2025 இல் உஷாராக இருக்க வேண்டிய ராசிகள் எவை?.. எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது?
சனிப்பெயர்ச்சி 2025: 2024ம் ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். இன்னும் 34 நாட்களில் 2025 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. 2024 ஒவ்வொரு ராசிக்கார்களுக்கு ஒவ்வொரு மாதிரி சென்றிருக்கும். வர இருக்கும் 2025 எந்த ராசிக்கு என்ன மாதிரியான பலன் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். கிரகங்கள் எப்படி இருக்கின்றன, என்ன நடக்கும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது உள்ளிட்ட என்று 12 ராசிக்குமான புத்தாண்டு பொது பலன் இதோ. (2025 Puthandu rasi palan)
ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சனி பகவான் இடம்பெயரும் போது சில ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி, சனி திசை தொடங்குவது வழக்கம். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் உள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டு (2025 Rasi palan) புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதியன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார்.

சொந்த ராசிக்கு முந்தைய ராசியில் சனி பகவான் இடம்பெயரும்போது விரைய சனி காலம் நடக்கும். அதற்கு அடுத்த இரண்டரை காலம் ஜென்ம சனி. அதாவது சொந்த ராசிக்கே சனி பகவான் இடம்பெயர்வார். அடுத்த இரண்டரை காலம் சொந்த ராசியின் அடுத்த ராசியில் சஞ்சரிப்பார் அதுதான் பாதசனி. இவ்வாறு ஏழரை சனி ஏழரை ஆண்டுகாலம் நீடிக்கும்.
சனிப்பெயர்ச்சி என்றாலே பலரும் அச்சம் ஏற்படுவது வழக்கம். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை அள்ளித் தருபவர் சனி பகவான். சனி உச்சத்தில் இருப்பவர்களுக்கு சனிபகவான் பல்வேறு நற்பலன்கள் மற்றும் செல்வங்களை கிடைக்கச் செய்வார். கும்ப ராசிக்கு அதிபதியாக திகழ்கிறார் சனி பகவான். தற்போது தனது சொந்த ராசியில் பயணித்து வரும் சனி பகவான் 2025 புத்தாண்டில் மார்ச் 29 ஆம் தேதி மீன ராசிக்கு இடம்பெயரவுள்ளார்.
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு மேஷம் முதல் மீனம் வரையுள்ள ராசிக்காரர்களுக்கு (Elarai sani 2025) சனிப்பெயர்ச்சி எவ்வாறு உள்ளது, என்னென்ன நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை பார்க்கலாம் வாங்க...
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு (Elarai sani for Mesham) 2025 புத்தாண்டு சிறப்பாக இருக்கும். ராசிநாதன் செவ்வாய் நீட்சமாக இருப்பதால் ஜூன் மாதம் வரை சின்ன சின்ன தடைகள், தாமதங்கள் வந்து செல்லும். 11வது இடமான லாபத்தில் சனி இருப்பதாலும், இரண்டாவது இடத்தில் குரு இருப்பதாலும் பணவரவு நன்றாக இருக்கும். இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உருவாகும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடங்குவதால் பலர் பயத்துடன் இருப்பார்கள். முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. வேலையை விட்டு சுய தொழில் தொடங்குவோருக்கு 2025 சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை அமையும். ஜூன் மாதத்துக்கு பிறகு திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். அப்போது ராகு 11வது இடத்துக்கு செல்வதால் எதிலும் வெற்றி கிடைக்கும். கடன் பிரச்னை நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு (Elarai sani for Rishabam) 2025 புத்தாண்டு அற்புதமாக இருக்கும். 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் 11வது இடத்துக்கு சனி கிரகம் வருகிறது. ராசியிலேயே குரு இருக்கிறார். 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்றுமே ரிஷபத்துக்கு நல்லது தான் செய்யும். வேலை, தொழில் அமைப்புகளில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். எப்படி பார்த்தாலும் யோகத்தை அள்ளி கொடுக்கும்.
திருமணம் கைகூடும். குடும்பம், தனம், வாக்கு எல்லாவற்றிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்தாண்டு மன அழுத்தத்தில் இருந்த பெண்களுக்கு அது எல்லாம் நீங்கி தொட்டதில் எல்லாம் வெற்றி துலங்கும். வீட்டில் இருந்த பிரச்னைகள் சரியாகும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அமோகமாக இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து வெற்றி மேல் வெற்றி குவியும்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு (Elarai sani for Midhunam) கடந்த மூன்று ஆண்டுகளாகவே ஏராளமான பிரச்னைகளில் சிக்கி சின்னா பின்னமாகியுள்ளனர். 2025 அதில் இருந்து நல்ல மாற்றத்தை இந்த புத்தாண்டு கொடுக்கும். 12வது இடத்தில் உள்ள குருபகவான் ராசியாபதியாக மாறுகிறார். 9வது இடத்தில் உள்ள சனி 10வது இடத்துக்கு வருகிறார். இது நல்ல பலன்களை கொடுக்கும். ஜூன் மாதம் வரை இரண்டாம் இடத்தில் செவ்வாய் நீட்சம் அடைகிறார். இதனால் கோபம் அதிகம் வரும். எனவே வார்த்தைகளில் கவனம் தேவை.
குடும்பம், வேலை, தொழில் அமைப்புகளில் பாதிப்புகள் இருக்காது. முதலீடு சார்ந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். 9வது இடத்தில் ராகு இருப்பதால் தந்தை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கணிதம், மென்பொருள் துறை சார்ந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும். பதவி, சம்பளம் உயர்வு உறுதியாக உண்டு.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு (Elarai sani for Kadagam) கடந்த இரண்டு ஆண்டுகளாக அஷ்டம சனி படுத்தி எடுத்திருக்கும். 2025 அந்தப் பிரச்னைகள் எல்லாம் உங்களிடம் இருந்து தள்ளி நிற்கும் ஆண்டாக புத்தாண்டு இருக்கும். அஷ்டம சனி விலகப் போகிறது. கெடுதல்கள் விலகி நல்லது நடைபெறும் காலம் இது. திடீர் யோகங்கள் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
கலை துறையினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருணம் வாய்ப்பு தேடி வரும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் பிறக்கும். வருமானம் நிறைவாக இருக்கும். உடல்நலக் குறைபாடு நீங்கி ஆரோக்கியம் சீரடையும். 2025 ஆம் ஆண்டு முழுவதுமே உங்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்கும்.
சிம்மம்: 2025 சிம்ம ராசிக்கு (Elarai sani for Simmam) மாற்றத்தை கொடுக்கும். அஷ்டம சனி வந்தாலும் அதில் மிகப்பெரிய பிரச்னைகள் உங்களுக்கு வராது. எட்டாம் இடமான குரு வீட்டில் அமர்வதால் பெரியளவு கவலைப்பட வேண்டியதில்லை. தொழில் விஷயத்தில் யாரையும் நம்பி முதலீடு செய்யக் கூடாது. வேலை, தொழிலில் புதிய வாய்ப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். அதில் முடிந்தவரை முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
மன அழுத்தம் அவ்வபோது வந்து நீங்கும். பணவரவில் பெரிய சிக்கல் இருக்காது. கேது ராசியில் வந்து அமர்வதால் குருபகவான் உங்கள் ராசியை அதிர்ஷ்சாலியாக மாற்றுவார். திருமணம் விஷயத்திலும் ஆராய்ந்து , நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். கவனமாக இருந்தாலே இந்தாண்டில் பல பிரச்னைகளில் சிக்காமல் சற்று நிம்மதியாக இருக்கலாம்.
கன்னி: 2025 சிறப்பாக இருக்கும் ராசிகளில் கன்னி உச்சத்தில் (Elarai sani for Kanni) உள்ளது. 6 ஆம் இடத்தில் சனி, 9 ஆம் இடத்தில் குரு இருப்பது சிறப்பான யோகங்களை தரும். ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக இருக்கும். கடன், நோய் ஆகியவற்றில் இருந்து தீர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கைகூடும். வீடு, வாகனம் மாற்றம் எதிர்பார்த்தபடி நிகழும். பணியிட மாற்றம் வரும்.
கணவன், மனைவி இடையே சஞ்சலங்கள் வந்து செல்லும். பிடிவாதம் சற்று அதிகரிக்கும். செவ்வாய் 11வது இடத்தில் நீட்சமாக இருப்பதால் தொட்டது எல்லாம் துலங்கும். மருத்துவம், கட்டிடம் சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு நிறைவாக இருக்கும். திருமண வாய்ப்பு வரும். குரு பகவான் நல்ல அமைப்பில் இருப்பதால் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். பிரச்னைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் சூழல் உருவாகும்.
துலாம்: 2025 துலாம் ராசி (Elarai sani for Thulam) கொடுத்து வைத்தவர்கள். ஆண்டின் முதல் நாளில் இருந்தே நல்ல பலன்கள் கிடைக்கும். ராகு கேது 11வது இடத்திலும், சனி பகவான் 6 வது இடத்திலும், குரு 9வது இடத்துக்கும் செல்வது நல்ல யோகங்களை கொட்டும். மாணவர்களுக்கு கல்வி மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த கால கஷ்டங்கள் விலகி, புத்தாண்டு நன்மைகளை மட்டுமே கொடுக்கும்.
பணவரவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கை துணை அமைப்பு நன்றாக இருக்கிறது. தொழில், வீடு, வாகனம் கடன்கள் படிப்படியாக சுமைகள் நீங்கும். எதிரிகள் விலகி வெற்றிகள் தேடி வரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரமும் நன்றாக இருக்கும். ஆண், பெண் அனைவருக்கும் மனதுக்கு இனிமையாக எல்லாவற்றையும் கொடுக்கும் ஆண்டாக இருக்கும்.
விருச்சிகம்: 2025 விருச்சிக ராசிக்கு (Elarai sani for Viruchigam) முதல் ஆறு மாதம் சற்று சாதகமாக இருக்காது. ராசிநாதன் வலுவாக இல்லாவிடினும், ராசியை குரு பார்ப்பதால் பிரச்னைகள் வந்தாலும் அதை சமாளிக்க முடியும். 4வது இடத்தில் உள்ள சனி 5வது இடத்துக்கு மாறுவது நல்ல பலன்களை கொடுக்கும். வாரிசுகளுக்கு எதிர்பார்த்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் பணவரவு நிறைவாக இருக்கும். வெளிநாடு வாய்ப்புகள் சாதகமாகும். பயணங்கள் அதிகரிக்கும். முதியோர் ஆன்மிக தலங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு உருவாகும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும். நிறைவான ஆண்டாக இருக்கும்.
தனுசு: 2025 தனுசு ராசிக்கு (Elarai sani for Dhanushu)நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். குரு 6வது இடத்துக்கு வந்ததால், தனுசு ராசிக்காரர்கள் கடந்த ஆறு மாதங்களாக சின்ன சின்ன கஷ்டங்களை சந்தித்திருப்பார்கள். அந்த குரு 7வது இடத்துக்கு மாறுவது அமோக பலன்களை கொடுக்கும். முக்கியமாக ஆண்டின் பிற்பகுதி நன்றாக இருக்கும். திருமண வாய்ப்புகள் கைகூடும். வேலை வாய்ப்பும் தேடி வரும்.
8வது இடத்தில் உள்ள செவ்வாய் வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் கோபம் அதிகரிக்கும். எனவே சற்று நிதானம் தேவை. எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் காரியத்தை நோக்கி முன்னேறி செல்வீர்கள். கலை, சினிமா மற்றும் ஊடக துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ராகு கேது 3 மற்றும் 9 இடங்களில் வருவதால் எல்லாவற்றிலும் நன்மை தேடி வரும்.
மகரம்: 2025 மகர ராசிக்காரர்களுக்கு (Elarai sani for Magaram) அமோகமாக இருக்கும். ஏழரை சனி விட்டு விலகவுள்ளது. துன்பங்கள் விலகி நிம்மதி தேடி வரும். சனி 3வது இடத்துக்கு வருவது 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் நல்ல அமைப்பு. இது நல்ல பெயர், புகழ்களை தரும். பணியிடம் மாற்றம் நிகழும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரும்.
ராசிநாதன் வலுவாக இருப்பதால் தொட்டது துலங்கும். பணவரவு நிறைவாக இருக்கும். இருப்பினும் பண விரயம் இருக்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். அடுத்தடுத்து வரும் ஆண்டுகளுக்கு அஸ்திவாரம் போடும் மன நிறைவான ஆண்டாக 2025 இருக்கும்.
கும்பம்: 2025 கும்ப ராசிக்காரர்களுக்கு (Elarai sani for Kumbam) பெரிய துன்பம் விலகப் போகிறது. ஜென்ம சனியால் கடந்த சில ஆண்டுகளாக எக்கச்சக்க துன்பங்களை சந்தித்து வருகிறீர்கள். இப்போது உங்களை சூழ்ந்துள்ள துன்பங்கள் படிப்படியாக விலகும். 6வது இடத்தில் நிலைத்துள்ள செவ்வாயால் நன்மை பிறக்கும். ஜென்ம சனி விலகப் போகிறது. இதனால் மன அழுத்தங்கள் நீங்கும். இளைஞர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
கைவிட்டு போன பணம் திரும்பி வரும். சங்கடங்கள் நீங்கி சாதனை படைக்கும் அமைப்பு உருவாகும். ஏழரை சனி இரண்டரை ஆண்டுகளுக்கு நீளும். இருப்பினும் பெரிய கஷ்டங்கள் இனியும் தொடராது. பணவரவு நன்றாக இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
மீனம்: 2025 மீன ராசிக்காரர்களுக்கு (Elarai sani for Meenam) நிறைய பாடம் சொல்லிக் கொடுக்கும். ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்க போகிறது. கஷ்டங்கள் அதிகமாக தான் இருக்கும். சங்கடங்கள் வரும். புத்தாண்டு தொடக்கத்தில் பணவரவு சற்று திருப்தியாக இருக்கும். எதிலும் அகல கால் வைக்க வேண்டாம். யாரையும் நம்பி முதலீடு செய்யக் கூடாது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்ப நம்ப வேண்டும்.
கணவன், மனைவி உறவில் சின்ன சின்ன பிரச்னைகள் வந்து நீங்கும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போய் சாதகமற்ற சூழல் உருவாகும். இருப்பினும் 6வது இடத்தில் கேது மாறுவது பாதுகாப்பான அமைப்பாகும். பணம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சாதகமற்ற சூழல் வந்தாலும் அனுபவ பாடம் உங்கள் சிந்தனையை மேம்படுத்தும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications