2020 எண் கணித பலன்கள் : நம்பர் 1 எதையும் தலைமை தாங்கும் ஆற்றல் படைத்தவர்கள்
மதுரை: பிறக்கப் போகும் புத்தாண்டு 2020 அற்புதமான ஆண்டாக உள்ளது. கூட்டுத்தொகை 4. ராகுவின் ஆதிக்கம் கொண்ட ஆண்டு. ராகு நிழல் கிரகம் அதைப் போலவே இந்த ஆண்டும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை உணர முடியாத வகையில் இருக்கும். இந்த புத்தாண்டில் பிறந்த தேதியின் அடிப்படையில் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
பிறந்த ராசி நட்சத்திரம் பிறந்த லக்னம் தெரியாதவர்களுக்கு இந்த 2020 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். முதலில் 1 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பிறக்கப் போகிற புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். 1 சூரியன் ஆதிக்கம் கொண்ட எண், 2020 கூட்டுத்தொகை 4
நான்காம் எண் ராகுவின் ஆதிக்கம் கொண்ட எண் நிழல் கிரகம். ராகுவிற்கும் சூரியனுக்கும் எப்படிப்பட்ட பகை இருக்கும் என்று புராணங்களில் மூலமாக நாம் அறிந்திருக்கிறோம்.
ராகுவின் ஆதிக்கம் கொண்ட இந்த புத்தாண்டில் 1,10,19,28ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கும், கூட்டுத்தொகை 1 கொண்டவர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சூரியன் ஆதிக்கம் 1
எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிறந்தவர்கள் பழகுவதற்கும், பார்வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். கடின உழைப்பும், கண்டிப்பான நடத்தையும் இவர்களைத் தலைமை ஸ்தானத்திற்குக் கொண்டு செல்லும்.

சிறந்த நிர்வாகிகள்
செய்யும் தொழிலில் லாபம் கிடைப்பதை விட மனித நேயமும், தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும். போட்டிகளில் விட்டுக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இவர்களுக்கென ஒரு வசிய சக்தி உண்டு. இதுவே இவர்களை சிறந்த நிர்வாகியாகவும், முதலாளியாகவும் காட்டிவிடும். தொழிலில் ஏற்படும் சங்கடங்கள், போட்டிகளால் அடிக்கடி மனச்சோர்வு அடைந்தாலும், உடனே சமாளித்து விடுவார்கள். மனதில் ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள். தோல்வி ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத் துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள்.

சக்தி நிறைந்தவர்கள்
மன மகிழ்ச்சிக்காக தாராளமாகச் செலவு செய்யத் தயங்காதவர்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் பொதுவாக நிர்வாக திறமை நிரம்பியவர்கள். எப்போதும் அதிகாரமுள்ள பதவிகளை வகிப்பதற்கு ஏற்றவர்கள். தங்களுக்கு கீழே உள்ளவர்களை ஏவி, வேலை வாங்கும் சக்தி நிறைந்தவர்கள். உழைப்பில் பின் வாங்காதவர்கள். எதையும் அதற்குரிய சட்டப்படி செயல்படவே விரும்புவார்கள்.

எதிர்பாராத அதிசயங்கள் நடக்கும்
2020ஆம் ஆண்டில் 1ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த திட்டங்களை விட எதிர்பாராத திட்டங்கள் நிறைவேறும். தெரிந்தவர்களை விட தெரியாதவர்களின் உதவி கிடைக்கும். வளர்ச்சி அதிகமாக இருக்கும். பெர்சனல் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். நிதி வளர்ச்சி அற்புதமானதாக இருக்கும் பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகமாகும், லைப் பார்ட்னர் உடனான உறவு அபரிமிதாக இருக்கும். பதவிகள் பட்டங்கள் பெறலாம். சுப பலன்கள்தான் இந்த ஆண்டு அதிகம் இருக்கும்.

பணம் கடன் கொடுக்காதீங்க
10ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 2020ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் மட்டும் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். பணம் நிர்வகிக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் சிக்கல்கள் வராது. 19ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள், வருட ஆரம்பம் முதல் இறுதி வரை படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். 28ஆம் தேதி பிறந்தவர்கள் பணத்தை யாருக்கும் கைமாற்றாக கொடுக்க வேண்டாம் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உங்களுடைய தொழில் ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். விரைய செலவுகளை தவிர்த்து விடுங்கள் உறவினர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு ஏமாந்து விட வேண்டாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications