For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேன்மை தரும் ஐப்பசி மாத ராசி பலன்கள்

Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஜோதிடவியலில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது.. பொதுவாக பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது மரபு. இருப்பினும் ஐப்பசி மாதத்தில் பிறக்கக்கூடிய ஆண் குழந்தைகளுக்கு உபேந்திரன் என்றும் பெண் குழந்தைகளுக்கு சந்திரவதி என்றும் பெயர் வைக்கலாம்.

ஐப்பசி மாதம் முதல் தேதி (18-10-2015) ஞாயிறுகிழமை முதல் 30 நாட்கள் இம்மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த 30 நாட்களும் உலகில் உள்ள அனைத்து புண்ணீய தீர்த்தங்களும் காவேரி நதியில் கலப்பதாக ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவேரியில் நீராடி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து வழிபாடு செய்வது சகல பாபங்களும் நிவர்த்தியாகி புண்ணியங்கள் உண்டாகும்.
தீபாவளி பண்டிகை, கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் இந்த மாதத்தில் வருவது சிறப்பாகும். மேன்மை தரும் ஐப்பசி மாத ராசிபலன் தெரிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - 17ம் தேதி கன்னி ராசிக்கு மாறுகிறார்
புதன் - 12ம் தேதி துலாம் ராசிக்கு மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 17ம் தேதி கன்னி ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு-கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம் :

மேஷம் :

சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும், வெளியூர் பயணம் உண்டாகும். ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி ஆறாம் இடத்திற்கு மாறுகிறார் பரம்பரை சொத்துகள் கிடைக்கும் மாதத்தின் பின் பகுதியில் மன தைரியம் அதிகரிக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பன்னிரெண்டாம் தேதி ஏழாமிடத்திற்க்கு மாறுகிறார் வியாபாரத்திற்காக கடன் வாங்கும் நிலை நிலை உருவாகும் மாதத்தின் பிற்பகுதியில் வியாபார நிமித்தம் வெளியூர் செல்வீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகமாக கிடைக்கும், குழந்தைகளால் சந்தோஷம் அதிகம் உண்டாகும்.. சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி ஆறாமிடத்திற்கு மாறுகிறார் கணவன் மனைவி உறவு நிலை சிறப்பாக இருக்கும், மாதத்தின் பிற்பகுதியில் பெண்களால் கஷ்டம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், எதிர்பாராதவிதமாக பண வரவு உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் திறன் உண்டாகும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் ேவை. கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும், ஆன்மீகப் பயணம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி ஐந்தாம் இடத்திற்கு மாறுகிறார் இயந்திர தொழில் சிறப்படையும், மாதத்தின் பிற்பகுதியில் சகோதரர்களால் நன்மை உண்டு. புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பன்னிரெண்டாம் தேதி ஆறாமிடத்திற்கு மாறுகிறார் கல்வியில் மேன்மை உண்டாகும், மாதத்தின் பிற்பகுதியில் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துகள் சேர்க்கை உண்டாகும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி ஐந்தாம் இடத்திற்கு மாறுகிறார் வாகன யோகம் உண்டகும், மாதத்தின் பிற்பகுதியில் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும், வியாபாரம் விருத்தியாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும், ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசு வேலை வாய்ப்பு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும், உயர்பதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி நான்காம் இடத்திற்கு மாறுகிறார் வெளியூர் பயணம் உண்டாகும், புதிய வீடு வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பன்னிரெண்டாம் தேதி ஐந்தாமிடத்திற்கு மாறுகிறார் வியாபாரம் சிறப்படையும், மாதத்தின் பிற்பகுதியில் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் ஆலய திருப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும், படிப்பில் கவனம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி நான்காம் இடத்திற்கு மாறுகிறார் வெளியூர் பயணம் உண்டாகும், மாதத்தின் பிற்பகுதியில் புது வாகன யோகம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும், தொழில் நிலை சீரடையும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை பராமரிப்பு செய்யும் நிலை உண்டாகும், கல்வியில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்களில் வெற்றி உண்டாகும், தொழில் லாபம் அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு ஒதுக்கீட்டில் வீடு அமையும் யோகம் உண்டாகும், வீடு மனை யோகம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி மூன்றாமிடத்திற்கு மாறுகிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் வருமானம் அதிகரிக்கும், மாதத்தின் பிற்பகுதி சகோதரர்களால் நன்மை உண்டாகும்.. புதன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பன்னிரெண்டாம் தேதி நான்காமிடத்திற்கு மாறுகிறார் தகவல் தொடர்பு சிறப்படையும், மாதத்தின் பிற்பகுதியில் வியாபாரம் விருத்தியடையும். குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி மூன்றாமிடத்திற்கு மாறுகிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும், இடமாற்றம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும், உத்தியோகத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும், வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார் தான தர்மம் செய்வீர்கள், அப்பாவின் உதவி கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு முறை பயணம் உண்டாகும், இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதினேழாம் தேதி இரண்டாம் இடத்திற்கு மாறுகிறார் பதவி உயர்வு கிடைக்கும் மாதத்தின் பின் பகுதியில் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பன்னிரெண்டாம் தேதி மூன்றாமிடத்திற்கு மாறுகிறார் வியாபார வருமானம் அதிகரிக்கும் மாதத்தின் பின் பகுதியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும், குழந்தைகளின் படிப்பு மேன்மையடையும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதினேழாம் தேதி இரண்டாமிடத்திற்கு மாறுகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், மாதத்தின் பின் பகுதியில் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை வாங்குவீர்கள், வாகன யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும், குதற்க்கமான பேச்சை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களைக் கையாளும்போது கவனம் தேவை, பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொடர்புகள் பணவரவைத் தரும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி ஜென்மராசிக்கு மாறுகிறார் நிலம் வீடு வகைகளில் முதலீடு செய்வீர்கள், மாதத்தின் பிற்பகுதியில் கோபத்தைக் கட்டுப்படுத்த்திக் கொள்ளவும். ராசிநாதன் புதன் உங்கள் ஜன்ம ராசியில் இருக்கிறார் பன்னிரெண்டாம் தேதி இரண்டாமிடத்திற்கு மாறுகிறார் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும் மாதத்தின் பிற்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தான தர்மங்கள் செய்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி ஜென்ம ராசிக்கு மாறுகிறார் வெளியூர்க்கு செல்வீர்கள், மாதத்தின் பிற்பகுதியில் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து இடமாற்றம் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் அசதி அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும்.

துலாம்

துலாம்

சூரியன் உங்கள் ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு மாறுகிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும், மாதத்தின் பிற்பகுதியில் நிலம் பூமி வகைகளில் முதலீடு செய்வீர்கள். புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் பன்னிரெண்டாம் தேதி உங்கள் ஜென்மராசிக்கு வருகிறார் வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணம் உண்டாகும் மாதத்தின் பிற்பகுதியில் தாய்மாமனின் உதவி கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி பன்னிரெண்டாம் இடத்திற்கு மாறுகிறார் எல்லா காரியங்களும் வெற்றிபெறும் மாதத்தின் பிற்பகுதியில் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகள் அனைவரையும் வெல்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசு வகையில் செலவுகள் உண்டாகும். ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி பதினொன்றாம் இடத்திற்கு மாறுகிறார் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும் மாதத்தின் பிற்பகுதியில் வாகன யோகம் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பன்னிரெண்டாம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு மாறுகிறார் தாய் மாமனின் உதவி கிடைக்கும் வியாபாரமுதலீடுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி பதினொன்றாம் இடத்திற்க்கு மாறுகிறார் பெண்களால் அதிர்ஷ்டம் உண்டாகும் மாதத்தின் பிற்பகுதியில் தொழில் லாபம் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும்.

தனுசு

தனுசு

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி பத்தாம் இடத்திற்கு மாறுகிறார் பூர்வீக சொத்து கிடைக்கும் மாதத்தின் பிற்பகுதியில் தொழில் நிலை சிறப்படையும். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் பன்னிரெண்டாம் தேதி பதினொன்றாமிடத்திற்கு மாறுகிறார் தொழில் சார்ந்த படிப்பில் மேன்மை உண்டாகும் மாதத்தின் பிற்பகுதியில் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆலய வழிபாடுகள் சிறக்கும், தான தர்மங்கள் செய்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி பத்தாமிடத்திற்கு மாறுகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் மாதத்தின் பிற்பகுதியில் பெண்கள் உபயோகப் பொருட்கள் தொழில் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் தொடர்பாக வெளியூர் செல்லுவீர்கள். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் புதிய கிளைகளை துவக்குவீர்கள். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் தாயின் ஆரோக்கியம் சிறப்படையும்.

மகரம்

மகரம்

சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி ஒன்பதாமிடத்திற்கு மாறுகிறார் வாகன போக்குவரத்தில் கவனம் தேவை மாதத்தின் பிற்பகுதியில் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பன்னிரெண்டாம் தேதி பத்தாமிடத்திற்கு மாறுகிறார் நீண்ட தூர பயணம் உண்டாகும் மாதத்தின் பிற்பகுதியில் தொழில் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவில் தடை உண்டாகும் செலவுகளில் கவனம் தேவை. சுக்கிரன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி ஒன்பதாமிடத்திற்கு மாறுகிறார் பெண்களால் கஷ்டம் உண்டாகும் மாதத்தின் பிற்பகுதியில் கடவுள் அருளால் தீங்குகள் குறையும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும், எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் உண்டாகும்.

கும்பம்

கும்பம்

சூரியன் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கம் தொடர்பான செயல்கள் சாதகமாக முடிவடையும் அரசு உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி எட்டாமிடத்திற்க்கு மாறுகிறார் நிலம் வீடு வாங்குவீர்கள், திடீர் யோகம் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பன்னிரெண்டாம் தேதி ஒன்பதாம் இடத்திற்கு மாறுகிறார் தொழில் வியாபாரம் மேன்மை நிலை அடையும், வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி எட்டாமிடத்திற்கு மாறுகிறார் பொன்னகைகள் சேர்க்கை உண்டாகும், திடீர் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் விருத்தியடையும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் ஏதோ ஒரு பாரம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் கவனம் தேவை. செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி ஏழாமிடத்திற்கு மாறுகிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை மாதத்தின் பிற்பகுதியில் வாகன யோகம் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பன்னிரெண்டாம் தேதி எட்டாமிடத்திற்கு மாறுகிறார் வியாபாரம் சிறப்படையும் மாதத்தின் பிற்பகுதியில் தகவல் தொடர்பில் தடை உண்டாகும். ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.. சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பதினேழாம் தேதி ஏழாமிடத்திற்கு மாறுகிறார் பெண்களின் விஷயத்தில் கவனம் தேவை, மாதத்தின் பின் பகுதியில் வெளியூர் பயணம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனக்குழப்பத்தினை தவிர்க்கவும்.

English summary
The Tamil month of Aippasi falls between 18.10.2015 and 16.11.2015. Known as Thula masam the first day is known as Aippasi Vishu. Here Aippasi Month rasi palan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X