Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2020ல் சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் கடகம் வரை யாருக்கு என்ன பலன்கள்

2020ஆம் புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி குரு பெயர்ச்சி என மூன்று முக்கிய கிரகங்கள் உள்பட நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சி ஆகின்றன.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sani Peyarchi 2020 | Mesham | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- மேஷ ராசிக்கு பலன்கள் எப்படி ?

    சென்னை: 2020 ஆம் பிறக்கப்போகிறது. புத்தாண்டில் புதிய விசயங்களை பலரும் எதிர்நோக்கலாம். நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கலாம். 2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சனி நகர்கிறார்.

    அதே போல ராகு கேது பெயர்ச்சியும் ஆண்டு இறுதியில் தனுசு ராசியில் இருந்து குரு பகவான் மகரம் ராசிக்கு சென்றடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் தசாபுத்தியின்படி நன்மை தீமைகள் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    நவ கிரகங்களில் சூரியன் மாதம் ஒருமுறையும் கூடவே சுக்கிரன், புதனும் நகர்கின்றன, செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு நகர்கிறது. சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்வது வழக்கம். 2017ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் 2020 ஆம் ஆண்டில் ஒன்பது கிரகங்களின் பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன முக்கியமாக சனி, ராகு கேது, குரு ஆகிய கிரகங்களின் நகர்வை வைத்து பலன்கள் கணிக்கப்படுகின்றன.

    2020ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ஆண்டின் முதலில் ஜனவரி 24ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். மிதுனத்தில் உள்ள ராகு 18.09.2020 அன்று இரவு 8.45 மணி ரிஷப ராசிக்கு நகர்கிறார். தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் தனுசு ராசியில் இருக்கிறார். 2020 மார்ச் 30ஆம் தேதியன்று அதிசாரமாக மகரம் ராசிக்கு செல்கிறார்.

    ஜூன் 30ஆம் தேதிவரை மகரம் ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு வரும் குருபகவான் நவம்பர் வரை தனுசு ராசியில் சஞ்சரிப்பார். நவம்பர் 20ஆம் தேதியன்று நேர்கதியில் மகரம் ராசிக்கு செல்கிறார். இதுநாள்வரை சனியால் சங்கடப்பட்டவர்கள், குருவால் குதூகலம் அடைந்தவர்கள், ராகு கேதுவினால் ரணப்பட்டவர்கள் 2020 ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை அடையலாம் என்று படித்து பாதகம் இருந்தால் அதற்கேற்ப பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.

    மேஷம்

    மேஷம்

    2020ஆம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நிறைய நடக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருக்கும். நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் நம்முடைய கைக்கு வரும்.

    வேலை, தொழில் அற்புதமாக அமையும். பொறுப்புகள் கூடும் தன்னம்பிக்கை தைரியம் கூடும். ஊதிய உயர்வும் அதிகமாகும். ஏப்ரல் முதல் ஜூன் வரை உங்க தொழிலில் ஒருவித உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். குரு அதிசாரமாக சஞ்சரித்து மகரம் ராசிக்கு வந்து சனியோடு பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பார்.

    வீடு, நிலம் வாங்க நினைப்பவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். படிக்கும் மாணவர்களுக்கு நன்மைகள் நிறைய நடக்கும் உயர்கல்வி யோகம் அமையும். வெளிநாட்டிற்கு போய் படிக்க நினைப்பவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். ஜூலை முதல் செப்டம்பர் வரை உங்க வாழ்க்கையில நிறைய மாற்றங்கள் ஏற்படும்.

    பிரச்சினைகள் தீரும் காலம் இது. வரவேண்டிய பணம் கைக்கு வரும். சூரியனும் குருவும் உங்களுக்கு மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவார்கள். புகழ், உயர்வு, கல்வியில் மாற்றம், உடல் ஆரோக்கியத்தில் அற்புதமான மாற்றங்களை குரு ஏற்படுத்துவார். நீங்க நினைத்தது பலிக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் அற்புதங்கள் அதிகம் நடக்கும். குரு பகவான் தனுசு ராசியில் இருந்து பெயர்ச்சியாகி மகரத்திற்கு செல்கிறார்.

    பேச்சில் கவனமாக இருக்கணும். பண முதலீட்டில் கவனமாக இருக்கணும். வெளிநாடு போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கால கட்டத்தில் முயற்சி செய்யலாம். வருட முற்பகுதியை விட வருட பிற்பகுதியில் அற்புதமான யோகங்கள் நிறைந்த ஆண்டாக 2020ஆம் ஆண்டு அமைகிறது.

    ரிஷபம்

    ரிஷபம்

    சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே நீங்க பட்ட பாடுகளுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. 2020ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் முடிய பார்த்தால் உங்க கவலைகள் தீரும் பணவரவு அற்புதமாக இருக்கும். சனி பெயர்ச்சியாகி மகரம் ராசிக்கு நகர்ந்த பின்னர் நன்மைகள் அதிகம் நடக்கும் உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

    தன வரவு நன்றாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் வரும். தொழில் அற்புதமாக இருக்கும். முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடலில் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தாலும் அது சரியாகி விடும். ஏப்ரல் தொடங்கி ஜூலை மாதம் வரை உங்களுக்கு சுபிட்சமான கால கட்டம். காரணம் உங்க ராசி நாதன் சுக்கிரன் உங்க ராசிக்குள் இருக்கிறார்.

    கல்யாண களை கட்டும். சிலருக்கு காதல் திருமணம் கைகூடி வரும். படிக்கும் மாணவர்கள் வெளிநாடு போக யோகம் வரும். உயர்கல்வி யோகம் தேடி வருது. ஜூலை முதல் செப்டம்பர் வரை உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறாவிட்டாலும் உங்களுக்கு முந்தைய கால கட்டத்தில் கிடைத்த வருமானங்களை தக்கவைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கும்.

    நல்ல வீடு, மனை வாங்கலாம். புதிய கார் வாங்கலாம். பெண்கள் நகைகள் வாங்கலாம். வீட்டை அழகுபடுத்தலாம். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் ராகு கேது பெயர்ச்சி நடக்குது.

    ராகு உங்க ஜென்ம ராசியிலும் கேது களத்திர ஸ்தானத்திலும் வருகிறார், திருமணம் பற்றி யோசித்து பார்க்காதீங்க. பேசினாலும் தடைகள் வரலாம். இளைஞர்களுக்கு இந்த ஆண்டு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான வளர்ச்சி கிடைக்கப் போகிறது. நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது.

    மிதுனம்

    மிதுனம்

    2020ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரை ஆசிர்வதிக்கப்பட்ட மாதம். திருமணம் நிச்சயமாகும். குடும்பத்தில் நிறைய நல்ல விசயங்கள் நடைபெறும். நடுத்தர வயதில் இருப்பவங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. வெளிநாடு போக நினைப்பவங்களுக்கு நல்ல தகவல்கள் வரலாம். வாய்ப்புகள் கதவை தட்டும்போது பிடித்துக்கொள்ளுங்கள். ஆர்வத்தோட இருப்பீங்க. நல்ல நல்ல தகவல்கள் கிடைக்கும். ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை கொண்டாட்டங்கள் நிறைந்த கால கட்டம். சந்தோஷமாக இருப்பீங்க செலவுகள் அதிகமாகும் அத்தனையும் சுப விரைய செலவுகளாக இருக்கும். மகனுக்கு படிப்பு செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு நகைகள் வாங்குவீங்க. பெண் குழந்தைகளின் திருமணத்தை முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்று கையில் பணம் வரும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. எட்டில் சனி இருக்கும் போது பயணத்தில் கவனம், சொந்த காரங்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் திரும்ப வரவே வராது. மறந்து விட வேண்டியதுதான். ஜூலை முதல் செப்டம்பர் வரைக்கும் உங்களுக்கு பிரச்சினைகள் தீரும். நிறைய சுப செலவுகள் நடைபெறும், பணத்தை முதலீடு செய்வதற்கு திட்டமிடுங்க. கடன் வாங்க பேசுவீங்க. செலவுகள் வந்தாலும் கடன்கள் வாங்க கூடிய அளவிற்கு வருமானம் வரும். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சந்தோஷங்கள் அதிகமாகும் உங்க ராசியில் இருந்த ராகு விரைய ஸ்தானத்தில் நகர்கிறார். கேது ஆறாம் வீட்டிற்கு செல்கிறார். உங்க மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தோல் தொடர்பான நோய்கள் தீரும், சுவாசப்பிரச்சினைகள் தீரும். சுப விரைய செலவுகள் அதிகம் நடக்கும். சொத்து நகைகள் வாங்கலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பாக எதையும் யோசித்து பொறுமையாக நிதானமாக முடிவெடுக்கவும். 2020ஆம் ஆண்டு உங்களுக்கு நிறைய அதிர்ஷ்டங்களை தரும். சுபிட்சம் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

    கடகம்

    கடகம்

    கடகம் ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டு ஜனவரி மாதத்தில் உங்களுடைய குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் ஏற்படும். உங்களுக்காகவே பிறந்த புத்தாண்டாக அமைகிறது. பணவரவு உங்களுக்கு ரொம்ப அற்புதமாக இருக்கும்.

    தொட்டது துலங்கும். அதே நேரத்தில் சுப செலவுகளும் ஏற்படும் உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உடல் நலத்தில கவனமாக இருங்க. இதய பாதிப்பு உள்ளவங்க கவனிங்க. உங்க வேலையில் உங்களுக்கு மாற்றங்கள் ஏற்படலாம், இதனால நீங்க உற்சாகமடைவீர்கள். உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

    ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள காலகட்டத்தில் உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புது வீடு வாங்கலாம். தடைபட்டு நின்ற திருமணங்கள் கை கூடி வரும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். இதுவே உங்களை உற்சாகப்படுத்தும்.

    பணவரவு அதிகமாக இருக்கும். உயர்பதவி யோகம் தேடி வருகிறது. வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மருத்துவ ஆலோசனை அவசியம் எடுத்துக்கங்க. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் இறுதியில் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு அற்புதங்கள் நிகழும். குரு பகவான் ஆறாம் வீட்டில் இருப்பாதால் நிதி நெருக்கடி ஏற்படும்.

    அத்தியாவசிய செலவுகள் ஏற்படலாம். குடும்ப சூழ்நிலை நன்றாக இருந்தாலும் பிள்ளைகளை கவனிங்க. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் ராகு லாப ஸ்தானத்திலும் கேது ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிப்பது நன்றாக இருக்கும். குரு உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கும் மாறுவது சிறப்பு. வெளிநாடு போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முயற்சி பலிக்கும். இதுவரைக்கும் இருந்த உடல்நல பிரச்சினைகள் தீரும்.

    திருமணம் செய்வதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். 2020ஆம் ஆண்டு திருப்புமுனைகள் அதிகம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+