Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2020 எண் கணித பலன்கள் : 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும்

பிறந்த தேதி மட்டுமே தெரியும் ராசி நட்சத்திரம் லக்னம் தெரியாது என்று வருத்தப்பட வேண்டாம் உங்களுக்காகவே இந்த எண் கணித பலன்கள் 2020ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று நீங்க பிறந்த தேதியை வைத்து பலனை தெரிந்த

Subscribe to Oneindia Tamil

மதுரை: பிறக்கப் போகும் புத்தாண்டு 2020 அற்புதமான ஆண்டாக உள்ளது. கூட்டுத்தொகை 4. ராகுவின் ஆதிக்கம் கொண்ட ஆண்டு. ராகு நிழல் கிரகம் அதைப் போலவே இந்த ஆண்டும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை உணர முடியாத வகையில் இருக்கும். இந்த புத்தாண்டில் பிறந்த தேதியின் அடிப்படையில் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். 3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2020ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

பிறந்த ராசி நட்சத்திரம் பிறந்த லக்னம் தெரியாதவர்களுக்கு இந்த 2020 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். 3 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பிறக்கப் போகிற புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். 3ஆம் எண் அதிபதி குரு. 2020 ஆம் ஆண்டின் கூட்டுத்தொகை 4
நான்காம் எண் ராகுவின் ஆதிக்கம் கொண்ட எண் நிழல் கிரகம். ராகுவிற்கும் சந்திரனுக்கும் எப்படிப்பட்ட பகை இருக்கும் என்று புராணங்களில் மூலமாக நாம் அறிந்திருக்கிறோம்.

ராகுவின் ஆதிக்கம் கொண்ட இந்த புத்தாண்டில் 3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் 3ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

3ஆம் எண்ணின் குணநலன்கள்

3ஆம் எண்ணின் குணநலன்கள்

மூன்றாம் எண்ணின் அதிபதி குரு. மிகப்பெரிய பணக்காரர்களாக இருப்பார்கள் பணம் சம்பாதிக்கும் யோகக்காரர்கள். இவர்கள் ஒரே விசயத்தில் கவனத்தோடு இருப்பார்கள். மூன்றாம் எண்ணிற்கு உரியவர்கள் நேர்மையானவர்கள். நீங்க தர்மவான்கள் அதர்மம் செய்ய மாட்டீங்க, அதர்மம் செய்யிறவங்களை பிடிக்காது. பொருளாதார வல்லுநர்களாக இருப்பீங்க. உங்க பெயரில் உள்ள எழுத்துக்களை வைத்து எண்களை கூட்டி அந்த கூட்டுத்தொகை எண் 3 ஆக வந்தால் இந்த பலன்களை படிங்க.

குரு ராகு கூட்டணி

குரு ராகு கூட்டணி

மூன்று குருவிற்கு உரிய எண். 4 ஆம் எண் ராகுவிற்கு உரியது. மூன்று நேர்மறை எண்ணம் கொண்டது. 4ஆம் எண் ராகு எதிர்மறை கிடையாது ஆனால் பணக்கார எண். இந்த 2020ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக 3ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 2020ஆம் ஆண்டில் நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ரொம்ப பொறுப்பாக கூட இருப்பவங்களை பார்ப்பீங்க. சோம்பலை தவிர்த்து விடுங்க. பதவி உயர்வு ஊதிய உயர்வு உங்களுக்கு வரும்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

அலுவலகத்தில் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை கேளுங்கள். திட்டமிட்டு செயல்புரிங்க உங்களுக்கு வெற்றி கிடைக்கும். யாரை நம்பியும் பொறுப்பை ஒப்படைக்காதீங்க. வெளிநாடு யோகம் வரும். இடமாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். முகஸ்துதிக்கு மயங்காதீங்க, யாருக்கும் ஜாமீன் போடாதீங்க. உங்க திறமைக்கு ஏற்ப பொறுப்புகள் தேடி வரும். கனவுகள் நனவாகும்.

நல்லது நடக்கும்

நல்லது நடக்கும்

குடும்பத்தில் சந்தோஷமும் குதூகலமும் ஏற்படும். சண்டை சச்சரவுகள் நீங்கும். இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வாக்குவாதங்கள் வந்தாலும் விட்டுக்கொடுத்து போங்க நல்லது நடக்கும். பிள்ளைகளிடம் பாசத்தோடு பழகுங்கள் நல்ல பலன் கிடைக்கும். கண்டிப்பு கடுமையான வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள். உறவுகளுக்கு இடையே இருந்த கசப்பு விலகும். வாக்கில் நிதானமும் இனிமையும் இருந்தால் உறவுகளிடையே சந்தோஷம் அதிகரிக்கும்.

வீடு நிலம் வாங்கலாம்

வீடு நிலம் வாங்கலாம்

வீடு மனை, நிலம் வாங்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். செய்யும் தொழிலில் முயற்சி தேவை. திறமையான தொழில் முதலீடு சீரான லாபத்தை தரும். வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். அப்புறம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். கணக்கில் நேர்மையாக இருங்க. வெளிநாடு ஏற்றுமதி இறக்குமதியில் கவனம் தேவை. அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவு கூடும்.

படிப்பில் கவனம்

படிப்பில் கவனம்

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். பொறுமையும் நிதானமும் அவசியம். அதிக மதிப்பெண் வாங்கலாம். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பாதீங்க. பெற்றோர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளை கேளுங்க. தேவையில்லாத நட்பு தேவையில்லாத பழக்கங்களை தேடித்தரும் கவனமாக இருங்க.

சந்தோஷமான ஆண்டு

சந்தோஷமான ஆண்டு

பெண்களுக்கு 2020ஆம் ஆண்டு ரொம்ப நல்ல ஆண்டு. பொது இடங்களில் குடும்ப விவகாரங்களை பேசாதீங்க. வாரிசுகளால் பெருமை வரும். திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் கிடைக்கும். விடுபட்ட குல தெய்வ வழிபாடு நன்மையை தேடித்தரும். இரவு நேரத்தில் தனியாக செல்லாதீங்க. விலை உயர்ந்த பொருட்களை இரவல் கொடுக்காதீங்க இரவல் வாங்கவும் வேண்டாம். செவ்வாய்கிழமை பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனை நெய் தீபம் ஏற்றி எலுமிச்சை கொடுத்து வணங்குங்கள். செவ்வாய்கிழமை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு போய் வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+