Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குருவும் சனியும், கும்பம் ராசிக்கு சாதகம்... 2 ஜி வழக்கில் இருந்து கனிமொழி விடுதலை

நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. கனிமொழிக்கு வழக்கின் தீர்ப்பு சாதகமாகவே வந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி 2 ஜி வழக்கில் இருந்து தப்பித்துள்ளார். அவருக்கு அனைத்து கிரகங்களும் சாதகமான பார்வையை வீசியுள்ளன.

சனிபகவான் நீதிமான். இவர் தனது தீர்ப்பை சரியாக வழங்குவார். தவறு செய்தவர்கள் இவர் பார்வையில் இருந்து தப்ப முடியாது. சமீபத்தில் நிகழ்ந்த சனி பெயர்ச்சியானது கும்பம் ராசிக்கு சாதகமாகவே உள்ளது.

கனிமொழி பிறந்த தேதிப்படி பார்த்தால் அவர் பூரட்டாதி நட்சத்திரம், கும்பம் ராசி. சனிபகவான் 11ஆவது இடத்தில் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளது சிறப்பானது.

கனிமொழி ராசி

கனிமொழி ராசி

சனி பகவான் 3ம் பார்வையாக கும்பம் ராசியைப் பார்ப்பதால் ஒரு பக்கம் தன்னம்பிக்கை அதிகரித்தும் அதே சமயம் அந்த தன்னம்பிக்கையை குலைக்கும் வண்ணம் தேவையற்ற விசயங்களும் நடந்தேறும். எதிலும் வெற்றி பெறக் கடுமையாகப் போராட வேண்டியது வரும் என்று கூறப்பட்டது. ஆனால் கடுமையான முயற்சியினால் வெற்றிக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

தந்தையின் உடல்நலம்

தந்தையின் உடல்நலம்

சனி பகவான் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 8ம் இடத்தைப் பார்வை செய்வதால் தந்தையாரின் உடல் நலத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தசாபுத்திப்படி கணிக்கப்பட்டுள்ளதை பார்த்தால் கனிமொழி பிறந்த நேரம் வியாழதிசை நடந்துள்ளது. 1978 வரை அவருக்கு வியாழதிசை இருந்துள்ளது.

திகார் சிறை வாழ்க்கை

திகார் சிறை வாழ்க்கை

அதன் பின்னர் 1978 முதல் 1997 வரை சனிதிசை நடந்து முடிந்துள்ளது. 1997 முதல் 2014ஆம் ஆண்டு வரை புதன்திசையும் நடந்துள்ளது. இந்த கால கட்டத்தில்தான் அவருக்கு அரசியல் யோகம் அடித்தது. ராஜ்யசபா எம்பியானார். கூடவே, வழக்கில் சிக்கி திகார் சிறை வரை சென்றார். கடந்த 6 ஆண்டு காலமாக வழக்கில் சிக்கி தவித்து வருகிறார். இதோ தீர்ப்பு நேரமும் வந்து விட்டது.

கனிமொழிக்கு சாதகம்

கனிமொழிக்கு சாதகம்

கனிமொழிக்கு தற்போது கேது திசை நடைபெறுகிறது. கேது பகவான் தற்போது கோசாரபடி மகரத்தில் அமர்ந்துள்ளார். இது கனிமொழியின் ராசிக்கு 12வது இடமாகும். 6ஆம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளார். இரண்டுமே சிறப்பானதாகவே இருக்கிறது. கும்பத்திற்கு குருபகவான் சாதகமாக 9வது இடத்தில் அமர்ந்துள்ளார் இதுவும் சாதகமாகவே உள்ளது.

விடுதலையான கனிமொழி

விடுதலையான கனிமொழி

குரு தனது 5 ஆம் பார்வையால் கும்ப ராசியை பார்ப்பதால் பெயரும் புகழும் அதிகரிக்கும். மொத்தத்தில் கனிமொழிக்கு எல்லா கிரகங்களும் சாதகமாகவே உள்ளது. சனி, குரு, ராகு கேது சாதகமாக இருந்தாலும் எல்லாம் மேலே இருக்கிறவர் பார்த்துக்குவார் என்று நம்பிக்கையுடனே இருந்தார் கனிமொழி. பெரும் போராட்டத்திற்குப் பின்னர் கனிமொழி இன்று விடுதலையாகியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+