அறிவோடு பொருளையும் அள்ளித்தரும் ஆனி மாதம்
உத்திராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி! ஆன்மிகச் சிறப்புகள் கொண்ட மாதமிது. தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதனை மிதுன மாதம் என்றும் அழைப்பர். வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள்.
ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.

சிதம்பரத்தில் ஆடலரசனாக எழுந்தருளியுள்ள ஆடலரசனுக்கு ஆனித்திருமஞ்சனம் நடைபெறுவது இந்த மாதத்தில்தான். பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்து நாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத் திருவிழா. ஆனி மாதம் உத்தர நட்சத்திரதன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.
ஆனி மாதம் பௌர்ணமி அன்று கடைப்பிடிக்கப்படும் சாவித்ரி விரதம், பிரம்மனின் பத்தினியான சாவித்ரிதேவியை வேண்டிச் செய்யப்படுகிறது. இதைக் கடைப்பிடிக்கும் பெண்கள் திருமாங்கல்ய பலம், சர்வ ஐஸ்வரியங்கள், பேரன்- பேத்தி காலம் வரை நீண்ட ஆயுள் உள்ளவர்களாக இருப்பர்.
இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஆனிமாதத்தில் 12 ராசிகாரர்களுக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.
கிரகங்களின் ராசி மாற்றம்:
சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - ராசி மாற்றம் இல்லை
புதன் - ஆனி 20ம் தேதி மிதுனம் ராசிக்கு மாறுகிறார்.
குரு - ஆனி 29ம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்.
சுக்கிரன் -ஆனி 20ம் தேதி சிம்மம் ராசிக்கு மாறுகிறார்.
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு-கேது - ராசி மாற்றம் இல்லை
மேஷம்:
சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார் அப்பாவினால் அனுகூலமுண்டு அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார் சகோதரர்களால் யோகம் உண்டாகும், பதவி உயர்வு கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சனி பார்வையுடன் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், கல்வி மேன்மையடையும் 20ம் தேதிக்குப் பிறகு தாய்மாமனின் ஆதரவு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சுக்கிரனுடன் சேர்ந்தும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் வீடு வாங்கும் யோகம் உண்டாகும், பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் தங்க நகைகள் சேர்க்கை அதிகரிக்கும், புதிய அழகான வாகனம் வாங்குவீர்கள் 20ம் தேதிக்குப் பிறகு கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் புதன், குரு மற்றும், ராகு பார்வையுடன் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும், சட்ட ரீதியாக உயில் மூலம் சொத்துகள் கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில
செவ்வாய் பார்வையுடன் இருக்கிறார் நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய் நொடிகள் குணமாகும், கடன்கள் அடைபடும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரண்டாமிடத்தில் குரு பார்வையுடன் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள், தான தர்மம் செய்யும் நிலை உருவாகும்.
ரிஷபம்:
சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார் அரசு வகை வருமானம் அதிகரிக்கும், அதிகாரப் பதவி தேடி வரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார் வீடு வாங்கும் யோகம் உண்டாகும், நெருப்பு சம்பந்தப்பட்ட தொழிலிலிருந்து நல்ல வருமானம் கிடைக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் சனி பார்வையுடன் இருக்கிறார் தாய்மாமன் உதவி கிடைக்கும், வியாபாரம் மேன்மையடையும் 20ம் தேதிக்குப் பிறகு கல்வியில் சிறப்பு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சுக்கிரனுடன் சேர்ந்தும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும், கடிதப் போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும்.
ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் வீட்டிற்கு விருந்தினர் வருகை அதிகரிக்கும், வீட்டை அழகுபடுத்துவீர்கள் 20ம் தேதிக்குப் பிறகு மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் புதன், குரு மற்றும், ராகு பார்வையுடன் இருக்கிறார் நண்பர்களால் பண வரவு உண்டாகும், மனைவி மூலம் சொத்துகள் கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் செவ்வாய் பார்வையுடன் இருக்கிறார் பூர்வீக சொத்துகள் கிடைக்கும், உல்லாசப் பயணம் செய்யும் நிலை உருவாகும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் குரு பார்வையுடன் இருக்கிறார் நினைப்பதெல்லாம் எளிதில் நிறைவேறும்.
மிதுனம்:
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார் பொது சேவை செய்யும் எண்ணம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார் காவல்துறை ராணுவம் தொடர்பான தொழில்கள் சிறக்கும், மன தைரியம் அதிகரிக்கும். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் சனி பார்வையுடன் இருக்கிறார் வெளிநாட்டு வியாபாரதொடர்பு சிறப்படையும், படிப்புக்காக செலவுகள் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பிறகு தகவல் தொடர்பில் சிறப்பு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சுக்கிரனுடன் சேர்ந்தும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் படிப்பு சிறக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் மனைவியால் பணவரவு அதிகரிக்கும், பேச்சில் வசீகரம் அதிகரிக்கும் 20ம் தேதிக்குப் பிறகு வாகன யோகம் உண்டாகும்.
சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் புதன், குரு மற்றும், ராகு பார்வையுடன் இருக்கிறார் தொழிலில் மேன்மை உண்டாகும், பழைய கடன்கள் வசூலாகும் ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் செவ்வாய் பார்வையுடன் இருக்கிறார் வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும், அம்மாவின் ஆதரவு கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் குரு பார்வையுடன் இருக்கிறார் எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
கடகம்:
சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார் அரசு வகையில் செலவுகள் அதிகரிக்கும், அரசுமுறை பயணம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும், உடல் பலமடைவதற்க்காக செலவு செய்வீர்கள். புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சனி பார்வையுடன் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும், கல்வி நிலை மேன்மையடையும் 20ம் தேதிக்குப் பிறகு மாமனுடன் நல்லுறவு உண்டாகும். குரு உங்கள் ஜென்மராசியில் சுக்கிரனுடன் சேர்ந்தும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் மனதில் அமைதி நிலை உண்டாகும், அனைவருடனும் நல்லுறவு நீடிக்கும்.
சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் குருவுடன் சேர்க்கை பெற்றும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் முகவசீகரம் அதிகரிக்கும், அனைவரும் நட்பு பாராட்டுவார்கள். 20ம் தேதிக்குப் பிறகு பெண்களால் யோகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் புதன், குரு மற்றும், ராகு பார்வையுடன் இருக்கிறார் குழந்தைகளின் படிப்பில் கவனம் தேவை, விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் செவ்வாய் பார்வையுடன் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும், சகோதரர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் குரு பார்வையுடன் இருக்கிறார் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள்.
சிம்மம்:
ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும், அப்பாவின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார் சீருடைப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், இயந்திரத்தொழில் சிறப்படையும். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சனி பார்வையுடன் இருக்கிறார் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும், புதிய வியாபார நிறுவனம் துவங்குவீர்கள் 20ம் தேதிக்குப் பிறகு கடிதப் போக்குவரத்து சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் சுக்கிரனுடன் சேர்ந்தும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் குழந்தைகளுக்காக அதிகம் செலவாகும், பணத்தை கையாளுவதில் கவனம் தேவை.
சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும், உல்லாசப் பயணம் செல்வீர்கள் 20ம் தேதிக்குப் பிறகு ஆடம்பரப் பொருட்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் புதன், குரு மற்றும், ராகு பார்வையுடன் இருக்கிறார் விவசாயிகளுக்கு தொழில் சிறக்கும், வாகனச் செலவுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் செவ்வாய் பார்வையுடன் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும், குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் குரு பார்வையுடன் இருக்கிறார் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும் கவனம் தேவை.
கன்னி: சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார் ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும், எல்லா செயல்களுக்கும் சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சனி பார்வையுடன் இருக்கிறார் தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்ற கோயில்களுக்கு செல்வீர்கள், நீண்ட தூரபயணம் மேற்கொள்வியர்கள் 20ம் தேதிக்குப் பிறகு உயர்கல்வி சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சுக்கிரனுடன் சேர்ந்தும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும், வங்கி சேமிப்பும் அதிகரிக்கும்.
சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் பெண்களால் யோகம் உண்டாகும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். 20ம் தேதிக்குப் பிறகு பெண் குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் புதன், குரு மற்றும், ராகு பார்வையுடன் இருக்கிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும், உத்தியோகத்திற்காக பயணம் மேற்கொள்வீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய் பார்வையுடன் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும், அதிரடியாக சில செயல்களை மேற்கொள்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் குரு பார்வையுடன் இருக்கிறார் தொழில் முறை கூட்டாளிகளினால் நற்பலன் உண்டாகும்.
துலாம்:
சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார் வாரிசு அடிப்படையில் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும், அறநிலையத்துறையில் வேலைகிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார் பூர்வீக வீடு நிலம் போன்றவற்றில் உங்களுக்கு பங்கு கிடைக்கும், எடுத்த காரியமெல்லாம் வெற்றி பெறும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சனி பார்வையுடன் இருக்கிறார் மறைந்த புதன் நிறைந்த கல்வி என்ற அடிப்படையில் புதிய துறையில் கல்வி பயில ஆர்வம் உண்டாகும் 20ம் தேதிக்குப் பிறகு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் சுக்கிரனுடன் சேர்ந்தும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் புதிதாக தொழில் துவங்குவீர்கள், வியாபாரம் விருத்தியடையும் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் மனைவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், அழகு சாதன பொருட்கள், துணிமணிகள் வியாபாரம் சிறப்பாக இருக்கும் 20ம் தேதிக்குப் பிறகு கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் புதன், குரு மற்றும், ராகு பார்வையுடன் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், புதிய நிலம் வீடு வாங்குவதற்கு உகந்த காலம். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் செவ்வாய் பார்வையுடன் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும், தந்தை வழி தாத்தா வகையில் செலவுகள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் குரு பார்வையுடன் இருக்கிறார் நோய் நொடிகளின் தொல்லை ஒழிந்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.
விருச்சிகம்:
சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார் அரசு அதிகாரிகளால் தொல்லை உண்டாகும், அப்பாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும், வாகனங்களைக் கையாளும்பொழுது கவனம் தேவை. புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சனி பார்வையுடன் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும், தாய்மாமன் ஆதரவு உண்டாகும் 20ம் தேதிக்குப் பிறகு கூட்டுத் தொழில் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சுக்கிரனுடன் சேர்ந்தும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் பணவரவு அதிகரிக்கும், குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் குடும்பத்துடன் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், திருமண வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். 20ம் தேதிக்குப் பிறகு தொழில்முறை லாபம் அதிகரிக்கும்.
சனி உங்கள் ஜென்ம ராசியில் புதன், குரு மற்றும், ராகு பார்வையுடன் இருக்கிறார் மன தைரியம் அதிகரிக்கும், தொழிலில் உத்வேகம் பிறக்கும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் செவ்வாய் பார்வையுடன் இருக்கிறார் எடுத்த காரியமெல்லாம் வெற்றியடையும், பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.. கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் குரு பார்வையுடன் இருக்கிறார் குழந்தைகளின் கல்வியில் மேன்மை உண்டாகும்.
தனுசு:
சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார் அரசாங்கத்துடன் செய்துள்ள ஒப்பந்ததொழிலில் சிறப்படையும், வைத்தியத்தொழில் சிறப்படையும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார் அண்ணன் தம்பிகளுடன் நல்லுறவு உண்டாகும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சனி பார்வையுடன் இருக்கிறார் வியாபாரத்திற்காக கடன் வாங்குவீர்கள், மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் 20ம் தேதிக்குப் பிறகு கமிஷன் வியாபாரம் தொழில் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் சுக்கிரனுடன் சேர்ந்தும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும், குழந்தைகளால் மன கஷ்டம் உண்டாகும்.
சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும், பெண்களால் கஷ்டம் உண்டாகும் 20ம் தேதிக்குப் பிறகு கஷ்ட நஷ்டங்கள் குறையும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் புதன், குரு மற்றும், ராகு பார்வையுடன் இருக்கிறார் தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள், தொழிலுக்காக வெளியூர் செல்லும் நிலை உருவாகும்.. ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் செவ்வாய் பார்வையுடன் இருக்கிறார் தைரியமாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள், தொழிலில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் குரு பார்வையுடன் இருக்கிறார் தாய்வழி பாட்டி வகையில் நன்மை உண்டாகும்.
மகரம்:
சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார் அப்பாவுக்காக கடன் வாங்க நேரிடலாம், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் உருவாகலாம். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார் அண்ணன் தம்பிகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும், நிலபுலன்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சனி பார்வையுடன் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உருவாகும், வியாபாரத்தில் விருத்தி உண்டாகும் 20ம் தேதிக்குப் பிறகு மாமன் உறவு சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சுக்கிரனுடன் சேர்ந்தும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும், புத்தி சாதுரியம் அதிகரிக்கும் சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் மனைவியால் அதிர்ஷ்டம் உண்டாகும், பெண்களால் நன்மை உண்டாகும் 20ம் தேதிக்குப் பிறகு திடீர் யோகம் உண்டாகும்.
சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் புதன், குரு மற்றும், ராகு பார்வையுடன் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும், பணியாட்கள் திறமையுடன் வேலை செய்வார்கள்.. ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் செவ்வாய் பார்வையுடன் இருக்கிறார் தந்தை வழி முன்னோர்களின் ஆதரவு கிடைக்கும், தொலைதூரப் பயணம் மேற்கொள்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் குரு பார்வையுடன் இருக்கிறார் சகோதரர்களின் வகையில் நன்மை உண்டாகும்.
கும்பம்:
சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார் போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், அரசாங்க நிறுவனங்களுடன் தொழில் ஒப்பந்தம் உண்டாகும், செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார் வாரிசுகளுக்கு உயர் பதவி கிடைக்கும், பூர்வீக சொத்துகள் கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சனி பார்வையுடன் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் சிறக்கும், மாமனுடன் நல்லுறவு உண்டாகும் 20ம் தேதிக்குப் பிறகு கல்வி நிலை சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சுக்கிரனுடன் சேர்ந்தும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் எதிர்பாராத பண விரயம் உண்டாகும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகும், பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. 20ம் தேதிக்குப் பிறகு மனக்குழப்பங்கள் குறையும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் புதன், குரு மற்றும், ராகு பார்வையுடன் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், படிப்பு மந்த நிலை உருவாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் செவ்வாய் பார்வையுடன் இருக்கிறார் போக்குவரத்தில் கவனம் தேவை, எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் குரு பார்வையுடன் இருக்கிறார் அனைவரிடமும் பேச்சில் கவனம் தேவை.
மீனம்:
சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார் அரசாங்க வாகனயோகம் உண்டாகும், அரசு அதிகாரிகளால் நன்மை உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சூரியனுடன் சேர்ந்து இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும், வாகன யோகம் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சனி பார்வையுடன் இருக்கிறார் நல்ல தகவல் வந்து சேரும், கதை கட்டுரைகள் எழுதுவீர்கள் 20ம் தேதிக்குப் பிறகு கல்வி சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சுக்கிரனுடன் சேர்ந்தும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும்.
சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் குருவுடன் சேர்க்கை பெற்றும் ராகுவின் பார்வை பெற்றும் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும், வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் 20ம் தேதிக்குப் பிறகு பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாடாமிடத்தில் புதன், குரு மற்றும், ராகு பார்வையுடன் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, பிதுரார்ஜித சொத்துகள் கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் செவ்வாய் பார்வையுடன் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும், வியாபாரத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ஜென்ம ராசியில் குரு பார்வையுடன் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications