Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2023 புத்தாண்டு ராசிபலன்..சனியால் குபேர யோகம்..வேலையில் புரமோசன் பெறப்போகும் 5 ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடீஸ்வரன் ஆக வேண்டும்..குபேரன் போல வசதியாக வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். வேலை தொழிலில் நல்ல வருமானம் வந்தால் மட்டுமே வசதியாக வாழ முடியும். இன்னும் சில நாட்களில் சனி பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் 2023ஆம் ஆண்டில் யாருக்கெல்லாம் வேலையில் புரமோசன் கிடைக்கும். வியாபாரத்தில் தொழிலில் செய்யும் முதலீடுகள் யாருக்கு லாபத்தை கொடுக்கும் என்று பார்க்கலாம்.

2023ஆம் ஆண்டில் முதலில் இடப்பெயர்ச்சியாவது சனிபகவான். சனியின் சஞ்சாரம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறப்போகிறது. கும்ப ராசியில் பயணிக்கும் சனி பகவானின் பலம் அதிகரிக்கும். சனிபகவானின் பார்வை இந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி முதல் மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது.

கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு சச யோகத்தை கொடுப்பார். தொழில் வியாபாரத்தில் லாபத்தை கொட்டிக்கொடுப்பார். சனிபகவானின் பயணத்தாலும், பார்வையாலும் யாரெல்லாம் குபேர யோகத்தையும், தொழில் வியாபாரத்தையும் லாபத்தையும் பெறப்போகிறீர்கள் என்று பார்க்கலாம். மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு இது பொதுவான பலன்தான். ஜாதக கட்டங்களில் உள்ள கிரகங்கள் மற்றும் அவரவர்கள் தசாபுத்திக்கு ஏற்ப பலன்கள் சிறிதளவு மாறுபடும்.

2023 New year Rasi Palan: Puthandu Rasi palan Who will get Gubera yogam

மேஷம்

மேஷ ராசி நேயர்களே 2023 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தொழில் ஸ்தானத்தில் பயணித்த சனியால் பணி செய்யும் இடத்தில் நிறைய சங்கடங்களையும் சவால்களையும் சந்தித்து இருப்பீர்கள். பிறக்கப் போகும் புத்தாண்டில் வேலையில் புதிய வெற்றிகளை அடைவீர்கள். இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு முக்கியமான கிரகங்களான குரு, சனி, ராகு கேதுவின் சஞ்சாரம் சாதகமான நிலையில் உள்ளது. வேலையில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சனி பகவான் லாப ஸ்தானத்திற்கு ஜனவரி முதல் இடப்பெயர்ச்சி அடைவதால் செய்யும் தொழிலில் அதிக லாபத்தை அடைவீர்கள். குபேர பகவானின் ஆசியால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. அதே நேரத்தில் இந்த ஆண்டு நிறைய செலவுகளையும் சந்திப்பீர்கள். ஏப்ரல் மாதம் வரை குரு பகவான் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். ஜென்ம ராசிக்கு வரும் குரு பகவான் வேலையில் இடமாற்றத்தை தரப்போகிறார். ராசியில் ராகு களத்திர ஸ்தானத்தில் உள்ள கேதுவின் இடப்பெயர்ச்சியும் நிறைய பண வரவை தரும். வேலையில் புரமோசனைத் தேடித்தரும். நோய்கள் குறித்த அச்சம் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.

2023 New year Rasi Palan: Puthandu Rasi palan Who will get Gubera yogam

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு 2023 புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரப்போகும் ஆண்டாக அமையப்போகிறது. சனியின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வெளிநாடு பயணங்கள் நன்மையைத் தரும். சனி பகவான் தொழில் ஸ்தானத்திற்கு வரப்போகிறார். குருவின் பயணம் இந்த ஆண்டு லாப ஸ்தானத்திலும் விரைய ஸ்தானத்திலும் இருப்பதால் வேலையில் சில மாதங்கள் சிக்கலாக இருந்தாலும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். நிறைய சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். அக்டோபர் மாதம் நிகழப்போகும் ராகு கேதுவின் இடப்பெயர்ச்சியும் சாதகமாக உள்ளதால் அதிக பண வரவு வரும் கடன் பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்து காத்திருந்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தேடி வரும். இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு சவால்களை சமாளிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது.

2023 New year Rasi Palan: Puthandu Rasi palan Who will get Gubera yogam

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருந்தது. அஷ்டமத்து சனியால் கடந்த காலங்களில் நிறைய சங்கடங்களை சந்தித்து இருப்பீர்கள். இனி உங்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தப்போகும் ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது. வேலையை இழந்து விட்டு காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கை கூடி வரும். வியாபாரம் தொழிலில் நஷ்டத்தை சந்தித்த உங்களுக்கு இந்த ஆண்டு முதல் லாபம் அதிகரிக்கும். பாக்ய சனியால் குபேர யோகம் கைகூடி வரப்போகிறது. மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை நீங்கும். புதிய வியாபாரம் தொடங்கவும் நல்ல காலம் கை கூடி வந்துள்ளது. படித்து விட்டு நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புதிய வேலையும் சுமாரான வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலையும் கிடைக்கும்.

2023 New year Rasi Palan: Puthandu Rasi palan Who will get Gubera yogam

கடகம்

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களின் பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடந்த ஆண்டு கண்டச்சனி காலமாக இருந்தாலும் குரு பார்வையால் தப்பித்தீர்கள். வாட்டி வதைத்த நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு மேல் வேலை செய்யும் இடங்களில் கவனமாக இருப்பது நல்லது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பணியிடங்களில் சின்னச் சின்ன சிக்கல்கள் வரலாம். தொழில் ஸ்தானத்தில் அமரப்போகும் குரு பகவானால் புதிய மாற்றங்கள் வரலாம். இன்னும் சில நாட்களில் அஷ்டமத்து சனியாக மாறப்போகிறார். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம், கஷ்டங்கள் வரலாம். நகை,பணம் விசயத்தில் கவனமும் நிதானமும் தேவைப்படும். நோய் பரவும் காலம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனத்தோறும் அக்கறையுடனும் இருப்பது அவசியம்.

2023 New year Rasi Palan: Puthandu Rasi palan Who will get Gubera yogam

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். 2023ஆம் ஆண்டு அற்புதமான மாற்றங்களை தரப்போகும் கடந்த காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும் காலம் கை கூடி வந்துள்ளது. பெருந்தொற்று காலத்தில் வேலை தொழில் வியாபாரத்தில் நிறைய நஷ்டங்களை சந்தித்த உங்களுக்கு இனி வரும் காலம் லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. குபேர யோகமும் கோடீஸ்வர யோகமும் வீடு தேடி வரப்போகிறது. குருபகவானின் சஞ்சாரமும் பார்வையும் உங்களுக்கு சாதகமான நிலையைத் தரப்போகிறது. கனவுகள் நனவாகும் காலம் கை கூடி வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளும் பதவி உயர்வு தேடி வரும் வருமானம் அதிகரிக்கும். முன்னேற்றப்பாதையில் செல்வீர்கள். ஐடி துறையில் வேலை செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் கூட்டுத் தொழில் சிறப்படையும். சனிபகவான் கண்டச்சனியாக பயணம் செய்ப்போகிறார். சனி பகவானின் பார்வை நேரடியாக ராசிக்கு கிடைக்கப்போகிறது.சஞ்சாரத்தால் பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் தீரும். ராகு கேதுவின் பயணத்தால் புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும் ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமையப்போகிறது.

2023 New year Rasi Palan: Puthandu Rasi palan Who will get Gubera yogam

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்களின் கவலைகள் நீங்கும் ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது. கடந்த காலங்களில் வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த உங்களுக்கு பிறக்கப் போகும் புத்தாண்டு புத்துணர்ச்சி நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ஏப்ரல் மாதம் வரை குருவின் பயணம் சாதகமாக உள்ளது. மே மாதத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வியாபார நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு செல்லப்போவதால் உங்களுக்கு கடன் பிரச்சினைகள் நீங்கும். வருமானம் படிப்படியக அதிகரிக்கத் தொடங்கும். பணியிடங்களில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். மன உளைச்சல்கள் நீங்கி மன மகிழ்ச்சி அதிகரிக்கும் ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது உற்சாகத்துடன் அனுபவிக்கத் தயாராகுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+