Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2020ல் சனி, குரு, ராகு கேது பெயர்ச்சியால் சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு என்ன பலன்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sani Peyarchi 2020 | Simha | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- சிம்ம ராசிக்கு பலன்கள் எப்படி ?

    சென்னை: 2020 ஆம் பிறக்கப்போகிறது. புத்தாண்டில் புதிய விசயங்களை பலரும் எதிர்நோக்கலாம். நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கலாம். 2020ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது. தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு சனி நகர்கிறார். அதே போல ராகு கேது பெயர்ச்சியும் ஆண்டு இறுதியில் தனுசு ராசியில் இருந்து குரு பகவான் மகரம் ராசிக்கு சென்றடைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் சிம்மம் முதல் விருச்சிகம் வரை உள்ள ராசிக்காரர்களுக்கும் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இது பொதுவான பலன்கள்தான் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் தசாபுத்தியின்படி நன்மை தீமைகள் நடைபெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    நவ கிரகங்களில் சூரியன் மாதம் ஒருமுறையும் கூடவே சுக்கிரன், புதனும் நகர்கின்றன, செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு நகர்கிறது. சந்திரன் இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்வது வழக்கம். 2017ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் 2020 ஆம் ஆண்டில் ஒன்பது கிரகங்களின் பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன முக்கியமாக சனி, ராகு கேது, குரு ஆகிய கிரகங்களின் நகர்வை வைத்து பலன்கள் கணிக்கப்படுகின்றன.

    2020ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து ஆண்டின் முதலில் ஜனவரி 24ஆம் தேதி மகரம் ராசிக்கு நகர்கிறார். மிதுனத்தில் உள்ள ராகு 18.09.2020 அன்று இரவு 8.45 மணி ரிஷப ராசிக்கு நகர்கிறார். தனுசு ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் தனுசு ராசியில் இருக்கிறார். 2020 மார்ச் 30ஆம் தேதியன்று அதிசாரமாக மகரம் ராசிக்கு செல்கிறார். ஜூன் 30ஆம் தேதிவரை மகரம் ராசியில் சஞ்சரிப்பார். பின்னர் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு வரும் குருபகவான் நவம்பர் வரை தனுசு ராசியில் சஞ்சரிப்பார். நவம்பர் 20ஆம் தேதியன்று நேர்கதியில் மகரம் ராசிக்கு செல்கிறார். இதுநாள்வரை சனியால் சங்கடப்பட்டவர்கள், குருவால் குதூகலம் அடைந்தவர்கள், ராகு கேதுவினால் ரணப்பட்டவர்கள் 2020 ஆம் ஆண்டில் என்னென்ன பலன்களை அடையலாம் என்று படித்து பாதகம் இருந்தால் அதற்கேற்ப பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.

    சிம்மம்

    சிம்மம்

    சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை நன்மைகள் அதிகம் நடக்கும். குரு ஐந்தாம் வீட்டில் இருந்து உங்க ராசியை பார்க்கிறார் நன்மைகள் அதிகம் நடக்கும் சனி ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆன பின்னர் அற்புதமான பலன்கள் நடக்கும் நன்மைகள் நடக்கும். திருமணம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் ஏற்படும். நிதி நிலைமை ரொம்ப நன்றாக இருக்கும். நம்முடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கணும். முதுகு வலி மூட்டுவலி தொந்தரவுகள் ஏற்படும் காரணம் சனி ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் நோய்கள் எட்டிப்பார்க்கும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய கொஞ்சம் சிக்கலான மாதம்தான் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். பிசினஸ்ல முதலீடு செய்ய வேண்டாம். சுப விசயங்களுக்கு கடன் கிடைக்கும். வீடு கட்ட லோன் வாங்கலாம். குடும்பத்தில் உற்சாகமாக இருக்கலாம். சந்தோஷம் அதிகமாகும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும் கலைத்துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வெற்றிகள் தேடி வரும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் குருவினால் உங்களுக்கு புகழ் கூடும். காரியங்களில் வெற்றி கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில் ராகு பத்தாம் வீட்டிற்கும் கேது நான்காம் வீட்டிற்கும் பெயர்ச்சி அடைவதால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலையில் உயர்வுகள் ஏற்படும் கலைத்துறை, ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை கால கட்டத்தில் குரு ஆறாம் வீட்டில் மறையப்போகிறார். சில சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். டிசம்பர் மாதத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் பணம் விசயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

    கன்னி

    கன்னி

    2020ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு குரு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அர்த்தாஷ்டம சனியால் தொழிலில் நிம்மதியின்மை இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில பிரச்சினை ஏற்பட்டது. இந்த சூழ்நிலைகள் 2020ஆம் ஆண்டில் மாற்றம் ஏற்படும். காரணம் அர்த்தாஷ்டம சனியில் மாற்றம் ஏற்படுகிறது. தொழிலில் லாபம் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். மாணவர்களுக்கு பிடித்த காலேஜில் படிக்க இடம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல நிலை ஏற்படும். ஏப்ரல் முதல் ஜூன் வரை உங்களுக்கு அதிர்ஷ்டம் கூடி வரப்போகிறது. காரணம் பாக்ய ஸ்தான அதிபதி சுக்கிரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பார். மனதில் தன்னம்பிக்கை தைரியம் கூடும். திருமணம் கை கூடி வரும் சிலருக்கு காதல் திருமணம் கை கூடி வரும் எதிர்பாராத பல நல்ல சம்பவங்கள் நடக்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நன்மைகள் அதிகம் நடக்கும். நிதானமாக இருங்க. செப்டம்பர் இறுதியில் ராகு கேது பெயர்ச்சி ஏற்பட்ட பின்னர் உங்க தொழிலில் ஒரு ஸ்திர தன்மை ஏற்படும். படிக்கும் மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைய நடக்கும். வெளிநாடு வாய்ப்புகள் வந்து வீட்டுக்கதவை தட்டும். வாழ்க்கை தரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய முடிவுகளை நிதானமாக செய்யுங்கள். அக்டோபர் முதல் டிசம்பர் வரை கால கட்டம் அற்புதமாக அமையப்போகிறது. குரு பகவான் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். திருமணம் கை கூடி வரும் புத்திர பாக்கியம் கிடைக்கும் பணவரவு தேடி வரும். மொத்தத்தில் இந்த கன்னி ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு பொற்காலமாக அமையும். உங்களுக்கு தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு போங்க வெள்ளிக்கிழமை தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்க. அற்புதமான ஆண்டாக 2020ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது.

    துலாம்

    துலாம்

    2020ஆம் ஆண்டு துலாம் ராசிக்கு குரு பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பணவரவு அதிகம் வந்தாலும் அதை சேமிக்க முடியாது. குரு பகவான் உங்க ராசிக்கு சில தடைகளை ஏற்படுத்துவர் அவரே உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைவது நன்மைதான். வெற்றிகரமான ஆண்டாகத்தான் தொடங்குகிறது. சனி பகவான் ஜனவரி மாதம் பெயர்ச்சியாகி உங்க ராசியை பார்வையிடுவது சிறப்பு. பண வரவு அதிகமாக இருக்கும். வேலையில் மாற்றம், உத்யோகத்தில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு யோகம் வரப்போகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரை சுக்கிரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எட்டாம் வீட்டில் அமர்ந்து சுக்கிரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டினை பார்க்கிறார். திருமணம் கை கூடி வரும். வாழ்க்கையில் சந்தோஷம் தேடி வரும். பணவரவு அதிகமாகவே இருக்கும். உல்லாச பயணம் செல்வீர்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கால கட்டத்தில் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். என்றாலும் சனி உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. ஜூலை முதல் செப்டம்பர் வரை உங்க ராசிக்கு நல்ல காலகட்டம், பண வரவு அபரிமிதாமாக இருக்கும். வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நன்மை செய்யும். அக்டோபர் முதல் டிசம்பர் கால கட்டத்தில் வேலையில் ஸ்திர தன்மை ஏற்படும். வீடு வாங்கி குடியேற வாய்ப்பு உள்ளது. இரண்டாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் ராகு இருப்பதால் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். சம்பாதித்த பணத்தை எல்லாம் பத்திரப்படுத்துங்க. பேச்சுக்களில் கவனமாக இருங்க குறிப்பாக சொந்தக்காரங்க கிட்ட யோசிச்சு பேசுங்க. குடும்பத்தில் கவனமாக இருங்க. எதையும் பேசும் முன்பு யோசித்து பேசுங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. மொத்தத்தில் துலாம் ராசிக்கு 2020ஆம் ஆண்டு சுபிட்சங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2020ஆம் ஆண்டு பொற்காலமான ஆண்டாக அமையப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த பல ஆண்டுகாலமாகவே சனிபகவானும் குரு பகவானும் உங்க வாழ்க்கையை ஒரு வழி செய்து விட்டார்கள். இனி அப்படி இல்லை குரு பகவான் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஜனவரி மாதம் ஏழரை சனி முடிந்து மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்திற்கு சனி மாறுகிறார். உங்க வாழ்க்கையில ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். ஜனவரி முதல் மார்ச் வரை பணவரவு அபரிமிதமாக வரும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய அதிசயங்கள் அற்புதங்கள் நிகழும். உங்க தசாபுத்தி நன்றாக இருந்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏப்ரல் முதல் ஜூன் வரை உங்களுக்கு சந்தோஷங்களும் உற்சாகமும் நிறைந்த ஆண்டாக அமைகிறது. வானத்தில் பறப்பது போல உணர்வீர்கள். படிக்கும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணம் கை கூடி வரும். சிலருக்கு காதல் பிறக்கும் இந்த கால கட்டத்தில் சுக்கிரன் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கிறார் முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். வயதானவர்கள் உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நல்ல பண வரவு கிடைக்கும். நீங்க எதிர்பார்த்தது நடக்கும் நல்லது நிறைய நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண பாக்கியம் கிடைக்கும். பேசும் பேச்சுக்களில் மரியாதை இருக்கும். தொழிலில் நல்லது நடக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. கேது உங்க ராசியிலும் ராகு உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். புதிய மாற்றங்கள் ஏற்படும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை உங்களுக்கு புதிய பாதை தென்படும் திடீர் திருப்பு முனைகள் ஏற்படும். குரு பகவான் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். உறவுகளிடம் பேசும் போது கவனமாக இருங்க. நிதி நிலைமை நன்றாக இருக்கும். நன்மைகள் அதிகம் நடக்கும். ஆலய தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் மொத்தத்தில் உங்களுக்கு 2020ஆம் ஆண்டு அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+