ஆனி மாத ராசி பலன் 2023: மிதுனத்தில் பெயர்ச்சியாகும் சூரியன்..அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் யார்?
சென்னை: ஆனி மாதம் மிதுன மாதம் எனப்படும். நவ கிரகங்களில் அரச கிரகமான சூரியன் மிதுனம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி ஒரு மாதம் பயணம் செய்யும் மாதம் ஆனி மாதம். சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில் தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு: சூரியன் ஏழாமிடத்தில் பயணம் செய்யப்போவதால் உத்தியோகத்தில் அலுவலக இடமாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது ஊடலுடன் கூடல் வரும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முயற்சிகள் சாதகமாக முடியும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சாந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை நடக்கும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகளுக்குப் பிறகு நன்மையில் முடியும். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் சின்ன காயம் வந்தால் கூட கவனித்து மருத்துவ ஆலோசனை மேற்கொள்வது அவசியம்.
மகரம்: சூரியன் ஆறாமிடத்தில் பயணம் செய்யப்போவதால் நீங்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். சூரியன் மட்டும் அவ்வப்போது மனச்சோர்வு, உடல் சோர்வை தருவார். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பணவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கூடுதல் விழிப்புணர்வும் தேவை. சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும். சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட ம் கைகூடி வரும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருள்களை வாங்குவீர்கள். உறவினர்களால் அடிக்கடி பிரச்சினை வரும் பேச்சில் கவனமாக இருங்க. திருமண வாழ்க்கை சந்தோசத்தை தரும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணப்புழக்கம் கூடும். வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
கும்பம்: உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சூரியன் பயணம் செய்யப்போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் புதனும் இணைவதால் செழிப்பான காலம். உங்களின் பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். பண வரவு திருப்தியை தரும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பெண்களால் நன்மை ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கை கூடி வரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் உள்ளவர்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல செய்திகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். சுப செலவுகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் காட்டுங்கள். உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படும் கவனம் தேவை.

மீனம்: சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்கும். பிள்ளைகளால் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது. தேவையான பணம் கிடைக்கும். பொருளாதார நிலை உயர சிக்கனம் தேவை. உயர் படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் இருப்பவர்களுக்கு தடைகளை தாண்டி பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications