Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐப்பசி மாத ராசி பலன் 2021: சிம்மம், கன்னி, துலாம்,விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம்

ஐப்பசி மாதம் துலாம் மாதம். சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். ஐப்பசி மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரியன் நீச்சபங்க ராஜயோகமடையும் இந்த ஐப்பசி மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் திடீர் யோகங்கள் தேடி வரும். துலாம் ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு துலாம் மாதம் என்ற பெயரும் உண்டு. தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் ஏழாவது மாதம். சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் ஐப்பசி மாதத்தில் நீச்சம் அடைகிறார். மகர ராசியில் உள்ள ஆட்சி பெற்ற சனியின் பார்வை சூரியன் மீதும் விழுகிறது.

இந்த மாதத்தில் ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் புதன், செவ்வாய், துலாம் ராசியில் சூரியன், விருச்சிக ராசியில் கேது, சுக்கிரன், மகரம் ராசியில் சனி, குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. நவ கிரகங்களின் இடமாற்றம் இந்த மாதம் 4ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசிக்கு வந்து செவ்வாயுடன் இணைகிறார். 13ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்கிறார். 16ஆம் தேதி புதன் துலாம் ராசிக்கு செல்கிறார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி மாத இறுதியில் 27ஆம் தேதி குரு மகரம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கிரகங்களின் இடமாற்றம் சஞ்சாரத்தினால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்கள் ராசிநாதன் சூரியன் மூன்றாம் வீட்டில் நீச்சம் பெற்று பயணம் செய்கிறார். உங்க ராசிக்கு அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் தன ஸ்தான அதிபதி புதன் ஆட்சி பெற்று உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். நான்காம் வீட்டில் சுக்கிரன், கேது, ஆறாம் வீட்டில் குரு, சனி, பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்களின் பயணம் அமைந்துள்ளது. இந்த மாதம் உங்களுக்கு பணவரவு அபரிமிதமாக இருக்கும்.தொழில் முயற்சியில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பு கூடும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக இருக்கும்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு பெருமை கிடைக்கும். அப்பாவிற்கு உத்யோக உயர்வு கிடைக்கும். இடமாற்றங்கள் நல்ல முறையில் நடைபெறும். பூர்வீக சொத்து லாபம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும். சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் உற்சாகமும் சந்தோஷமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. மாணவர்களுக்கு நல்ல நேரம் கூடி வந்திருக்கிறது. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதுநாள் வரை இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாதம். பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் சுப காரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டவும். செவ்வாய்கிழமை முருகனை வழிபட நன்மைகள் நடைபெறும். இந்த மாதம் கால பைரவரை ராகு காலத்தில் முழுவதும் வழிபட நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

புத்தி காரகன் புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த ஐப்பசி மாதத்தில் உங்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் உங்கள் ராசியில் செவ்வாய், புதன், இரண்டாம் வீட்டில் சூரியன், மூன்றாம் வீட்டில் சுக்கிரன், கேது, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் பயணம் செய்கின்றன. பாக்ய ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் நவகிரகங்களின் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதால் சகலவிதமான நன்மைகள் நடைபெறும். உத்தியோக உயர்வும் சம்பள உயர்வு கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். கல்வித்துறையில் வேலை செய்பவர்களுக்கு தன வரவு திருப்திகரமாக இருக்கும். தகப்பனார் வழி சொத்துக்கள் கிடைக்கும். அப்பா வழியில் நன்மைகள் நடைபெறும். அரசு பணியாளர்களுக்கு பாராட்டுக்கள் தேடி வரும். குரு பகவானால் நன்மைகள் நடைபெறும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். கடன் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். 2ஆம் வீட்டில் சூரியன் பயணம் செய்வதால் வார்த்தைகளில் கவனம் தேவை. வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். பொறுமையுடனும் நிதானமாகவும் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. பெண்களுக்கு மகிழ்ச்சியான மாதம். காதலிப்பவர்களுக்கு திருமண யோகம் கை கூடி வருகிறது. வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். புதன்கிழமை, சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

துலாம்

துலாம்

துலாம்

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, இந்த மாதம் நவகிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் செல்ல செழிப்பு அதிகரிக்கும். காதல் திருமணம் கைகூடி வரும். ராசியில் ஞானகாரகன் கேது சஞ்சரிப்பது மிக சிறப்பான யோகம். உங்க வாக்கிற்கு மதிப்பு கூடும். வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பேச்சாற்றல் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி மேம்படும். பழைய கடன்கள் நிவர்த்தியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனியார் துறை, வங்கித்துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரைய ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்வதால் இதயநோய் உஷ்ணம் தொடர்பான நோய் ஏற்படும். அரசு பணிகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். எதையும் எச்சரிக்கையோடு நிதானமாக அணுகவும். கந்த சஷ்டி நாளில் முருகனை வணங்க நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+