2021 ஆங்கிலப்புத்தாண்டு ராசி பலன்: கடகம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும்

பிறக்கப்போகும் 2021ஆம் ஆண்டு கடகம் ராசிக்காரர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2020ஆம் ஆண்டு முடிந்து 2021ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டில் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். குருவின் பார்வையால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும். கண்டச்சனி என்றாலும் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்ற சனியால் சசமகா யோகம் கிடைக்கும்.

பொன்னவன் குருவின் பொன்னான பார்வை ஆண்டின் துவக்கத்திலேயே உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. அதிர்ஷ்டங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது பிறக்கப்போகும் புத்தாண்டு. ராகு கேதுவின் சஞ்சாரமும் சாதகமாகவே உள்ளது. ராகு லாப ஸ்தானத்திலும் கேது பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பது யோகத்தை கொடுக்கும்.

கடகம் ராசிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே பிரச்சினைகள் இல்லாத ஆண்டாகவே இருக்கிறது. சனி, குரு, ராகு கேது கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கடகம் ராசியில் பிறந்தவர்கள்தான் அதிக அதிர்ஷ்டசாலிகளாக இருக்கின்றனர். சின்னச் சின்ன மன உளைச்சல்கள், பொருளாதார தடைகள் வந்து போயிருக்கிறார். 2020ஆம் ஆண்டில் சில சிக்கல்களை சந்தித்து இருக்கலாம். பிறக்கப் போகும் புத்தாண்டு எப்படி இருக்கப் போகிறது. என்னென்ன சாதகமான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

பொருளாதார மேன்மை

பொருளாதார மேன்மை

குருவின் பார்வையால் கணவன் மனைவி உறவில் ஊடல் மறைந்து கூடல் அதிகரிக்கும். சண்டைகள் குறைந்து சமாதானம் அதிகமாகும். வேலையில் புரமோசன் கிடைக்கும். பிசினஸ் பார்ட்னர்களிடையே இருந்த சிக்கல்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உங்களின் கடவுள் நம்பிக்கை கைவிடாது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்ல தன வருமானம் கிடைக்கும். பொருளாதார மேன்மை கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் லாபம்

தொழில் வியாபாரத்தில் லாபம்

கடகம் ராசிக்கு 10வது வீடு மேஷம் ராசி அதிபதி செவ்வாய் வருடம் ஆரம்பத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். 11ஆம் வீட்டில் ராகு, குரு, சனி 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. இந்த ஆண்டு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு புதிய புரமோசன் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதியில் நல்ல லாபம் கிடைக்கும்.

திருமணம் கைகூடும்

திருமணம் கைகூடும்

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை சில மந்த நிலை ஏற்படும் காரணம் குருவின் அதிசார பெயர்ச்சியால் நிதி நெருக்கடிகள் சில மாதங்கள் ஏற்படும். அந்த காலகட்டத்தில் அகலக்கால் வைக்காமல் புதிய முதலீடுகளை தவிர்த்து விடவும். திருமணம் தடைபட்டு வந்தவர்களுக்கு இந்த ஆண்டு திருமண முயற்சிகள் கை கூடி வரும். குரு பார்வை ராசியின் மீது விழுவதால் நிறைய நன்மைகள் நடைபெறும். சனிபகவானால் சசமகா யோகம் கிடைக்கும்.

ஆரோக்கியத்தில் கவனம்

ஆரோக்கியத்தில் கவனம்

குடும்பத்தில் இருந்த மன குழப்பங்கள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். கேது ஐந்தாம் வீட்டில் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நவ கிரகங்களும் சாதகமாக சஞ்சரிக்கின்றன. பெண்களுக்கு பொன் நகைகள் சேரும். புது வீடு கட்டி குடியேறும் வாய்ப்பு வரும். குழந்தைகளால் இருந்த சின்னச் சின்ன தொல்லைகள் விலகி நிம்மதி பிறக்கும்.

மருத்துவ செலவுகள்

மருத்துவ செலவுகள்

மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்வு செய்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பிடித்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மூத்த குடிமக்கள், வயதானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் வரலாம். சனியின் பார்வை உங்களின் ராசிக்கு கிடைப்பதால் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். சில பிரச்சினைகள் வந்தாலும் மொத்தத்தில் 2021ஆம் ஆண்டு கடகம் ராசிக்கு சுபமான ஆண்டாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+