ஆடிப்போக வைக்கும் ஆடி மாதம்.. எல்லாம் தலைகீழாக மாறும்! 12 ராசிகளுக்கும் பலன்கள் எப்படி இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாதங்களில் முக்கியமான மாதங்களில் ஒன்றான ஆடி மாதம் நேற்று பிறந்துள்ளது. ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை ஆடி மாதம் நடக்கும்.

இந்த ஆடி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் எப்படி இருக்கும்.. அவர்களின் ராசிக்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

astrology

மேஷ ராசி: வேலையில் பணி உயர்வு கிடைக்கும். புதிய நிதி ஆண்டின் அதிக சம்பள உயர்வு கிடைக்கும். கூடுதல் வருமானத்தை நன்றாக முதலீடு செய்வது நல்லது. உடல்நல பிரச்சனைகள் வரும். உங்களுக்கு பொருளாதார ரீதியான மாற்றத்தை இந்த புத்தாண்டு கொடுக்கும். நீங்கள் இத்தனை காலம் கடுமையான கடனில் இருந்தீர்கள். முக்கியமாக பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டு வந்திருப்பீர்கள். இனி அந்த பிரச்சனை இருக்காது.

ரிஷப ராசி: ஆண் என்றால் எதையும் யோசிக்காமல் உங்கள் மனைவி பேச்சை கேட்கவும். இத்தனை காலம் நீங்கள் உங்கள் மனைவி பேச்சை கேட்காமல் போனதே இத்தனை காலம் கஷ்டப்பட்டதற்கு காரணம். இனிமேல் அந்த பிரச்சனைகள் தொடர கூடாது என்றால் உங்கள் இணையரிடம் சரண்டர் அடைந்து விடுங்கள். எதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். பொறுமையாக இருப்பதே உங்களுக்கு பிரச்சனைகள் வராமல் காக்கும். கஷ்டங்களின் கடைசி கட்டத்தில் இருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

மிதுன ராசி; எல்லா விஷயத்திலும் பொறுப்பாக இருங்கள். எதையும் யோசித்து செய்யுங்கள். ஒவ்வொரு படியையும் பார்த்து பார்த்து வையுங்கள். முக்கியமாக வேலை பார்க்கும் இடங்கள், படிக்கும் இடங்களில் பொறுப்பாக இருங்கள். ஒவ்வொரு முடிவையும் மிக கவனமாக வையுங்கள். உங்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்யும். உங்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு வயிற்று பிரச்சனை, குடல் பிரச்சனை, கிட்னி பிரச்சனைகள் இருக்கலாம். இனிமேல் அப்படி பிரச்சனைகள் உங்களுக்கு வராது. ஆரோக்கியத்தில் இனி நல்ல காலம் பிறக்கும்.

கடகம் ராசி: கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு ஆரோக்கிய ரீதியா சில பிரச்சனைகள் வரும். திருமண வாழ்க்கையில் நிலவிய சில பிரச்சனைகள் சரியாகும். பிரிந்து இருந்த கணவன் உங்களுடன் சேரும் வாய்ப்புகள் உள்ளன. மாதவிடாய் பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படலாம். உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். எதையும் யோசித்து பேசுங்கள். தேவையில்லாமல் சண்டை போடாதீர்கள்.

சிம்மம் ராசி: வெளிநாட்டிற்கு செல்ல விரும்பும் நபர்களுக்கு அதுவும் நடக்கும். கல்வி ரீதியாக மாற்றம் பெற வேண்டி வேறு கல்விக்கூடம் செல்ல விரும்பினால் அதுவும் நடக்கும். நீங்கள் பார்த்த வேலையில் மாற்றம் ஏற்படும். நீங்கள் பணிமாறுதல் செய்ய விரும்பினால் அது ஏற்படும். இடமாறுதல் செய்ய விரும்பினால் அது மாறும் எல்லா மாற்றமும் வர கூடிய இந்த வருஷத்தில் கொஞ்சமும் அலட்சியமாக இருக்காதீர்கள். எதையும் பார்த்து பார்த்து செய்யுங்கள். ஒரு மெசேஜ் அனுப்பினால் கூட இரண்டுக்கு மூன்று முறை சோதனை செய்து பார்த்துவிட்டு மெசேஜ் அனுப்புங்கள்.

கன்னி ராசி: புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் வரும். நிலம் வீடு வாங்கலாம். தங்கம் வாங்கலாம். குடும்பத்தில் நிலவிய சொத்து பிரச்சனை. நில பிரச்சனை தீரும். அப்பா மகன் இடையிலான உறவு சரியாகும். உங்கள் பெண்ணின் வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகளும் சரியாகும். விவாகரத்து வரை சென்ற உங்களின் பெற்றோர் சேர கூட வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலம் பேசாமல் இருந்த சொந்தங்கள் பேசும்.

துலாம் ராசி; எதிலும் அலட்சியம் வேண்டாம். அடுத்த 15 நாட்களை கடந்து விடுங்கள். புத்தாண்டு குருபெயர்ச்சியும் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும் என்றாலும்.. எந்த காரியமும் நடக்காமல் போகாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக அந்த காரியம் நடக்கும். எதுவும் நல்லதே நடக்காதா.. தடங்கல்கள் மட்டுமே வருமா என்று கேட்க வேண்டாம். சில நல்ல விஷயங்களும் நடக்க போகின்றது. குழந்தைப்பேறுக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் கைகூடும்.

விருச்சிகம் ராசி: காசு எவ்வளவு வந்தாலும் பணம் கையில் இருக்காது. வருகின்ற பணம் எல்லாம் செலவிற்கே போதுமானதாக இருக்கும். இதை சமாளிக்க நீங்கள் சுப செலவுகளை செய்யலாம். உங்களின் சேர்க்கையில் கவனம் வேண்டும். யாருடன் நட்பாக இருக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். கூடாது சேர்க்கை பல பிரச்சனைகளை, ஆபத்துகளை ஏற்படுத்தும்.

தனுசு ராசி: நீங்கள் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து எல்லாம் பணம். முக்கியமாக இந்த புதிய நிதி ஆண்டில் வருமானம் புதிய உச்சத்தை தொடும். பணத்தை நல்ல இடங்களில் முதலீடு செய்யவும். நீங்கள் வேலையில், படிப்பில் அசத்த போகிறீர்கள். அரியணையில் ஏறும் காலம் ஏற்படும். உங்களுக்கு குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீரும்.கணவன் மனைவி பிரச்சனை தீரும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும்.அப்பா உடன் இருந்த பிணக்கு சரியாகும். உங்கள் தங்கை, அக்காவின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட சரியாகும்.

மகரம் ராசி: நிலம் வாங்கும் ராசியும் இருக்கிறது. நீங்கள் சுப செலவு காரணமாக திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம். இந்த காலத்தில் குடும்பத்திரிடம் அன்பாக இருங்கள். அவர்களிடம் சண்டை போட வேண்டாம். அம்மா அப்பாவிடம் அன்பாக இருங்கள். மனைவியிடம் கோபம் கொள்ள வேண்டாம் .

துலாம் ராசி: நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் சண்டைகள் வரலாம். முக்கியமாக கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்படும். போக்குவரத்தில் கவனமாக இருங்கள். நீங்கள் வேலையில், படிப்பில் அசத்த போகிறீர்கள். அரியணையில் ஏறும் காலம் ஏற்படும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு

மீனம் ராசி; உங்களுக்கு அதிகமாக கெட்ட எண்ணம் பிறக்கலாம். அதனால் கெட்ட எண்ணம் வந்தால் உடனே மறந்துவிடுங்கள். மற்றவர்களை காலி செய்யும் கெட்ட எண்ணம் வேண்டாம். யாரையும் பற்றி தவறாக யாரிடமும் பேச வேண்டும். கொஞ்சம் வாயை குறைத்துக்கொள்ளுங்கள் கடக ராசிக்காரர்களே. யோசித்து பேசுங்கள். திருமண உறவில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். அவசரப்பட்டு பெண், ஆண் பார்க்க வேண்டாம். மண வாழ்க்கையை யோசித்து முடிவு எடுக்கவும். முக்கியமாக ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் திருமண உறவில் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+