Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்: 12 ராசிக்காரர்களுக்கும் மின்னல் வேக பலன்கள்.. பரிகாரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024ஆம் ஆண்டு பிறக்கும் போதே அற்புதமான யோகத்துடன் பிறந்துள்ளது. இந்த ஆண்டு நமக்கு விடிவு காலம் பிறக்குமா என்று பலரும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்றும் இந்த ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு எந்த யோகம் கிடைக்கப்போகிறது என்றும் பார்க்கலாம்.

கிரக பெயர்ச்சிகள்: 2024ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனிபகவான் கும்பம் ராசியில் ஆண்டு முழுவதும் பயணம் செய்வார். மீன ராசியில் ராகுவும் கன்னி ராசியில் கேதுவும் ஆண்டு முழுவதும் பயணம் செய்யப்போகின்றனர். குருபகவான் ஏப்ரல் மாதம் வரை மேஷம் ராசியில் சஞ்சரிப்பார்.மே 1ஆம் தேதி முதல் பெயர்ச்சியாகி ரிஷப ராசிக்கு செல்கிறார். கிரகங்களின் பயணங்கள் பார்வையால் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

2024 New year rasi palan: Puthandu Rasi Palan for 12 zodiac signs and parikaram

மேஷம்: 2024 புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதம். குருவினால் இன்பங்கள் அதிகரிக்கும். மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் வாழ்க்கை வசந்தமாகும் பணவரவு அற்புதமாக இருக்கும். பெண்களுக்கு உற்சாகமாக ஆண்டு நிறைய நகைகள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு இது அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இது அதி அற்புதமான ஆண்டாக அமையும் என்பதில் சந்தேசமில்லை. ஆலய தரிசனம் அற்புத பலன்களை தரும் வாலாஜா பேட்டையில் அருள்பாலிக்கும் சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள் சங்கடங்கள் தீரும்.

ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு நிறைய லாபம் வரும் ஆனாலும் கடும் போராட்டம் இருக்கும். நீண்ட நாளாக தடை பட்டிருந்த காரியங்கள் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் அதிகம் வாங்குவீங்க. மாணவர்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமையும். வியாபாரம் தொழிலில் லாபம் வரும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருள்பாலிக்கும் குரு தட்சிணா மூர்த்தியை குரு ஹோரையில் தரிசனம் செய்ய நல்லதே நடக்கும்.

மிதுனம்: புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் சந்தோஷத்தை தரப்போகிறார். குருவின் சஞ்சாரம், பார்வையினால் பொன்னான ஆண்டாக அமைகிறது. ரொம்ப சிறப்பான ஆண்டு. பெண்களுக்கு சொந்த வீடு கிடைக்கும். தம்பதியர் இடையே நெருக்கம் ஏற்படும். மாணவர்களுக்கு அற்புதமான ஆண்டு வெற்றிகள் தேடி வரும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்க வாலாஜாபேட்டையில் எழுந்தருளியிருக்கும் தன்வந்திரி பகவானை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு குருபகவான் வெற்றிகளை தருவார். சனிபகவான் அஷ்டம சனியாக பயணம் செய்வதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். மாணவர்களுக்கு குருவின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு ரொம்ப லாபமான வாரம். அற்புதமான ஆண்டாக அமைகிறது. தடைகளை தாண்டி முன்னேற்றம் ஏற்படும். பவுர்ணமி நாட்களில் பூஜை செய்ய வெற்றிகள் தேடி வரும். மன கலக்கங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகமாகும்.

சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, 2024ஆம் ஆண்டு உங்களுக்கு குதூகலம் நிறைந்த ஆண்டாக அமைகிறது. சின்ன சின்ன நோய்கள் எட்டிப்பார்த்தாலும் உங்களுக்கு பெரிய அளவில் செலவுகளோ பாதிப்புகளோ வராது கவலைப்பட வேண்டாம். பண வரவு அபரிமிதமாக இருக்கும். சொந்த பந்தங்களுடன் இருந்த பகை நீங்கும். உங்களுக்கு எதிரிகள் தொல்லை ஒழியும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். குடும்பத்தோடு உல்லாச பயணம் செல்வீர்கள். இந்த ஆண்டு தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி: மேன்மையான ஆண்டாக 2024 ஆம் ஆண்டு அமைகிறது. நீண்ட நாள் கனவு நனவாகும். குருவும் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிக்கிறார். பெண்களுக்கு கணவரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். உங்கள் அன்புக்கு உரியவர் இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் கொடுப்பார். நகைகள், ஆடைகள் வாங்குவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. உயர்கல்வி யோகம் தேடி வந்துள்ளது. மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட நிறங்கள். புதன்கிழமை சீனிவாசபெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.

துலாம்: சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆண்டு லாப கரமான ஆண்டாக அமையும். பங்கு சந்தை, ரேஸ், லாட்டரி மூலம் பண வருமானம் அதிகம் வரும் மன உற்சாகத்தோடு இருப்பீங்க. மாணவர்களுக்கு முன்னேற்றகரமான ஆண்டு. பெண்களுக்கு உற்சாகமான ஆண்டு கணவர் உங்களுக்காக நிறைய செலவு செய்வார். தம்பதியரின் ஒற்றுமை சந்தோஷத்தை அதிகரிக்கும். குருவின் பார்வை ராசி மீது விழுவதால் தொழிலில் லாபம் அதிகரிக்கும், ஆண்டு முழுவதும் திடீர் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு போய் சுக்கிர ஓரையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுங்க நல்லதே நடக்கும்.

விருச்சிகம்: செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, 2024 புத்தாண்டு புத்துணர்ச்சி தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. இத்தனை ஆண்டுகளாக சிக்கல்களை சந்தித்து கடுமையான சவால்களுடன் வாழ்க்கையை ஓட்டி வந்தீர்கள் இனி உங்களுக்கு சந்தோஷமான ஆண்டாக அமையப்போகிறது. காரணம் குருபகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடப்போகிறார். குடும்பம் குதூகலமாக இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பெண்களுக்கு முக்கியத்துவமான ஆண்டாக அமைகிறது. படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாடு போகும் யோகம் வரப்போகிறது. செவ்வாய் கிழமை முருகனை வணங்கி வர அற்புதமான யோகங்கள் தேடி வரும்.

தனுசு: குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, 2024ஆம் ஆண்டு உங்களுக்கு வெற்றிகளும் சந்தோஷங்களும் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் மளமளவென முடிந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் கை கூடி வரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இந்த ஆண்டு திருச்செந்தூர் முருகனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மகரம்: சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு 2024 புத்தாண்டு சந்தோஷத்தை தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. குரு பகவானின் பார்வை குதூகலத்தை தரப்போகிறது. உங்களின் விடா முயற்சி வெற்றிகளை தரும். அலுவலகத்தில் வேலை செய்யும் ஆண்கள் பெண்கள் விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. இளம் பெண்கள் ஆண்களிடம் எச்சரிக்கையாக இருங்க, பெற்றோர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். படிக்கும் மாணவர்கள் கொஞ்சம் கவனமாக படிக்க வேண்டும். ஆலய தரிசனம் மன அமைதியை ஏற்படுத்தும். தொழில் வியாபாரிகள் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம் தவிர்த்து விடுங்கள்.

கும்பம்: சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே உங்களுக்கு பிறக்கப் போகிற புத்தாண்டு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. மனதிலும் உடம்பிலும் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பெண்களுக்கு கணவனின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இளைஞர்களின் கல்யாண கனவுகள் நனவாகும். புத்திர பாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். சிவ ஆலயத்திற்கு சென்று பாலபிஷேகம் செய்ய பாதிப்பகள் குறையும். எதிரிகள் தொல்லைகள் ஒழியும்.

மீனம்: குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே 2024ஆம் ஆண்டு ஏழரை சனி காலமாக இருந்தாலும் தொழிலில் லாபம் அதிகம் கிடைக்கும். ராசியில் பயணம் செய்யும் ராகு யோகத்தையும் லாபத்தையும் தரப்போகிறார். நன்மைகளும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். மனதளவிலும் உடல் அளவிலும் தெம்பும் தைரியமும் கூடும். மிகப்பெரிய உயரங்கள் கிடைக்கும். சமூகத்திலும் சமுதாயத்திலும் மரியாதை அதிகரிக்கும். படிக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான ஆண்டாக அமையும். தொழில் வியாபாரிகளுக்கு லாபம் அபரிமிதமாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+