Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2020 எண் கணித பலன்கள் - நம்பர் 2 கருணை மனசு குழந்தை உள்ளம் கொண்டவர்கள்

பிறந்த தேதி மட்டுமே தெரியும் ராசி நட்சத்திரம் லக்னம் தெரியாது என்று வருத்தப்பட வேண்டாம் உங்களுக்காகவே இந்த எண் கணித பலன்கள் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று நீங்க பிறந்த தேதியை வைத்து பலனை தெரிந்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பிறக்கப் போகும் புத்தாண்டு 2020 அற்புதமான ஆண்டாக உள்ளது. கூட்டுத்தொகை 4. ராகுவின் ஆதிக்கம் கொண்ட ஆண்டு. ராகு நிழல் கிரகம் அதைப் போலவே இந்த ஆண்டும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை உணர முடியாத வகையில் இருக்கும். இந்த புத்தாண்டில் பிறந்த தேதியின் அடிப்படையில் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

பிறந்த ராசி நட்சத்திரம் பிறந்த லக்னம் தெரியாதவர்களுக்கு இந்த 2020 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். முதலில் 1 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பிறக்கப் போகிற புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். 2ஆம் எண் அதிபதி சந்திரன். 2020 கூட்டுத்தொகை 4
நான்காம் எண் ராகுவின் ஆதிக்கம் கொண்ட எண் நிழல் கிரகம். ராகுவிற்கும் சந்திரனுக்கும் எப்படிப்பட்ட பகை இருக்கும் என்று புராணங்களில் மூலமாக நாம் அறிந்திருக்கிறோம்.

ராகுவின் ஆதிக்கம் கொண்ட இந்த புத்தாண்டில் 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் 2 ஆம் எண் கூட்டுத்தொகை கொண்டவர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

சந்திரன் ஆதிக்கம்

சந்திரன் ஆதிக்கம்

2 ஆம் எண்ணிற்கு உரிய கிரகம் சந்திரன். சந்திரன் குளுமையானது. தாய் கிரகம். அம்பாளின் அருள் பெற்ற எண் இது. பகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன்தந்தைகாரன் சந்திரன் மாதாகாரகன். எனவே இந்த எண்காரர்களிடம்பெண்மையும், மென்மையும் உண்டு. தாய்மையின் இயல்பான பாசம், குடும்பப்பற்று, தேசபக்தி,ஊர்ப்பற்று, மொழிப்பற்று ஆகியவை உண்டு. ஒவ்வொருவர் வாழ்விலும் சோதனைகள் வரலாம். அதற்கு எந்த எண்ணும் விதி விலக்கல்ல. சோதனையைக் கண்டு துவண்டு விடும்போது 2ஆம் எண்ணில் பிறந்தவர்கள் மட்டும் வாழ்க்கையின் சோதனைகளில் வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள்.

பெண்மை குணம் கொண்டவர்கள்

பெண்மை குணம் கொண்டவர்கள்

இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உள்ளதால், அனைவராலும் பெரிதும் விரும்பப்படுவார்கள். கற்பனை கலந்து கவர்ச்சியுடன் பேசுவதால் இவர்களுக்கு மக்களின் ஆதரவு உண்டு. கற்பனை, கவிதை, திட்டமிடுதல் போன்றவற்றில் மிகவும் விருப்பமுடன் ஈடுபடுவார்கள். சந்திர ஆதிக்கம் நல்ல முறையில் அமைந்திருந்தால் நல்ல திட்டங்கள் போட்டும் அவற்றில் வெற்றியும் அடைந்து விடுவார்கள். காலையில் சுறுசுறுப்புடன் தொடங்குவார்கள். ஆனால் மாலைக்குள் ஊக்கம் குறைந்து, சோர்ந்துவிடுவார்கள்.

புத்தாண்டில் எப்படி இருக்கும்

புத்தாண்டில் எப்படி இருக்கும்

நேரில் பார்க்க தைரியசாலியாக தோன்றினாலும் மனதளவில் பெண்மை குணம் கொண்டவர்கள். சந்தர்ப்பங்கள் உங்களைத் தேடி வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, முழு மனதுடன் செயலாற்றினால் எளிதில் உங்களை வெற்றி மகள் தேடி வருவாள். நீங்கள் 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2020ஆம் ஆண்டில் உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சந்திரன் ஆதிக்கம்

சந்திரன் ஆதிக்கம்

இரண்டாம் எண்ணிற்கு அதிபதி சந்திரன். 2020 ஆண்டின் கூட்டுத்தொகை 4 இது ராகுவின் எண். இந்த 2ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவீர்கள். உங்க முயற்சி திருவினையாக்கும். உங்க தன்னம்பிக்கை அதிகமாகும். நினைத்தது நிறைவேற நீங்க இந்த ஆண்டு நிறைய உழைக்கணும். சாதிக்கக் கூடிய ஆண்டாக உங்களுக்கு உள்ளது வாய்ப்புகள் வரும் போது பயன்படுத்திக்கங்க. வருமானம் அதிகமாகும். உங்கள் காதல், திருமண வாழ்க்கையில் சில குழப்பங்கள் வரலாம் கவனம்.

நிதானம் அவசியம்

நிதானம் அவசியம்

கவனமாக இருங்க நிதானமாக இருந்தால் நன்மைகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள் வரும். இந்த ஆண்டு உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் அவசரமும் அலட்சியமும் வேண்டாம் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க, ஒரு பைலில் கையெழுத்து போடும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்த்து போடுங்க. பண விசயத்தில் ஜாமீன் கையெழுத்து போடவே போடாதீங்க. எதையும் ஆதாரத்தோடு வைப்பது நல்லது.

பணம் சேமிப்பு தேவை

பணம் சேமிப்பு தேவை

இந்த வருஷம் சந்தோஷ தருணங்கள் அதிகம் நடைபெறும். மனை வீடு வாங்கும் போது கவனம். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம். முறையான மருத்துவம் தேவை. வீண் ஆடம்பரம் வேண்டாம் விரைய செலவில் இழுத்து விட்டு விடும். கடன்களை முடித்து விடுங்கள். சேமிப்பு அவசியம் இல்லாட்டி கடனாளி ஆகி விடுவீர்கள். அடுத்தவர்கள் விசயத்தில் தலையிட வேண்டாம். பங்கு வர்த்தகம், ஊக வணிகத்தில் ஈடுபடும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக்கொள்ளவும்.

பெண்களுக்கு எப்படி

பெண்களுக்கு எப்படி

பெண்களுக்கு வசந்த காலம் பிறக்கும் இல்லத்தில் இனிமை அதிகரிக்கும். விலகி இருந்த சொந்தங்கள் தேடி வருவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். இரவு நேர பயணம், பார்ட்டிகளுக்கு போக வேண்டாம். வரவுக்கு ஏற்ற செலவு அவசியம். பெற்றோர்களின் பேச்சை கேளுங்க. சமையல் அறையில் கவனம் தேவை. உடல் உபாதைகளை அலட்சியம் செய்ய வேண்டாம். நகைகள், பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம். வீட்டில் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து பேசுங்க. மறைமுக எதிரிகளின் சூழ்ச்சிகளில் சிக்க வேண்டாம் கவனம். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதீங்க. புறம் பேச வேண்டாம் பெயரை கெடுத்து விடும். ஆண் பெண் நட்பில் எல்லை தேவை.

குல தெய்வ வழிபாடு அவசியம்

குல தெய்வ வழிபாடு அவசியம்

வரவு அதிகரிக்கும் போது கடன்களை அடைத்து விடுங்கள், தொழில் செய்பவர்கள் கூட்டு தொழில் செய்ய விரும்பினால் ரத்த சொந்தங்கள், குடும்பத்தினர் தவிர வேறு யாரையும் தொழில் கூட்டாளிகளாக சேர்க்க வேண்டாம் சரிப்பட்டு வராது. முன்கோபத்தை விட்டுத்தள்ளுங்க அதுதான் உங்களோட முதல் எதிரி. கோபத்தால் வேலையை உதறினால் வேறு வேலை கிடைப்பது குதிரை கொம்பாகிவிடும் கவனம். வெளிநாடு யோகம் வரும் ஏற்றுக்கொள்ளுங்கள். தினசரி இஷ்ட தெய்வம் குல தெய்வ வழிபாடு அவசியம் முக்கிய வேலைகளை தொடங்கும் முன்பு மனதால் குல தெய்வத்தை வணங்குவது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+