ஆவணி மாத ராசிபலன்கள் 2019: அற்புதம் நிகழ்த்தும் கடகம், சிம்மம், கன்னி
சென்னை: ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். தனது வீட்டில் கம்பீரமாக வலம் வரப்போகிறார் சூரியன். கூடவே சுக்கிரன், செவ்வாய், புதன் என கிரகங்கள் இணைகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி ஒருபக்கம் இருக்க மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் சனி கேது விருச்சிகத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் கூட்டணியால் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
ஆவணி மாதத்தில் கிரகங்களின் இடம் மாற்றமும் நிகழ்கிறது. சுக்கிரன் 23ஆம் தேதி கன்னி ராசியில் நீசமடைகிறார் ஆவணி 9ஆம் தேதி சிம்மராசியில் அமரும் புதன் கன்னி ராசிக்கு 23ஆம் தேதி மாறுகிறார். இதனால் சுக்கிரன் நீசபங்கமடைகிறார் மாத இறுதியில் கன்னி ராசியில் கிரகங்கள் அமர்ந்தாலும் பாதகமில்லை. கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிதாக பாதிப்பு எதுவும் இல்லை.
ஆவணி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களில் யாருக்கு பணவரவு அதிகரிக்கும், தொழில் முன்னேற்றம் ஏற்படும், கல்யாண விசயங்கள் கை கூடி வரும் என்று பார்க்கலாம்.

அதிர்ஷ்ட மாதம்
கடகம் ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் அதிர்ஷ்டம் தரும் மாதமாக அமையும். சூரியன் 2ஆம் வீட்டில் ஆட்சி பெறுவதால் உற்சாகமாக இருப்பீர்கள். ஆவணியில் குருவின் முழு பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. குருவின் பரிபூரண அருளினால் நன்மைகள் நடக்கும். சூரியன் செவ்வாய் சுக்கிரன் 2ல் ஐந்தில் குரு, ஆறில் சனி கேது இருக்கின்றனர். எதிரிகளின் விசயத்தில் கவனம் தேவை. ஆவணியில் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு செலவுகளும் அதிகம் வரும். வக்ர கடன் வாங்க வைப்பார்.

செலவு செய்வதில் கவனம்
இரண்டில் சுக்கிரன் இருப்பதால் பணத்தட்டுப்பாடு தீரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நடக்கும். மிகப்பெரிய வெற்றியை தக்கவைக்கலாம். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். பணத்தை திட்டமிட்டு செலவு பண்ணுங்க. வேலைக்கு செல்பவர்களுக்கு சிறப்பான மாதம். கல்யாண கனவுகள் நனவாகும். முன்னேற்றமான மாதம் வார்த்தையில் கவனம் காரணம் செவ்வாய் 2ஆம் வீட்டில் சூரியன் இருக்கின்றனர். வண்டி வாகனத்தில் செல்லும் பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம்.

கோபத்தை கட்டுப்படுத்துங்கள்
ஆவணியில் சுபகாரியங்கள் அதிகம் நடைபெறும். உற்சாகமாக இருப்பீர்கள். கடல்கடந்த பயணங்களுக்கு வாய்ப்புகள் வருது. நண்பர்கள் உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். நினைத்தது நிறைவேறும் காலம். நரம்பு தொடர்பான பிரச்சினை கால்வலி பிரச்சினைகள் வரும். குழப்பத்தில் இருந்து தீர்வு பெற பெருமாளை தரிசனம் செய்யுங்கள். சைனஸ் பிரச்சினை வரும் சளி தொந்தரவுகள் வரும் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மாற்றங்கள் நிகழும்
பெரிய மாற்றங்கள் நிறைந்த மாதம். ஆவணி ஒன்பதாம் தேதிக்கு மேல் பணப்பிரச்சினைகள் தீரும். சுறுசுறுப்பாக இருங்கள். ராகு 11ல் இருக்கிறார். புதன் 12ல் இருந்தாலும் ஒன்பதாம் தேதி ராசிக்கு வருகிறார். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் இணைந்திருப்பது சிறப்பு. மாத இறுதியில் சுக்கிரன் நீசமானாலும் கவலை வேண்டாம் ராசி நாதன் புதன் ஆட்சி உச்சம் பெறுவதால் நீசபங்கமாகிவிடுவார்.

முயற்சி வெற்றியாகும்
வெளிநாடு முயற்சிகளை ஒத்திப்போடுங்க ஐப்பசியில் இருந்து கூடி வரும். குடும்பத்தை பிரிந்தவர்கள் இந்த மாதம் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றியாக அமையும். ஜாமீன் கையெழுத்து போடவே வேண்டாம். கண்களில் பரிசோதனை தேவை. நரம்பு பிரச்சினைகளில் கவனம். உத்யோகத்தில் பிரச்சினை வரும் ஜாக்கிரதையாக இருக்கவும். பிள்ளைகளை விட்டுப்பிடிங்க. பேசாமல் இருப்பது நல்லது அநாவசிய பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள்.

குல தெய்வ வழிபாடு நன்மை
பெற்றோர்களின் தேக ஆரோக்கியத்தை கவனமாக பார்க்கவும். அண்டை அயலாரை பற்றி புறம் பேச வேண்டாம். சிம்ம ராசிக்காரர்கள் நிதானத்துடன் இருங்க. அநாவசிய பேச்சுக்களை தவிர்த்து விடுங்க. பெருமாள், தாயார் ஆஞ்சனேயர் வழிபாடு அவசியம் செய்யவும். குலதெய்வத்தை சென்று வழிபட்டு வருவது நல்லது வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும்.

விரைய செலவுகள் வரும்
ஆவணியில் விரையத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தினால் கையை மூடியே வையுங்க. பணத்தை தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு வீண் விரையங்கள் ஏற்படும். தேவைக்கான பணத்தை கண்டிப்பாக வைத்துக்கொள்ளவும். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். பணத்தில் சிக்கனம் தேவை. புலம்பலை குறையுங்கள் வேலை செய்யும் இடத்தில் பேச்சுக்களை குறையுங்கள்.

பேச்சில் கவனம்
ஆவணியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம். பெரிய அளவில் முதலீடு செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். கடன் வாங்கி முதலீடுகளோ செலவுகளோ செய்ய வேண்டாம். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நரம்பு பிரச்சினைகள் வரும். சொத்துக்கள் வீடு, மனை வாங்கும் போது ஆலோசனைகள் அவசியம். ரத்த உறவுகள் விசயத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் தெய்வ நம்பிக்கை இருப்பவர்களுக்கு பாதிப்புகள் குறையும்.

பரிகாரம் என்ன
பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரும் மாதம் இது. ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். பண விசயத்திலும் விலை உயர்ந்த பொருட்களையும் கவனமாக பாதுகாக்கவும். ஆவணி 23ஆம் தேதிக்கு மேல் ராசி நாதன் புதன் ஆட்சி உச்சம் பெறுவது நன்மை ஏற்படும். மாத ஆரம்பத்தில் பொறுமையும் கவனமும் தேவை. வியாழக்கிழமை ராகவேந்திரரை தரிசிக்க நல்ல செய்திகள் வரும்.பெருமாள் கோவிலுக்கு போய் துளசி கொடுத்து அர்ச்சனை செய்யவும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications