Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2020 புத்தாண்டில் சனி தரும் சச யோகம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு கிடைக்கப் போகுது

பஞ்ச மகா புருஷ யோகங்களில் முக்கியமான யோகம் சச யோகம். இந்த யோகத்தை வழங்குபவர் சனிபகவான். இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு ச

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020 ஆண்டு பிறக்கப் போகிறது. வரப்போகிற புத்தாண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதை கிரகங்களின் இடப்பெயர்ச்சியை வைத்து ஜோதிடர்கள் கணித்து பலன்கள் சொல்கின்றனர். கோச்சார பலன்கள் சொன்னாலும் சுய ஜாதகத்தில் தசாபுத்தியும் நன்றாக இருந்தால் மட்டுமே நல்ல பலன்கள் கிடைக்கும். சனிபகவான் வரும் 2020ஆம் ஆண்டில் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சென்று ஆட்சி பெற்று அமர்கிறார். இது சில ராசிக்காரர்களுக்கு சச யோகத்தை தரப்போகிறது. மேஷம், கடகம், துலாம் மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்திற்கு நிகரான சசயோகத்தை தரப்போகிறது.

சச யோகம் என்பது பஞ்சமகா புருஷ யோகத்தில் முக்கியமானது. சனிபகவான் சஞ்சாரத்தினால் இந்த சச யோகம் அமைகிறது. சசயோகம் அமைந்தால் அரசனுக்கு சமமான வாழ்வு சமுதாய அந்தஸ்து உண்டாகும் என பண்டை ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி பகவான் துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது. இந்த யோகம் கொண்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தாலும், தன்னை நம்பியவர்களுக்காக உண்மையுடன் செயல்படும் துணிச்சல் கொண்டவர்கள்

சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் மேஷ லக்கினத்திற்கு 7,10 ல் இருந்தால், ரிஷபத்திற்கு 10ல் இருந்தால்,கடகத்திற்கு 4,7 ல் இருந்தால், சிம்மத்திற்கு 7ல் இருந்தால் துலாத்திற்கு லக்கினம் மற்றும் 4ல் இருந்தால் விருச்சிகத்திற்கு 4ல் இருந்தால் கும்பத்திற்கு லக்கினத்தில் இருந்தால் அது சச யோகம். மகரத்திற்கு ராசிநாதன் 10ஆம் வீடான துலாம் வி இருந்தால் அது சச யோகம்.மகரத்திற்கு 10ல் தனித்து எவர் சேர்க்கை பார்வை பெறாமல் உச்சம் பெறும் சனி முழுமையான சச யோகம் தர போகிறது என்று உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த நிலையில் சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சனி சேர்ந்து அமராமல் இருந்தால் இந்த யோகம் நல்ல பலன்களை அளிக்கும். 2020ஆம் ஆண்டு நிகழப்போகும் சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சச யோக அமைப்பு உண்டாகிறது என்று பார்க்கலாம்.

சனி தரும் யோகம்

சனி தரும் யோகம்

சச யோகம் பெறுவது அரிதான யோகம். ஆயுள் காரகனான சனியால் சச யோகம் உண்டாகுவதால் ஜாதகர் நீண்ட ஆயுள் நிலையான செல்வம், செல்வாக்கு அடைவார். அது மட்டுமின்றி சமுதாயத்தில் கௌரவம் மிக்க பதவிகளை அடையும் உண்டாகும். இந்த யோகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்றால் சனி கேந்திரத்தில் தனித்து சுபர் அல்லது அசுபர் பார்வை சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும்.

யோகம் பெறுவது யார்

யோகம் பெறுவது யார்

சனிபகவான் 12 ராசிகளை கடக்க 30 ஆண்டுகாலம் ஆகிறது. இதில் துலாம், மகரம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்தில் பிறந்தால் மட்டுமே கிடைக்கும். சசயோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுளை தீர்க்கமாக கொடுத்து விடுவார் சனி பகவான். இந்த யோகம் மிக அரிது என்பதால் இது அரிய பஞ்ச மகா புருஷ யோகம் ஆகும். 2020 முதல் 2025 வரை பிறக்கும் குழந்தைகள் பலருக்கு பஞ்சமாக புருஷ யோகமான சசமகாயோகம் அமையப்போகிறது.

செல்வம் செல்வாக்கு பெருகும்

செல்வம் செல்வாக்கு பெருகும்

சச யோகத்தில் பிறந்தவர்கள் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, புகழ், நல்ல வேலையாட்கள், செல்வம் ஆகியவற்றை உடையவர்கள். மக்களிடையே உள்ள செல்வாக்கு காரணமாக ஒரு கிராமம் அல்லது நகரத்திற்கு தலைவராக பதவி வகித்து வருவார்கள். தன்னைப் பெற்ற தாயிடம் எப்போதும் பணிவாக நடந்து கொள்வார்கள்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் 2020 ஆண்டு ஜனவரி மாதம் முதல் மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இது மேஷம் ராசி மற்றும் லக்னத்திற்கு பத்தாவது இடமாகும். கேந்திரத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்வது அற்புதமான யோகமாகும். நல்ல வேலை கிடைக்கும். கோச்சார ரீதியாக சனி பகவான் நல்ல யோகத்தை தருவார். ஆளுமை தன்மையுடன் இருப்பார்கள். கடல் கடந்து செல்லும் யோகம் வரும். படிப்பு வேலைக்காக வெளிநாடு செல்வார்கள். பெண்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தொழில் தொடங்குவார்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மேஷ ராசி மற்றும் லக்னத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு அற்புதமான யோகமாக அமையப்போகிறது.

அரசியல்வாதிகளுக்கு அற்புதம்

அரசியல்வாதிகளுக்கு அற்புதம்

கடக ராசிக்காரர்களுக்கு சனி யோக காரகர் இல்லாவிட்டாலும் இந்த சனிப்பெயர்ச்சி சசமகா யோகத்தை தரப்போகிறது. கடகம் ராசி, கடக லக்னகாரர்களுக்கு சனி ஏழாம் வீட்டில் அமைவது கண்டச்சனி காலம் என்றாலும் சனி பகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போவதால் இது சசமகாயோகமாக அமைகிறது. நிர்வாகத்திறன், தலைமை பதவியை ஏற்க வைப்பார். கோச்சாரரீதியாக சனி வருபவர்களுக்கும் உயர்பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு தலைமைப் பதவி, அரசருக்கு ஒப்பான பதவியையும் யோகத்தையும் தேடித் தரும்.

பிரச்சினைகள் தீரும்

பிரச்சினைகள் தீரும்

சனிபகவான் துலாம் ராசி மற்றும் லக்னத்திற்கு நான்காம் வீட்டில் அமரப்போகிறார். இது சசமகாயோகம் அமைப்பாகும். சனிபகவானின் பத்தாவது பார்வை துலாம் ராசியின் மீது விழுகிறது. நினைத்தது நிறைவேறும். இதுநாள்வரை வம்பு வழக்குகள் என்று இருந்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி அற்புதமான பல நல்ல பலன்களைத் தரப்போகிறார். எதிரிகள், கடன்கள், நோய்கள் பிரச்சினைகள் தீரும். ஆட்சி பெற்ற சனியால் பலம் கூடும். வேலை, தொழிலில் முன்னேற்றமும் மாற்றங்களும் ஏற்படும். இந்த காலகட்டத்தில் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு யோக ஜாதகமாக அமையும். துலாம் ராசி, லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நீதித்துறையில் தலைமைப் பதவி தேடி வரும். மாணவர்கள் பலர் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல்மாணவராக தேர்ச்சியடையும் யோகம் வரும். வேலை, தொழில் அற்புதமாக அமையும்.

அதிர்ஷ்டம் அதிகரிக்கும்

அதிர்ஷ்டம் அதிகரிக்கும்


சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இது மகரம் ராசி மற்றும் மகரம் லக்னகாரர்களுக்கு அற்புதமான யோகத்தை தரப்போகிறார். நமக்குதான் ஜென்மசனியாச்சே எப்படி யோகமாகும் என்று கேட்கலாம். சனி உங்க ராசி அதிபதி லக்ன அதிபதி அவர் தனது சொந்த வீட்டிற்கு யோகத்தை தான் தருவார். சனிபகவானால் மகரம் ராசிக்காரர்களுக்கு தைரியம் அதிகரிக்கும், திருமணம் தடைகள் தாண்டி நடைபெறும்.
சனிபகவனால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை மாற்றம் ஏற்படும் புரமோசன் கிடைக்கும். இதுநாள் வரை வராமல் இருந்த பணம் வரும். அதிர்ஷ்டம் மூலம் பணம் வரும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும், புகழ் செல்வாக்கு கூடும். தொழில் பிசினஸ் நல்லா நடக்கும் லாபம் வரும். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடல் கடந்து செல்வீர்கள் வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு தொடர்பான ஆதரவும், அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு பதவிகள் தேடி வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+