ஆடி மாத ராசி பலன் 2020: அற்புதங்களும் அதிசயங்களும் இந்த 6 ராசிக்காரர்களுக்கு நடக்கும்

ஆடி மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதம் ஆன்மீக அலைகள் நிரம்பிய மாதம். ஆடி மாதத்தில் ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஆன்மீக அலைகள் நிறைந்த ஆடி மாதத்தில் துலாம், விரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி மாதம் சூரியன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தமிழ் ஆண்டின் நான்காவது மாதமான கடக மாதம் தட்சிணாயண புண்ணிய காலம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் காற்றும் மழையும் பூமி குளிர பெய்யும். ஆடி மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதம் ஆன்மீக அலைகள் நிரம்பிய மாதம். ஆடி மாதத்தில் ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஆன்மீக அலைகள் நிறைந்த ஆடி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன் எப்படி என்று பார்க்கலாம்.

தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். ஆடி மாதத்தை பீடை மாதம் என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், பீட மாதம் என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது. ஆன்மீக மாதமான ஆடி மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அற்புதமான மாதம். செய்யும் தொழிலில் லாபம் வரும். வெற்றிகள் தேடி வரும். சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஒன்பதாம் வீட்டில் ராகு சுக்கிரன் இணைவு வெற்றியும் லாபமும் வரும். அதிர்ஷ்டம் தேடி வரும். யோக காரகன் ராகு உடன் உங்க ராசி நாதன் ஒன்பதாம் வீட்டில் இணைவதால் ராஜ யோகம் வரப்போகிறது. முயற்சி ஸ்தானத்தில் குரு கேது சஞ்சரிப்பதால் தடைபட்ட காரியம் தடைகள் நீங்கி உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். மாத பிற்பகுதியில் நிறைய அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கப் போகிறது. வளர்ச்சிகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த பயம் நீங்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரரிகளுக்கு நிறைய லாபம் வரும். வரப்போகும் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டில் கணவன் மனைவி பிரச்சினை இருந்திருக்கும் மனசு விட்டு பேசுங்க. நோய் தொற்றுள்ள பகுதிகளில் இருப்பவர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுங்க. உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. குடும்ப உறுப்பினர்கள் கிட்ட பொறுமையாகவும் நிதானமாகவும் பேசுங்க. உங்க குடும்பத்தினரோட ஆதரவு கிடைக்கும். உங்க லட்சியத்தோட பயணத்தை வெற்றிகரமாக முடிப்பீங்க. வண்டி வாகன வாங்கும் யோகம் வரும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். பெண்கள், இல்லத்தரசிகளுக்கு நன்மைகள் நடக்கும். திருமண வயதில் காத்திருப்பவர்களுக்கு யோகம் கைகூடி வரப்போகுது. ஆடிப்பூர நாளில் ஆண்டாள் வழிபாடு அவசியம் பண்ணுங்க. வரலட்சுமி விரத வழிபாடும் அவசியம் பண்ணுங்க ரொம்ப நல்லது நடக்கும். சனி பிரதோச நாளில் சிவ பெருமானை நினைத்து வீட்டில் விளக்கேற்றுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

ஆடி மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதங்களை அள்ளித்தரப்போகிறது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் மனதில் உற்சாகத்தை தரப்போகிறது. பாக்ய ஸ்தானத்தில் சூரியன், அஷ்டம ஸ்தானத்தில் ராகு, புதன், ஏழாம் வீட்டில் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் செவ்வாய், மூன்றாம் வீட்டில் சனி, இரண்டாம் வீட்டில் குரு கேது என கிரகங்கள் சஞ்சரிப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். வீட்டை விட்டு வெளியூரில் இருப்பவர்களுக்கு பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். குருவின் பயணம் நன்மையை கொடுக்கும். பணவரவு அபரிமிதாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் வாய்ப்புகள் தேடி வரும். சமுதாயத்தில் செல்வம் செல்வாக்கு உயரும். கணவன் மனைவி உறவில் மனக்கசப்புகள் வந்து நீங்கும். இல்லத்தரசிகள் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். எதிலும் எச்சரிக்கையோடு இருங்க. மாத பிற்பகுதியில் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். எதிர்பாலினத்தவர்களிடம் கவனமாக பழகுங்கள். வீண் பழிகள் வந்து சேரும். காரணம் அஷ்டம ஸ்தானத்தில் ராகு சுக்கிரன் சஞ்சாரம் சாதகத்தை கொடுக்காது. பணம் விசயத்திலும், விலை உயர்ந்த பொருட்களிலும் கவனமாக இருங்க. நண்பர்களிடத்தில் கவனமாக இருங்க. தேவையில்லாத அவமானங்கள் வரலாம் விழிப்புணர்வோட இருங்க. வண்டி வாகனங்களில் கவனமாக இருங்க. குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க. வீட்டில் எலுமிச்சை வெட்டி நிலைவாசற்படியில் வைக்கவும். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு

தனுசு

சூரியன் உங்க ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சில சங்கடங்கள் ஏற்படலாம், உங்க ராசியில் குரு, கேது, இரண்டாம் வீட்டில் சனி, நான்காம் வீட்டில் செவ்வாய், ஆறாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு,புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. செய்யும் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படும். பண விசயத்தில் வாக்கு கொடுக்காதீர்கள். சொந்த பந்தங்களிலும் பேசும் போது கூட எச்சரிக்கையாக இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய்கள் தீரும். சிக்கல்கள் தீரும் என்றாலும் பயணங்களில் கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாதீர்கள். இருக்கிற வேலையில் கவனமாக இருங்க. பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். வியாபாரிகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். ஏழரை சனியில் பாத சனி படுத்தி எடுக்கும் என்பதால் சனி பிரதோச நாளில் சிவ பெருமானை வழிபடுங்க. பெண்கள் கவனமாக இருங்க முன்னெச்சரிக்கையாக இருங்க. விழிப்புணர்வோடு இருங்க. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேருவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை கூடும். பெண்கள் தங்க நகைகள் வாங்குவீர்கள். சுப செலவுகள் செய்வீர்கள். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திடீர் திருமண யோகம் வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கைகூடி வரப்போகிறது. பெரியவர்களுடன் ஆலோசனை செய்து அப்ளை பண்ணுங்க. ஆடி அமாவாசை நாளில் குல தெய்வ வழிபாடு பண்ணுங்க.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகரமான மாதம். தொழில் வியாபாரத்தில் நிறைய லாபமும் நன்மைகளும் ஏற்படும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிரிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கும். ஏழாம் வீட்டில் இருக்கும் சூரியன், புதன் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் இந்த மாதம் சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் வரலாம் கவனமாக இருங்க. புது வீடு கட்டும் யோகம் வந்து விட்டது இந்த மாதம் வாஸ்து செய்யலாம். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மிகப்பெரிய யோகம் வரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு வருமானம் அதிகரிப்பதால் கடன் பிரச்சினைகள் தீரும். வேலை செய்பவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க. பெண்கள் இல்லத்தரசிகளுக்கு இது மகிழ்ச்சிகரமான மாதம். கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகரிக்கும். இந்த மாதம் திருமண முயற்சிகள் வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. ஆடிக்கிருத்திகை நாளில் முருகனை வழிபடுவது நன்மையை கொடுக்கும். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து திதி கொடுங்க. சனி பகவனால் ஏற்படும் பிரச்சினை தீர சிவன் கோவிலில் நடைபெறும் சனி பிரதோசத்தில் கலந்து கொள்ளுங்கள். தடைகள் நீங்கி நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

ஆடி மாதம் கும்பம் ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் வரப்போகிறது. எந்த காரணத்திற்காகவும் கூட்டுத்தொழில் செய்யாதீர்கள். கணவன் மனைவி இடையே உறவில் சிறு சிறு உரசல் ஏற்படும் கவனமாக பேசுங்க. கோபத்தை கட்டுப்படுத்துங்க பேச்சில கவனமாக இருங்க. குடும்ப ஸ்தானத்தில செவ்வாய் இருக்கிறார். சூடான வார்த்தைகளை தவிர்த்து விடுங்க. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு வியாபாரத்தில் லாபம் வரும். நல்ல செய்திகள் தேடி வரும். புதிய தொழில் வாய்ப்புகள் வரலாம் பயன்படுத்திக்கங்க. பொறுமையும் நிதானமும் இருந்தால் நினைத்தது நடக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கையால் நன்மைகள் அதிகம் நடக்கும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சமூகத்தில் உங்க கவுரவம் உயரும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சண்டை சச்சரவு வந்தாலும் பொறுமையாக இருங்க. திடீர் ராஜயோகமும், திருமண யோகமும் கைகூடி வரும். இந்த மாதம் மறக்காம குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க நல்லதே நடக்கும். நினைத்ததை சாதிப்பீங்க.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் நிறைய நன்மைகளைத் தரப்போகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த மாதம் பணவரவு அற்புதமாக இருக்கும். ஆடி அமாவாசை நாளில் மறைந்த அம்மாவை நினைத்து தானம் பண்ணுங்க. பித்ரு தர்ப்பணம் நன்மையை கொடுக்கும். சுக்கிரன் ராகு பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழிலில் லாபம் வரும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை தரும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பேச்சில் கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆடி 18ஆம் தேதிக்கு மேல் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் மாற்றம் வெற்றிகரமாக இருக்கும். இல்லத்தரசிகள், பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு சொத்து வாங்கும் யோகம் வரப்போகிறது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நோய் பயம் நீங்கும் இதுநாள் வரை வயிற்றில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். வெள்ளிக்கிழமை லட்சுமி பூஜை மறக்கமாக பண்ணுங்க. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் தேடி வரப்போகிறது. தந்தையின் ஒத்துழைப்பு அற்புதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+