6 விஷயம் அப்படியே நடக்கும்.. குரு வக்ர பெயர்ச்சி எல்லாத்தையும் மாற்ற போகுது.. கடக ராசிக்கு அடிதூள்
சென்னை: கடக ராசிக்கு குரு பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக 6 முக்கியமான விஷயங்கள் நடக்க போகின்றன. அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள்.
குருவின் ஒவ்வொரு பயணமும் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். சிலர் குரு வக்ர பெயர்ச்சி வாழ்க்கையின் போக்கையே கூட மாற்றம். குருவின் பெயர்ச்சியால் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள்.. அப்படியே வீழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் குரு இருக்கும் இடம்.. பார்க்கும் இடம்.. நகரும் இடத்தை பொறுத்தது.

இந்த முறை ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் கடக ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
கடக ராசிக்கு நடக்க போகும் 6 முக்கியமான பலன்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்:
1.ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம். நீங்கள் அதீதமாக வேலையில் ஈடுபடுபவர். நீங்கள் உறுதியானவர் மற்றும் சாதனைகளை கொண்டவர். பகல் கனவு காண வேண்டாம்.. செயல்களில் இறங்குங்கள் வெற்றி நிச்சயம். நீங்கள் ஓய்வு எடுப்பதை விரும்ப மாட்டீர்கள். பல ஊர்களுக்கு சென்று மக்களை பார்க்க விரும்புவீர்கள். காதல் மன்னன்.
2. தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். கணவருடன் உறவை பேணுவதில் சிக்கல் ஏற்படலாம்.
3. விவகாரம் உள்ள நிலங்களை வாங்க வேண்டாம். ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தினாலும் தலைக்கு வந்தது எல்லாம் தலை பாகையோடு சென்றுவிடும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம் உங்களுக்கே எதிராக செல்லலாம்.
4. உங்களுக்கு நிறைய பண வரவு இருக்கும். நீங்கள் எதிர்பார்த்து இருந்த இடங்களில் இருந்து எல்லாம் பணம் வரும். சமயங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து கூட பணம் உங்களை தேடி வரும்.
5. நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும். ஆனால் இந்த குரு பெயர்ச்சி காரணமாக சில கெட்ட விஷயங்களும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்க்கவும். உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு.
6. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு. கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள். பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபடுவது நல்ல பலனை தரும்.
-
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications