Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐப்பசி மாத ராசி பலன் 2021: தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு யோகங்கள் தேடி வரும்

ஐப்பசி மாதம் துலாம் மாதம். சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். ஐப்பசி மாதத்தில் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீச்சம் அடைகிறார். மகர ராசியில் உள்ள ஆட்சி பெற்ற சனியின் பார்வை சூரியன் மீதும் விழுகிறது. சூரியனின் வேகம் இந்த மாதத்தில் குறைவாக இருக்கும். இந்த மாதத்தில் நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ஐப்பசி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ரிஷபத்தில் ராகு, கன்னி ராசியில் புதன், செவ்வாய், துலாம் ராசியில் சூரியன், விருச்சிக ராசியில் கேது, சுக்கிரன், மகரம் ராசியில் சனி, குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

நவ கிரகங்களின் இடமாற்றம் இந்த மாதம் 4ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்கு வந்து செவ்வாயுடன் இணைகிறார். 13ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்கிறார். 16ஆம் தேதி புதன் துலாம் ராசிக்கு செல்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி மாத இறுதியில் 27ஆம் தேதி குரு மகரம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கிரகங்களின் இடமாற்றம் சஞ்சாரத்தினால் மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராசிநாதன் குரு இரண்டாம் வீட்டில் சனியோடு பயணம் செய்கிறார். தடைபட்டு வந்த திருமணம் நிச்சயமாகும். தேவையில்லாத பேச்சுக்களைத் தவிர்க்கவும் கோபப்பட்டு பேசி பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் வரும். அரசு பணியாளர்கள் மூலம் நன்மை ஏற்படும். பதவி உயர்வுகள் இடமாற்றம் ஏற்படும். எந்த தொழில் செய்தாலும் லாபம் வரும். உங்களுக்கு இந்த மாதம் யோகமான மாதம். சிறப்புகள் வீடு தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்புகள் தேடி வரும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பதவி உயர்வும் வேலையில் இடமாற்றமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மனைவிக்கு உடல் நலம் பாதிக்கும். கவனம் தேவை. வியாழக்கிழமையன்று சித்தர்கள் ஜீவ சமாதிக்கு சென்று வணங்கலாம். மகான்கள் வழிபாடு மன நிம்மதியைத் தரும்

மகரம்

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதத்தில் ராசியில் சனி, குரு, ஐந்தாம் வீட்டில் ராகு, பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், பத்தாம் வீட்டில் சூரியன், லாப ஸ்தானத்தில் கேது, சுக்கிரன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
பத்தில் சூரியன் பதவியைத் தருவார். சூரியன் நீசம் பெற்றிருந்தாலும் சனிபகவானின் பார்வை கிடைப்பதால் யோகங்கள் அதிகமாகும். வேலையில் புரமோசன் வரும். புதிய பொறுப்புகள் வரும். சம்பளம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள், சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். சிலர் பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வாகனங்களை வாங்கலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிநாடு ஏற்றுமதி இறக்குமதியால் லாபம் அதிகரிக்கும். கோர்ட் கேஸ் பிரச்சினைகள் சாதகமான முடிவுக்கு வரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் கவனமாக இருக்கவும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் அப்பாவின் வழி உதவிகள் கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள்,பிதுர் ராஜ்ஜித சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அபரிமிதமான பணவரவு உண்டு. பேசும் வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவை. பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் பிரச்சினைகள் வம்பு வழக்கு வரும். வாகன பழுதுகள் நீங்கும். சகோதர சகோதரிகளின் மூலம் உதவிகள் தேடி வரும். உடல் உபாதைகள் விலகும். தோல் நோய்கள் நீங்கும். வெளிநாடு போகும் அமைப்பு வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் வரும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும் மாதம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அப்பா வழி உறவினர்களால் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும். குலதெய்வ அனுகூலம் உண்டு.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே, இந்த ஐப்பசி மாதத்தில் சூரியன் எட்டாம் இடத்தில் நீச்சபங்கமடைந்து சஞ்சாரம் செய்கிறார். குரு, சனி லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் சொத்துக்களில் இருந்த வில்லங்கம் பிரச்சினைகள் நீங்கும். பூமி வாங்கலாம், புதிய சொத்துக்கள் வாங்கலாம். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் தேடி வரும். தன தான்ய லாபம் உண்டாகும். தொழில் வியாபார விருத்தி ஏற்படும். வியாபாரத்தில் வாங்கி வைத்த பொருட்கள் விற்று தீரும். வெளிநாட்டில் இருந்து வரும் செய்திகள் நன்மையை தரும். களத்திர காரகன் சுக்கிரனால் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி அந்நியோன்னியம் அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு சிறப்பான யோகங்கள் கொண்ட மாதம். வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல் உஷ்ணம் கூடும் மருத்துவ செலவுகள் வரலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வரவு திருப்தி தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். பண விசயங்களில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப்போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம். யாரை நம்பியும் பணம் கடனாகக் தர வேண்டாம். மாணவர்களுக்கு இது நல்ல மாதம் நன்மைகள் அதிகம் நடைபெறும். ஆஞ்சநேயர் வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும். ஆன்மீக பயணம் மன அமைதியை தரும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+