Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது..அனுபவிக்கத் தயாராகுங்கள்

மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இது மிதுன மாதம் என்றும் அழைக்கலாம். ஆனி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்,மீன ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று பார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாதங்களில் சித்திரை வருடப்பிறப்பு தொடங்கி வரும் மூன்றாவது மாதம் ஆனி மாதமாகும். மிக நீண்ட மாதமாக ஆனி மாதம் இருக்கிறது. இந்த மாதத்திற்கு 32 நாட்கள் உள்ளது. சூரியனின் வடதிசைப் பயணக் காலமான உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இது மிதுன மாதம் என்றும் அழைக்கலாம். கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தினால் ஆனி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்,மீன ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

ஆனி மாதத்தில் சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். 32 ஆம் தேதி கடக ராசிக்கு இடம் பெயர்கிறார்.
ரிஷப ராசியில் இருக்கும் புதன்,18 ஆம் தேதி மிதுன ராசிக்கு சென்று 32 ஆம் தேதி கடக ராசியில் அமர்கிறார்.
மேஷ ராசியில் நிற்கும் சுக்கிரன் 4ம் தேதி ரிஷப ராசிக்கு மாறி 29 ஆம் தேதி மிதுன ராசிக்கு செல்கிறார்.

மீன ராசியில் இருக்கும் செவ்வாய் 12ஆம் தேதி மேஷ ராசிக்கு இடம் பெயர்கிறார். கும்ப ராசியில் இருக்கும் சனி வக்ரம் அடைந்து 28 ஆம் தேதி மகர ராசிக்கு வருகிறார். நவகிரங்களின் சஞ்சாரத்தினால் இந்த 6 ராசிக்காரர்களில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போவது யார் என பார்க்கலாம்.

துலாம்

துலாம்

தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
ஆனி மாதத்தில் உங்களுக்கு தோணி போல ஒரு நண்பர் கிடைப்பார். அவரின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கலை விரைந்து முடிப்பீர்கள். தொழிலுக்கு இருந்த இடையூறுகள் விலகினாலும் வியாபாரம் சுமாராகவே நடக்கும். நவீன பொருட்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். குடும்பத் தேவைக்காக வங்கிச் சேமிப்பை உயர்த்துவீர்கள். தொழிலில் நேர்மையைக் கடைப்பிடிப்பீர்கள். கமிஷன் தொழில் கணிசமான லாபத்தைக் கொடுக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டாம். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் உண்டாகும். வாகனங்களில் போகும் போது மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
ஆனி மாதத்தில் காணி நிலமாவது வாங்க வேண்டுமென்று கடினமாக உழைப்பீர்கள். புதிய வீடு கட்டுவதற்காக நீங்கள் போட்ட திட்டம் நிறைவேறும். நீண்டகாலமாக ஆசைப்பட்ட பொருளை இல்லத்தரசிக்கு வாங்கிக் கொடுத்து அசத்துவீர்கள். வெளிநாட்டில் இருந்து தக்க சமயத்தில் தொழிலுக்கு உதவி கிடைக்கும். பங்குச்சந்தை வியாபாரம் சற்று மந்தமாகவே நடக்கும். ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக அனுகூலம் பார்க்க முடியாது. சில்லரை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவார்கள். கட்டுமானத் தொழில் விறுவிறுப்பாக நடக்கும். தினசரித் தொழிலாளர்கள் ஓய்வில்லாமல் உழைப்பார்கள். வேலையிடப் பிரச்சினையை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். மன நிம்மதியைக் கெடுத்து விடும். புதிய வாகனம் வாங்க முயற்சி செய்வீர்கள். வேலைப்பளுவால் அலைச்சல் அதிகமாகும்.

தனுசு

தனுசு


வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
ஆனி மாதத்தில் அற்புதமான பலன்களைப் பார்க்கப் போகிறீர்கள். தலையை அடகு வைத்தாவது கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். உறுதியாக நின்று குடும்பத்தில் சுப நிகழ்ச்சியை நடத்திக் காட்டுவீர்கள். தாய்வழி உறவினர்கள் உங்களுக்குச் சங்கடத்தைத் தருவார்கள்‌. அரசு ஊழியர்களுக்கு இருந்த கெடுபிடியான நிலை மாறும். ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஜோதிடர்கள் மேன்மையான பலனைக் காண்பார்கள். தொழிலில் கிடைக்கும் உபரி வருமானத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். உங்களுக்கு ஜால்ரா போடும் நபர்களிடம் இருந்து ஒதுங்கி இருங்கள். எவ்வளவுதான் அனுசரித்துப் போனாலும் கணவன்-மனைவிக்கிடையே கசப்புணர்வு இருக்கத்தான் செய்யும்.

மகரம்

மகரம்

வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
ஆனி மாதம் ஏணியாக நின்று பல ஏற்றங்களைத் தரப்போகிறது. வருமானத்தை அதிகரித்து வசதியை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்குவீர்கள். முன்பு வாங்கிய சொத்தில் இருந்த வில்லங்கம் விலகிப் போகும். திருமணத்திற்காக வரன் தேடி வந்தவர்களுக்கு யோகம் உண்டாகும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் பொதுப் பிரச்சினையில் இருந்த சிக்கலைத் தீர்ப்பீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றமும் அலைச்சலும் ஏற்படலாம். பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை வந்து கஷ்டப்படுத்தலாம். மோட்டார் சைக்கிளில் செல்லும் போது முழுக்கவனமும் சாலையில் இருக்க வேண்டும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். மனதை அலைபாய விடாமல் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

கும்பம்

கும்பம்

சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
ஆனி மாதத்தில் அவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் அருமையான வாய்ப்புக் கிடைக்கும். உடன்பிறந்த சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். படிப்பு, வேலை காரணமாக பிள்ளைகள் குடும்பத்தைப் பிரிய வேண்டிய நிலை உருவாகும். வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். ஆசிரியர்கள், வழக்கறிஞர், ஆய்வாளர்கள் வேலைத் திறனால் மதிப்பை உயர்த்திக் கொள்வார்கள். புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலம் இது. அரசு வேலைக்காக முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி உண்டாகும். மூட்டு வலி வந்து நடப்பதற்கு சிரமத்தைக் கொடுக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக புதிய முதலீடுகள் செய்வீர்கள். உங்களிடம் கடன் வாங்கியவர் வீடு மாறி சென்று இம்சையை ஏற்படுத்துவார். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வெற்றி காண்பீர்கள்.

மீனம்

மீனம்

பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
ஆனி மாதத்தில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கான பலன்களைக் கண்டிப்பாக அடைவீர்கள்‌. அரசியல்வாதிகளின் அறிமுகத்தால் தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் கூட நல்ல லாபம் பார்க்கும் காலம் இது. இழந்ததை அடையக் கூடிய அளவுக்கு ஏற்றமாக வருமானம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகி மனநிம்மதி உண்டாகும். வங்கியிலிருந்து எதிர்பார்த்த நிதி உதவி தடங்கல் இல்லாமல் வந்து சேரும். போட்டி பந்தயங்கள் சிறப்பாக இருக்காது. ஆன்லைன் சூதாட்டம் கையிருப்பைக் காலி செய்துவிடும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். கவனக்குறைவால் சில நேரங்களில் விபத்து ஏற்படலாம். பட்டப்படிப்பு குறித்த மாணவர்களின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் நிறைவேறும்.


உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+