ஆவணி மாத ராசிபலன்கள் - ஆடி போய் ஆவணி வந்தா மேஷத்திற்கு டாப்
சென்னை: ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். தனது வீட்டில் கம்பீரமாக வலம் வரப்போகிறார் சூரியன். கூடவே சுக்கிரன், செவ்வாய், புதன் என கிரகங்கள் இணைகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி ஒருபக்கம் இருக்க மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் சனி கேது விருச்சிகத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் கூட்டணியால் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
மேஷம் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் நான்கு கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. மூன்றாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் குரு ஒன்பதாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதம் இது. ஆவணி மாதத்தில் கிரகங்களின் இடம் மாற்றமும் நிகழ்கிறது.
சுக்கிரன் 23ஆம் தேதி கன்னி ராசியில் நீசமடைகிறார் ஆவணி 9ஆம் தேதி சிம்மராசியில் அமரும் புதன் கன்னி ராசிக்கு 23ஆம் தேதி மாறுகிறார். இதனால் நீசபங்கமடைகிறார் சுக்கிரன். மாத இறுதியில் ஆறாம் வீட்டில் கிரகங்கள் அமர்ந்தாலும் பாதகமில்லை.

ஆவணியில் உற்சாகம்
ஆடி முடிந்து ஆவணி பிறந்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு உற்சாகம்தான். மிகப்பெரிய யோகம் காத்திருக்கிறது. இதுநாள்வரை இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உங்க பூர்வ புண்ணியாதிபதி ஆட்சி பெற்று அமர்கிறார். திருப்தியான காலகட்டம். அதிக வருமானம் கிடைக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

சகோதரர்களால் நன்மை
பிரச்சினைகள் ஆவணியில் தீரும் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய் உடன் புதன் இணைகிறார். தன்னம்பிக்கை துணிச்சல் அதிகரிக்கும். புதன் ஐந்தில் வருவதால் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். லாப ஸ்தானத்தை கிரகங்கள் பார்ப்பதால் பண வருமானம் கூடும் மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.

திடீர் பணவரவு
குழந்தைகளின் விசயத்தில் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான மாதம். வேலைக்கு செல்லும் வாய்ப்பு தேடி வரும். வெளியூர் சென்று வேலை செய்ய வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. குரு வக்ர நிவர்த்தியாகியிருக்கிறார் திடீர் பணவரவு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பொன்னான காலம் காரணம் சூரியன் தன் வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார்.

மாதம் முழுவதும் மகிழ்ச்சி
குடும்பத்தில் மாதம் முழுவதும் மகிழ்ச்சிகரமான மாதமாக இருப்பீர்கள். வெற்றி மேல் வெற்றி தேடி வரும் கணவன் மனைவிக்குள் இருந்த விரிசல்கள் தீரும். கோர்ட் கேஸ் பிரச்சினைகள் தீரும். நண்பர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கூட்டுத்தொழில் செய்வீர்கள். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் வேலைச்சுமை அதிகம் இருக்கும். கடன்களை அடைக்கலாம். அரசு வேலை செய்பவர்களின் திறமை பாராட்டப்படும்.
மாணவர்களுக்கு ஆவணி மாதம் பொன்னான மாதம் கல்வித்தடை நீங்கும். எதிர்காலத்திற்கு தேவையான கல்வியை தேர்வு செய்வீர்கள்.

கல்யாண கனவு நனவாகும்
தொழிலதிபராக மாறும் நிலை ஏற்படும். வெற்றி தரும் மாதமாக அமையும். சனி வக்ரத்தில் இருக்கிறார் பொறுமையும் நிதானமும் தேவை. அப்பாவழி உறவினர் வழியில் விஷேசம் நடக்கும். சுக்கிரன் பூர்வ புண்ணியத்தில் இருப்பதால் தங்கம் சேரும் ஆடை ஆபரணம் அதிகம் சேரும் வேலைக்கு செல்பவர்களுக்கு அதிக நன்மைகள் நடக்கும். கன்னிப்பெண்களுக்கு கல்யாண கனவு நனவாகும். நல்ல வரன் வரும் கவனமாக தேர்வு செய்யுங்கள். மாத இறுதியில் சுக்கிரன் நீசமானாலும் கூடவே ஆட்சி பெற்ற புதன் இணைவதால் நீசபங்க யோகமாகும் எனினும் ஆறாம் வீட்டு சுக்கிரனால் ஞாபக மறதி ஏற்படும் கவனமாக இருங்க. சிவனுக்கு வில்வ அர்ச்சனை பண்ணுங்க.












Click it and Unblock the Notifications