ஆவணி மாத ராசிபலன்கள் - ஆவணியில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு அதிர்ஷ்டம் வரப்போகுது
ஆவணி மாதம் பிறக்கப்போகிறது. ஆடி முடிந்து ஆவணியில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சென்னை: ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். தனது வீட்டில் கம்பீரமாக வலம் வரப்போகிறார் சூரியன். கூடவே சுக்கிரன், செவ்வாய், புதன் என கிரகங்கள் இணைகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி ஒருபக்கம் இருக்க மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் சனி கேது விருச்சிகத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த கிரகங்களின் கூட்டணியால் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
ஆவணி மாதத்தில் கிரகங்களின் இடம் மாற்றமும் நிகழ்கிறது. சுக்கிரன் 23ஆம் தேதி கன்னி ராசியில் நீசமடைகிறார் ஆவணி 9ஆம் தேதி சிம்மராசியில் அமரும் புதன் கன்னி ராசிக்கு 23ஆம் தேதி மாறுகிறார். இதனால் சுக்கிரன் நீசபங்கமடைகிறார் மாத இறுதியில் கன்னி ராசியில் கிரகங்கள் அமர்ந்தாலும் பாதகமில்லை. துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு சின்னச் சின்ன மாற்றங்கள் ஏற்படும்.
ஆவணி மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களில் யாருக்கு பணவரவு அதிகரிக்கும், தொழில் முன்னேற்றம் ஏற்படும், கல்யாண விசயங்கள் கை கூடி வரும் என்று பார்க்கலாம்.

துலாம்
ஆவணி மாதத்தில் துலாம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், பத்தாம் வீட்டில் புதன், பாக்ய ஸ்தானத்தில் ராகு, இரண்டாம் வீட்டில் குரு, மூன்றாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் செய்யும் தொழிலில் வியாபாராத்தில் லாபம் அதிகம் வரும். நீண்ட நாட்களாக இருந்த மனக்கஷ்டம் நீங்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். செவ்வாய் சூரியன் சஞ்சாரத்தினால் பூமி சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமணம் சுபகாரியத்தில் இருந்த தடைகள் நீங்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். ஆவணி மாதத்தில் தன்னம்பிக்கை கூடும் யோகங்கள் அதிகரிக்கும். படைப்பாளிகளுக்கு படைப்புகள் பாராட்டப்படும், தம்பதியர் இடையே நெருக்கம் கூடும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் வரும். தாய்வழி உறவுகளில் இருந்த பாதிப்புகள் நீங்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை காரணம் மாத இறுதியில் சுக்கிரன், புதன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சுப செலவுகளாக மாற்றுங்கள். மாத இறுதியில் வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும்.மருத்துவ ஆலோசனை தேவை. திங்கட்கிழமையில் விநாயகரை வணங்க நன்மைகள் நடைபெறும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

விருச்சிகம்
ஆவணி மாதத்தில் விருச்சிகம் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் தொழில் ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், ஒன்பதாம் வீட்டில் புதன், எட்டாம் வீட்டில் ராகு, ஜென்மத்தில் குரு, இரண்டாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் ஏற்படும் அந்த மாற்றம் நன்மையை தரும். அரசு உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தில் சனி பிரச்சினையை தருவார் கூடா நட்பு கேடு தரும். அதே நேரத்தில் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். செல்வாக்கு உயரும். மருத்துவ ஆலோசனைகள் எடுப்பது அவசியம் பாத சனி கால்களில் பிரச்சினையை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் பலரால் பாராட்டப்படும். அரசியல்வாதிகளுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஜென்ம குருவினால் உடல்நல பிரச்சினைகள் தீரும். கடல் கடந்த பயணங்களினால் இந்த மாதம் வெற்றி கிடைக்கும். குல தெய்வ வழிபாடு நன்மையை தரும். வீட்டில் அகல் தீபம் ஏற்றி வணங்க பிரச்சினைகள் தீரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே ஏழாம் வீட்டில் ராகு எட்டாம் வீட்டில் புதன் ஒன்பதாம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் குரு, ஜென்ம ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஏழரை சனியின் பாதிப்பினால் இருப்பவர்கள் உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்கள். பணம் குடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அப்படி போட்டால் உங்களுக்கு பிரச்சினையும் சிக்கலும் வரும். ஜென்ம சனியால் பிரச்சினை வரும் தொழிலில் கவனமாக இருக்கவும். நண்பர்கள் உறவினர்களை சந்திப்பீர்கள். தனுசு ராசிக்காரர்கள் மூட்டுக்கள் பாதத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் கவனம் தேவை. யாரையும் முழுதாக நம்பாதீர்கள். அதிகம் பேச வேண்டாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். சோம்பல் வேண்டாம் வேலையில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால் பாதிப்புகள் வரும். கணபதி வழிபாடு நன்மை தரும் தினசரியும் கணபதி காயத்ரி சொல்லுங்கள் பாதிப்புகள் குறையும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications