விருச்சிக ராசியில் 5 கிரகங்கள் கூட்டணி... சூரிய கிரகணம் - எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்
விருச்சிகம் ராசியில் ஐந்து கிரகங்கள் கூடியிருக்கும் அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் வருகிறது. இந்த கிரக சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.
சென்னை: விருச்சிகம் ராசியில் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், கேது ஆகிய ஐந்து கிரகங்கள் கூடியிருக்கும் நேரத்தில் டிசம்பர் 14ஆம் தேதி முழு அமாவாசை நாளில் முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகங்களின் சேர்க்கை சூரிய கிரகணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் எப்பொழுதாவது சந்திரன் குறுக்கிடும்போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். அதே போல், சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரன் மேல் விழும்போது ஏற்படும் நிகழ்வு சந்திர கிரகணம்.
ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே இந்த நிகழ்வு ஏற்படும். ஆனால் சூரியனையும் சந்திரனையும் பழி வாங்க ராகுவும் கேதுவும் சில மணி நேரம் விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.

சூரிய கிரகண யோகம்
கிரகணங்களால் சிலருக்கு தோஷம் வரும் என்று சொல்வார்கள், தோஷத்தை விட யோகங்களே அதிகம் கிடைக்கும். டிசம்பர் 14ல் நிகழ இருக்கும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் ஜோதிடப்படி விருச்சிக ராசியில் உள்ள கேட்டை நட்சத்திரத்திலும் தனுசு ராசியில் உள்ள மூலம் நட்சத்திரத்தில் நிகழ்வதால் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடைபெறும்

விருச்சிக ராசியில் ஐந்து கிரகங்கள்
டிசம்பர் 14ஆம் தேதி நடக்கும் சூரிய கிரகணம் நிகழ்வும் நாளில் விருச்சிக ராசியில் ஐந்து கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. தந்தைக்காரகன் சூரியன், தாய் காரகன் சந்திரன், தாய்மாமன் காரகன் புதன், களத்திர காரகன் சுக்கிரன், பித்ரு காரகன் கேது ஆகிய ஐந்து கிரகங்கள் கிரகண நேரத்தில் ஒரே ராசியில் அமர்ந்திருக்கும் அமாவாசையில் கிரகணம் நிகழ்கிறது.

மேஷம்
மேஷம் ராசிக்கு எட்டாவது இடத்தில் ஐந்து கிரகங்கள் இணைந்துள்ளன. கிரகணம் விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள நட்சத்திரங்களில் நிகழ்வதால் பயப்பட தேவையில்லை. பணம், விலை உயர்ந்த பொருளை கவனமாக வைத்துக்கொள்ளவும். மன ரீதியாக சில சிக்கல்கள் இருந்தாலும் அது எளிதில் சரியாகும். சந்திராஷ்டமம் இருப்பதால் மவுன விரதம் இருப்பது நல்லது. ஆலய தரிசனம் மன அமைதியை கொடுக்கும்.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்கு ஏழாவது வீட்டில் ஐந்து கிரகணங்கள் இணைவதால் உங்களுக்கு குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உற்சாக மனநிலையில் இருப்பீர்கள். கிரகண நேரத்தில் அமைதியாக தியானம் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மிதுனம்
மிதுனம் ராசிக்கு ஐந்து கிரக சேர்க்கையும் சூரிய கிரகணமும் 6 வது இடமான நோய், எதிரி ஸ்தானத்திலும் 7வது இடமான களத்திர ஸ்தானத்திலும் நிகழ்க்கிறது. குடும்பத்தில் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. திடீர் நோய்கள் வரலாம். மறைமுக எதிரிகள் விசயத்தில் கவனம் தேவை. பொருளாதார ரீதியாக சிறப்பான பலன் கிடைக்கும். புதிய வேலைகள் கிடைக்கும் அன்றைய தினம் வேலைக்கு அப்ளை செய்யலாம்.

கடகம்
கடகம் ராசிக்கு ராசியிலிருந்து 5 வது இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஐந்து கிரக சேர்க்கையும் கிரகணமும் நிகழ்வதால் காதல், திருமண வாழ்க்கை சிறிது பாதிக்கலாம். கடந்த கால பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். மனரீதியாக சில பிரச்சினைகள் வரலாம். பிள்ளைகளால் நன்மைகள் நடைபெறும். குழந்தைகளின் கல்வியில் சற்று கூடுதல் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பொருளாதார ரீதியாக இருந்த பாதிப்புகள் நீங்கும்.

சிம்மம்
நான்காவது வீடான சுக ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் கூடியுள்ளன. கிரகங்களின் பார்வை உங்கள் ராசிக்கு 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது விழுகிறது. புதிய வேலை கிடைக்கும். புரமோசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சூரிய கிரகணம் ராசிக்கு நான்கு மற்றும் ஐந்தாம் வீடுகளில் உள்ள ராசிகளில் நிகழ்வதால் பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்திலும், அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டவும்.

கன்னி
கன்னி ராசிக்கு மூன்றாவது வீட்டில் ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. இந்த சூரிய கிரகணம் ராசிக்கு மூன்றாவது இடத்தில் நிகழ்வதால் சகோதரர்கள், சகோதரிகள் விசயத்தில் கவனம் தேவை. இளைய சகோதரருடன் பேசும் போது கவனமாக இருங்கள். சகோதரரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமங்களை தைரியத்துடன் எதிர் கொள்வீர்கள். உங்கள் பேச்சில் கவனம் தேவை.

துலாம்
உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில் ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. பொருளாதார ரீதியாக இருந்த சிக்கல்கள் நீங்கும். மன அழுத்தங்கள் குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கிரகண நேரத்தில் சில குழப்பங்கள் வரலாம் கவனம் தேவை. கணவன், மனைவி உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்
சந்திரன், சூரியன் உள்ளிட்ட ஐந்து கிரகங்கள் உங்கள் ராசியில் கூடியுள்ளன. உடல் ரீதியாக தைரியம் அதிகரிக்கும். தலைவலி பிரச்சனைகள் நீங்கும். நிதி சிக்கல்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். கிரகண நேரத்தில் வீட்டில் பூஜை செய்யுங்கள். மவுன விரதம் இருப்பது ரொம்ப நல்லது.

தனுசு
தனுசு ராசிக்கு விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டில் ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. திடீர் விரைய செலவுகள் வரும். அதை சுப செலவுகளாக மாற்றுங்கள். மனதிலும் உடலிலும் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொந்த பந்தங்களிடம் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளியூர், வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாம். கிரகணம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் ஆரம்பித்து உங்க ராசியில் உள்ள மூலம் நட்சத்திரத்தில் முடிகிறது. வீண் பேச்சுக்கள் விதண்டாவாதங்களை தவிர்க்கவும்.

மகரம்
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சொந்த பந்தங்களிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய வண்டி வாகனம் வாங்கலாம். கணவன் மனைவி இடையே சில பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

கும்பம்
உங்கள் இராசியிலிருந்து பத்தாவது வீட்டில் ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. சூரிய கிரகணம் 10 வது இடத்தில் தொடங்கி 11வது இடத்தில் முடிவுக்கு வருகிறது. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். தொழில் முதலீடுகள் செய்ய ஏற்ற நாள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத இடங்களிலிருந்து நல்ல செய்தி தேடி வரும்.

மீனம்
பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ஐந்து கிரகங்கள் கூடியுள்ளன. சூரிய கிரகணம் உங்கள் ராசிக்கு 9 மற்றும் 10ஆம் இடத்தில் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சூரிய கிரகணம் உங்களை அதிகம் பாதிக்காது, வேலை, தொழில் விசயத்தில் நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை இல்லாவிட்டால் சிக்கலை ஏற்படுத்தி விடும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications