ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரவே மாட்டார் - எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்

கொரோனா வைரஸ் பீதியில் உலகமே அலறிக்கொண்டிருந்தாலும் ரஜினியின் அரசியல் பயணம் பற்றிதான் தமிழக ஊடகங்கள் பேசிக்கொண்டிருக்கின்றன. ரஜினிகாந்த் இந்த ஆண்டு அரசியலில் குதிப்பார் என்று அரசியல் வல்லுனர்கள் ஆருடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இப்போது அரசியலுக்கு வர நினைப்பது காலம் கடந்த செயல் என்று சொல்கிறார் பிரபல எண் கணித நிபுணர் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன். ரஜினிகாந்த் 30 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் இறங்கியிருக்க வேணடும். சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தற்போது காலம் கடந்து விட்டது 69வது வயதில் அரசியலுக்கு வர நினைப்பது சரியில்லை. இன்னும் 3 ஆண்டுகளுக்கு அவர் அரசியலுக்கு வருவதைப் பற்றி நினைக்கவே வேண்டாம் என்று கூறியுள்ளார் டாக்டர் ஜெஎன்எஸ் செல்வன்.

நடிகர்கள் நாடாள நினைக்கலாமா என்று கேட்டவர்கள்தான் இன்றைக்கு நடிகர்கள் கட்சி ஆரம்பிக்கும் முன்பாகவே கூட்டணி பற்றி பேச ஆரம்பித்து விட்டனர். திமுகவை தொடங்கிய அண்ணாதுரை முதல் கருணாநிதி, அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் பலர் சினிமாதுறையில் இருந்து வந்தவர்கள்தான். இப்போது சினிமாவிற்கு வரும் பலருக்கும் முதல்வர் நாற்காலி மீது ஆசை இருக்கத்தான் செய்கிறது. அந்த ஆசையில்தான் பலரும் அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றனர்.

Actor Rajinikanth will not come to Politics says Numerologist JNS Chelvan

சினிமாவில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் அரசியலுக்கு வரலாம் என்று பலர் சொன்னாலும் விஜயகாந்த் 15 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்து விட்டார் பல தேர்தல்களை சந்தித்து 2011ஆம் ஆண்டில் எதிர்கட்சித்தலைவர் அந்தஸ்துக்கு உயந்தார் அடுத்தடுத்த தேர்தல்களில் அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

1987ல் எம்ஜிஆரின் மறைவு ஜெயலலிதாவின் அரசியல் பயணத்திற்கு அடித்தளம் இட்டது. 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார் ரஜினிகாந்த். 1996 சட்டசபை தேர்தலில் ரஜினியின் வாய்ஸ்க்கு மவுசு இருந்தது. ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி அப்போதே அவரது ரசிகர்கள் கூப்பிட்டும் அவர் வரத்தயங்கினார். அப்போது தமிழக அரசியலில் இருந்த கருணாநிதி, ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமைகளை எதிர்த்து அரசியல் செய்ய தயங்கினார் என்பதுதான் உண்மை.

2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மரணம் அதிமுகவில் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமி திடீர் முதல்வரானார். 2017ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியின் மரணம் மு.க ஸ்டாலினுக்கு தலைவர் பதவியை பெற்றுக்கொடுத்தது ஆனாலும் எதிர்கட்சித்தலைவர் என்ற அந்தஸ்தை மட்டுமே அவரால் பெற முடிந்தது. ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத நிலையில் தமிழக அரசியலில் காலை லேசாக வைத்து ஆழம் பார்த்தார் ரஜினி. அதுவும் ஆன்மீக அரசியல் செய்யப்போவதாக கூறினார்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் பற்றி பலரும் பேச அதற்கு நேர்மையான, ஜாதி மதமற்ற அரசியல் என்று புதுவித விளக்கமும் கொடுத்தார். அதற்குப் பிறகு சினிமாவில் நடிக்கத்தான் ஆர்வம் காட்டினாரே தவிர அரசியல் கட்சி தொடங்குவதைப்பற்றி மூச்சு கூட விடவில்லை. போர் வரட்டும் என்று ரஜினி சொன்ன பிறகு நாடாளுமன்றம், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என பல போர்கள் வந்து விட்டன. ஆனால் ரஜினிதான் போட்டியிடுவதைப்பற்றி அறிவிக்கவே இல்லை. 2021 அதிசயம் நிகழும் என்று கூறிய ரஜினி தனது நிலைப்பாட்டை இன்னமும் உறுதியாக வெளிப்படுத்தவில்லை

சில தினங்களுக்கு முன்பு மீண்டும் ரசிகர்களை சந்தித்த ரஜினி ஏமாற்றம் என்று ஒரு வார்த்தையை சொல்லி பரபரப்பை பற்றவைத்தார். இப்போது ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் முதல்வர் வேட்பாளராக இருக்கப் போவதில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதுவே அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் என்றாலும் ரஜினிகாந்த் இன்னும் சில ஆண்டுகளுக்கு கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்கிறார் எண்கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.

ரஜினி காந்த் பிறந்த தேதி 12- 12-1950 கூட்டுத்தொகை 3. இது குருவின் எண். தெய்வபக்தி, தேச பக்தி, உழைப்பாளி. பிறரின் கஷ்டங்களை வாங்கிக்கொள்வார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 வருகிறது. உடல் ரீதியாக மனரீதியாக பல போராட்டங்களை பெற்றிருக்கிறார். ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த பலரும் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்தான் அதனால்தான் அவர் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவரது மனம் ஆன்மீகத்தை நாடியது.

ரஜினிகாந்துக்கு தற்போது 69 வயதாகிறது. கூட்டுத்தொகை ஆறு. பிறந்த தேதி கூட்டுத்தொகை 3 ஆம் எண் இது குரு ஆதிக்கம் கொண்ட எண். 69 கூட்டுத்தொகை 6 அது சுக்கிரனின் எண். ரஜினிகாந்த் இந்த வயதில் அரசியலுக்கு வரமாட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கியிருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.

எண் கணித நிபுணர் டாக்டர் JNS செல்வன்
9842490001

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+