Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2020ல் சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் தனுசு முதல் மீனம் வரை யாருக்கு என்ன பலன்கள்

2020ஆம் புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி குரு பெயர்ச்சி என மூன்று முக்கிய கிரகங்கள் உள்பட நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சி ஆகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020 ஆம் பிறக்கப்போகிறது. புத்தாண்டில் புதிய விசயங்களை பலரும் எதிர்நோக்கலாம். நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கலாம். 2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சனி நகர்கிறார். அதே போல ராகு கேது பெயர்ச்சியும் ஆண்டு இறுதியில் தனுசு ராசியில் இருந்து குரு பகவான் மகரம் ராசிக்கு சென்றடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் தனுசு முதல் மீனம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் தசாபுத்தியின்படி நன்மை தீமைகள் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நவ கிரகங்களில் சூரியன் மாதம் ஒருமுறையும் கூடவே சுக்கிரன், புதனும் நகர்கின்றன, செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு நகர்கிறது. சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்வது வழக்கம். 2017ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் 2020 ஆம் ஆண்டில் ஒன்பது கிரகங்களின் பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன முக்கியமாக சனி, ராகு கேது, குரு ஆகிய கிரகங்களின் நகர்வை வைத்து பலன்கள் கணிக்கப்படுகின்றன.

2020ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ஆண்டின் முதலில் ஜனவரி 24ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். மிதுனத்தில் உள்ள ராகு 18.09.2020 அன்று இரவு 8.45 மணி ரிஷப ராசிக்கு நகர்கிறார். தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் தனுசு ராசியில் இருக்கிறார். 2020 மார்ச் 30ஆம் தேதியன்று அதிசாரமாக மகரம் ராசிக்கு செல்கிறார். ஜூன் 30ஆம் தேதிவரை மகரம் ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு வரும் குருபகவான் நவம்பர் வரை தனுசு ராசியில் சஞ்சரிப்பார். நவம்பர் 20ஆம் தேதியன்று நேர்கதியில் மகரம் ராசிக்கு செல்கிறார். இதுநாள்வரை சனியால் சங்கடப்பட்டவர்கள், குருவால் குதூகலம் அடைந்தவர்கள், ராகு கேதுவினால் ரணப்பட்டவர்கள் 2020 ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை அடையலாம் என்று படித்து பாதகம் இருந்தால் அதற்கேற்ப பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.

தனுசு

தனுசு

ஜென்ம சனி, விரைய குரு என பல அடிகளை தாங்கி வந்த நீங்கள் இனி 2020ஆம் ஆண்டை சந்திக்கப் போகிறீர்கள். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை தனுசு ராசிக்கு ஜென்ம சனி விலகப்போகிறது. ஏழரை சனியில் ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டீர்கள். இனி பாத சனிதான். வேலை, கல்வி, குடும்பம் என பல பிரச்சினைகள் இருந்தன, இந்த ஆண்டு முதல் உங்களுக்கு பல நன்மைகள் நடக்கப் போகிறது. சோதனைகளை கடந்து விட்டீர்கள் இனி சாதனைகள்தான். வேலைகளை இழந்து தவித்தவர்களுக்கு புதிய நல்ல வேலை கிடைக்கும். குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். இருளில் தவித்தவர்களுக்கு புதிய வெளிச்ச கீற்று தென்படும். உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியில்லாமல் தவித்த உங்களுக்கு இனி நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு பேச்சுவார்த்தை நடக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் உங்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை நிச்சயம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு யோகம் அமையும். திருமணம் கை கூடி வரும், திருமணமாகி குழந்தைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குருபகவான் அதிசாரத்தில் உங்க குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் உங்களுக்கு நல்ல விசயங்கள் நிறைய நடக்கும் என்றாலும் பதற்றத்துடனேயே இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் மனதளவில் தைரியமாக இருங்க இனி உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் காரணம் ஜென்ம கேது மோட்ச ஸ்தானமான 12 ஆம் வீட்டிற்கும் ஆறாம் வீட்டிற்கும் ராகுவும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். தடைபட்ட சுபகாரியங்கள் நடக்கும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும். இனி உங்களை தவிர யாராலும் ஜெயிக்க முடியாது உலகம் உங்களுக்கானது என்று உறுதியாக நம்புவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். 2020ஆம் ஆண்டு உங்க வாழ்க்கையின் வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறப்போகிறீர்கள்.

மகரம்

மகரம்

2020ஆம் ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு மகத்துவமான ஆண்டாக அமையப்போகிறது. ஏழரை சனியில் விரைய சனி முடிந்து ஜென்ம சனியாக ஆரம்பிக்கிறார். குரு விரைய குருவாக நீடிக்கிறார். ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் குடும்பத்தில் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க. உடம்புல ஏதோ வியாதி இருக்குமோ என்று அச்சப்பட வைக்கும் பயப்பட வேண்டாம். உங்க தொழிலை கவனமாக பாத்துக்கங்க பெரிதாக எதையும் முதலீடு பண்ணாதீங்க. இருக்கிறதை விட்டுட்டு பறக்க ஆசைப்படாதீங்க நஷ்டம்தான் ஏற்படும். நல்ல தசாபுத்தி நடந்தா மட்டுமே துணிந்து இறங்குங்க. உங்க ராசிக்குள்ள இருக்கிற சனி உங்க தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். வயதானவங்க எச்சரிக்கையாக இருங்க. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கால கட்டத்தில் புதிய மாற்றங்கள் வரும். காரணம் விரைய ஸ்தானத்தில் உள்ள குரு உங்க ஜென்ம ராசிக்கு அதிசாரத்தில் வருவார். அதோட சுக்கிரன் இந்த கால கட்டத்தில் ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். காதல் மலரும் சிலருக்கு கல்யாணம் நடக்கும். பெண்களுக்கு நகை சேரும், வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீங்க. சிலர் வீடு வாங்குவீங்க. நம்பிக்கை நீரூற்று கண்ணில் தென்படும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் பண விசயத்தில கவனமாக இருங்க. யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்க. எவ்வளவு சம்பாதித்தாலும் செலவு நெருக்கடியை தரும். அந்த செலவை எப்படி சமாளிக்கப் போறோமோன்னு நினைப்பீங்க இதனால மன அழுத்தம் வரும். 12ஆம் வீடு மோட்ச ஸ்தானம் குரு அங்க இருப்பது நிம்மதியை கொடுக்கும். என்னதான் செலவு வந்தாலும் கடன் நெருக்கடி இருந்தாலும் படுத்தால் அக்கடா என்று தூக்கம் வரும். அதுவே உங்களுக்கு நிம்மதியை தரும். ராகு கேது பெயர்ச்சி நடக்குது அப்போது கேது லாப ஸ்தானத்துக்கும் ராகு ஐந்தாம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவது நிம்மதியாக இருக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை ரொம்ப நல்லது நடக்கும். உங்க முயற்சி வெற்றியடையும். நிதி நிலைமையில் இருந்த நெருக்கடி மாறும் பணம் பல விதமாக வரும் காரணம் இந்த கால கட்டத்தில்தான் குரு பெயர்ச்சியாக உங்க ராசிக்கு வந்து சனியோடு சேர்ந்து அமர்கிறார். குரு நீசமடைந்தாலும் ஆட்சி பெற்ற சனியோடு சேர்ந்து நீச பங்க ராஜயோக அமைப்போடு இருப்பது சிறப்பு. நிறைய நல்லது நடக்கும். மொத்தத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு நிம்மதியான ஆண்டாக இருக்கும். நிதானத்தோடு பொருமையோடு கடவுள் நம்பிக்கையோடு இருங்க அவர் கைவிட மாட்டார்.

கும்பம்

கும்பம்

2020ஆம் ஆண்டு கும்பம் ராசிக்காரர்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல ஆண்டு. உங்க ராசி நாதன் சனி லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். சனி உங்களுக்கு நண்பர். அவர் நல்லதுதான் செய்வார். அவர் விரைய சனியாக வந்து மகரம் ராசியில் அமர்கிறார். சனி பகவான் ஏழரை சனியாக அமர்ந்தாலும் நல்லது செய்வார். உங்களுக்கு 2020ஆம் ஆண்டு ஆரம்பமே அமர்களம்தான். தொட்டது எல்லாம் வெற்றிதான் காரணம் லாப ஸ்தானத்தில் சனி, குரு, கேது சஞ்சரிக்கின்றனர். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஏழரை சனி காலமாக இருந்தாலும் குருவை நம்பி பாரத்தை இறக்கி வைத்து விடலாம். நேர்மையும் நம்பிக்கையும் முக்கியம். குருவின் பார்வையால் திருமண யோகம், புத்திரபாக்கிய யோகம் வரப்போகிறது. புது வீடு கட்ட ஆரம்பிக்கலாம். இடம் வாங்குவீர்கள் சனி பகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீடான மீனத்தை பார்ப்பது சிறப்பு. ஏப்ரல் முதல் ஜூன் வரை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும் பொற்காலம்னே சொல்லலாம். நிறைய நல்லது நடக்கும். வெளிநாடு டூர் போவீங்க. மனசுக்கு பிடிச்ச மாதிரி நிறைய நல்ல காரியங்கள் நடக்கும் ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. சிங்கிள்ஸ் ஆ இருக்கவங்களுக்கு குடும்பத்தில மிங்கிள் ஆவீங்க. காதல் வரலாம். தினம் தினம் திருநாள்தான் உங்களுக்கு. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். வெளிநாடு பயணம் வேலை விசயமாக போவீங்க. படிக்கும் மாணவர்கள் வேலைக்காக வெளியூர் வெளிநாடு போவீங்க. திருமணங்கள் நடக்கும். பணம் தாராளமாக வரும். அபரிமிதமாக இருக்கும் செலவைப் பற்றி கவலைப்படவே மாட்டீங்க. உடல் ஆரோக்கியத்தில அவ்வப்போது அக்கறை காட்டுங்க. சாப்பாட்டு விசயத்தில சத்தானதா சாப்பிடுங்க நேரத்திற்கு சாப்பிடுங்க. ராகு கேது பெயர்ச்சியும் நல்லா இருக்கு கேது பத்தாம் வீட்டிற்கும் ராகு நான்காம் வீட்டிற்கும் வருவது சிறப்பு. உங்க தொழில் நல்லா இருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கணும். ஊதாரித்தனமாக செலவு பண்ணக்கூடாது. பணம் அதிகமாக இருந்தாலே செலவு பண்ண தோணும் எதையும் நம்பி ஆழமாக கால வைக்காதீங்க நஷ்டம்தான் வரும் எச்சரிக்கையாக இருக்கணும். பணத்தை பத்திரப்படுத்துங்க. மொத்தத்தில ஆலய தரிசனம் மனதை அலைபாய விடாது 2020ஆம் ஆண்டு ரொம்ப அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது.

மீனம்

மீனம்

2020ஆம் ஆண்டு மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான அதிசயங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. உங்க ராசி நாதன் குருவும் சனியும் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஜனவரி முதல் மார்ச் வரை கால கட்டத்தில் தொழிலில் அற்புதமாக இருக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு நிதி நெருக்கடிகள் தீரும். ஜனவரி இறுதியில் சனி பெயர்ச்சியாக லாப ஸ்தானத்திற்கு வருவது சிறப்பு. சொத்துக்கள் வாங்குவீங்க. வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். வேலையில் கவனமாக இருக்கணும். புரமோசன் வரலையேன்னு கவலைப்படாதீங்க நல்லது சீக்கிரம் நடக்கும். ஏப்ரல் முதல் ஜூன் வரை பண விசயத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் நடக்கும் காரணம் சுக்கிரன் மூன்றாம் வீட்டில் இருப்பது சிறப்பு. குரு அதிசாரத்தில் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது பண வருவாயை அதிகப்படுத்துவார். தொழில், வேலையில் சுறுசுறுப்பாக இருப்பீங்க. மன உறுதியோடு இருங்க தைரியமும் தன்னம்பிக்கையும் அவசியம் வேண்டும். நம்மால முடியுமான்னு சந்தேகம் வேண்டாம் நல்லதாகவே நடக்கும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் நிறைய நல்லதாகவே நடக்கும். வங்கி கடன் கிடைக்கும். தொழில் விசயங்களில் பணவரவு நன்றாக இருக்கும். குடும்பம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் மன ஆரோக்கியமும் நல்லா இருக்கும் நிம்மதியாக உறக்கம் வரும். பத்தாம் வீட்டிற்கு குரு திரும்ப வரும் போது பண விவகாரங்களின் கொஞ்சம் தொய்வு ஏற்படும். ராகு கேது பெயர்ச்சி ரொம்ப நல்லா இருக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் தொழில் வியாபாரம் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சியடையும். கேது ஒன்பதாம் வீட்டிலும் ராகு மூன்றாம் வீட்டிலும் இருப்பது சிறப்பு. இதே கால கட்டத்தில் குருவும் பெயர்ச்சியாகி லாப ஸ்தானத்திற்கு வந்து விடுவார் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்க காத்திருக்கிறது. மீன ராசிக்காரர்கள் 2020ஆம் ஆண்டை ரொம்ப சந்தோஷத்தோடு வரவேற்க தயாராகுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+