். குரு-கேது சேர்க்கை, பார்வை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கும். குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர் இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ கர்ம பிராப்தத்திற்கு ஏற்ப மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார்.

    மேஷம்

    மேஷம்

    2020ஆம் ஆண்டில் மேஷ ராசிக்கு கிரகங்கள் அற்புதமான பலன்களை தரப்போகிறது. செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் கேது உடன் இணைந்து உங்க ராசியை பார்வையிடுகிறார். வராத பாக்கியங்கள் வந்து சேரும், எதிர்பாராத யோகங்களும் தேடி வரும். கடனாளியாக இருந்தவர்களுக்கு கடன் அடைபடும் அளவிற்கு பணம் வரும். சனிபகவான் உங்க ராசிக்கு நான்காம் வீடு ஏழாம் வீட்டினை பார்வையிடுவதால் சுகமான வாழ்க்கையும், லாபகரமான தொழிலும் அமையும். கோடி கோடியாக பணம் வரும். சனிபகவான் பத்தாம் வீட்டில் பத்துக்கு அதிபதி ஆட்சி பெற்று அமர்வதால் சசமஹாயோகமும் கிடைக்கப் போகிறது. குரு பார்வையும், சனி சஞ்சாரம் கூட்டணியும் அற்புதமான பலன்களை அள்ளித்தரப்போகிறது. உங்க பிறந்த ஜாதகமும் நல்ல யோகத்தோடு இருந்து தசாபுத்தியும் அற்புதமாக இருந்தால் நீங்க நிச்சயம் கோடீஸ்வரர்தான்.

    ரிஷபம்

    ரிஷபம்

    2020ஆம் ஆண்டு ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பட்ட கஷ்டமெல்லாம் பறந்ததோடப்போகிறது. காரணம் கிரகங்களின் பெயர்ச்சிதான். குரு பகவான் உங்க ராசிக்கு எப்பவுமே நல்லது செய்ய மாட்டார். அந்த குருபகவான் இப்போது உங்க ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைந்து போயிருக்கிறார். இங்கேதான் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோக அமைப்பு செயல்படப்போகிறது. அதோடு சனியும் பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இதனால் கோடிகளில் புரளப்போகிறீர்கள். தசாபுத்தியும் நீங்க பிறந்த ஜாதகமும் யோகமானதாக இருந்தால் நீங்க கோடீஸ்வரராகவும் அரசியலில் கொடி கட்டி பறப்பீர்கள். காரணம் குருபகவான் மகரம் ராசிக்கு நகரும் காலத்தில் உங்க ராசிக்கு குருவின் பார்வையும் கிடைக்கிறது.

    மிதுனம்

    மிதுனம்

    புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காங்களுக்கு சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். 2020ஆம் ஆண்டில் எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். உங்களுக்கு திடீர் பணவரவு வரும். குருவின் பார்வையும் உங்க ராசிக்கு கிடைக்கிறது. இதுநாள்வரை உங்க ராசியில் எதுவுமே செய்யாமல் அமைதியாக இருந்த ராகுவின் மீது குருவின் பார்வை விழுவதால் ராகு இனி அள்ளிக்கொடுப்பார். பணவரவு பக்காவாக இருக்கும். சேமித்து பத்திரப்படுத்துங்கள். உங்க தசாபுத்தியும், சுய ஜாதகமும் நன்றாக இருந்தால் பண வரவு அபரிமிதமாக இருக்கும்.

    சிம்மம்

    சிம்மம்

    சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த ஆண்டு அதி அற்புதமான பலன்களை தரப்போகிறது. சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். ஆறுக்கு அதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தையும் திடீர் பணவரவையும் தருவார். சனிபகவான் உங்கள் ராசி அதிபதிக்கு எதிரி எனவேதான் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகமாக அமையப்போகிறது. நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். சுகங்கள் தேடி வரும். செல்வமும் செல்வாக்கும் கூடும்.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாவது ராசி. எத்தனையோ கஷ்டப்பட்ட நீங்க இனி நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. 2020ஆம் ஆண்டில் வராத பணம் தேடி வரும் கொடுத்த கடன்கள் வசூலாகும். காரணம் குருபகவான் உங்க வீட்டில் இரண்டாம் வீட்டில் கேது உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். சனி பகவான் மூன்றாவது வீட்டில் மறைகிறார். இனி மன நிம்மதி ஏற்படும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். பணக்காரர்களாகும் யோகம் வந்து விட்டது. உங்களுக்கு தசாபுத்தியும் நல்லவிதமாக இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்தான்.

    கும்பம்

    கும்பம்

    சனி பகவான் உங்க ராசி நாதன். 12ஆம் வீட்டில் விரைய சனியாக அமர்கிறார். 12க்கு அதிபதி 12ஆம் வீட்டில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தையும் தருகிறார். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. 2020 ஆம் ஆண்டு முதல் கும்பம் ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். காரணம் சனி பகவான் உங்க ஆட்சிநாதன். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம் என்றாலும் உங்களுக்கு செலவுகளை விட வரவு அதிகமாகவே இருக்கும். குருபகவானும் லாப குருவாக உங்க லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளதால் தொடங்கும் தொழில்கள் எல்லாம் அற்புதமான லாபத்தை அள்ளிக்கொடுக்கும். உங்களுக்கு தற்போது சனி தசை நடந்தால் கேட்கவே வேண்டாம் நீங்க நிச்சயம் கோடீஸ்வரர்தான்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+