தன்வந்திரி பீடத்தில் 27 யாகம்...ஆஷாட ஏகாதசியில் நெல்லிப்பொடி அபிஷேகம்
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 22.07.2018 காலை 6.30 மணிக்கு கோபூஜை, கலச பூஜை, விக்நேஸ்வர பூஜை, யாகசாலை பூஜையுடன் 27 யாகங்கள் நடைபெற்றது.
வேலூர்: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், மக்கள் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற்று ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று வாழ ஜூலை மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 7.00 மணி முதல் 23ஆம் தேதி திங்கள்கிழமை காலை 7.00 மணி வரை 24 மணி நேரம் 27 ஹோமங்கள் அகண்ட ஹோமமாக நடைபெற்றது.

22.07.2018 காலை 6.30 மணிக்கு கோபூஜை, கலச பூஜை, விக்நேஸ்வர பூஜை, யாகசாலை பூஜையுடன், ஸ்ரீ காரிய சித்தி கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், ஸ்ரீ சந்தான பரமேஸ்வர ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சூலினி துர்கா ஹோமம், மஹாபைரவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலா சரஸ்வதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மகா குபேர லட்சுமி ஹோமம், லட்சுமி ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், ஸ்ரீ காயத்ரி ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ ஹோமம், ராகு கேது ப்ரீத்தி ஹோமம், சுதர்சன ஹோமம், செவ்வாய் கிரக பிரீத்தி ஹோமம், 27 நட்சத்திர சாந்தி ஹோமம், உமா மகேஸ்வரி ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஹோமம், ஸ்ரீ ருத்ர ஹோமம், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜீனர் ஹோமம், அகிய 27 ஹோமங்களின் மஹா பூர்ணாஹூதி இன்று 23.07.2018 திங்கட்கிழமை 7.00 மணிக்கு நிறைவு பெற்றது.

மேற்கண்ட யாகம் சிறந்த வேதவிற்பன்னர்கள் மற்றும் ஸ்வாமிகளின் தீக்ஷ பெற்ற சீடர்களைக் கொண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 24 மணி நேரம் அகண்ட யாகமாக 27 யாகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று அவரவர்கள் தேவைகளுக்காக பிரார்த்தனைகள் செய்தனர்.

நெல்லிப்பொடி அபிஷேகம்
இதனைத் தொடர்ந்து இன்று காலை 10.00 மணியளவில் சகலவிதமான பிணிகள் தீரவும், நிம்மதியான தூக்கம் கிடைக்கவும், கெட்ட கனவுகள் விலகவும், துர்சிந்தனைகள் அகலவும், இதய சம்பந்தமான நோய்கள் அகலவும், கனையம் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் நீங்கவும் மற்றும் சகலவிதமான பாபங்கள் விலக ஏகாதசி திதியை முன்னிட்டு 108 மூலிகை தீர்த்தங்களுடன் நெல்லிப் பொடிகொண்டு ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு மஹா அபிஷேகமும் சகல தேவதைகளுக்கு கலசாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. தொடர்புக்கு 04172 - 230033, செல் - 9443330203
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications