ஐப்பசியில் சதுர்கிரக யோகம்.. துலாம் ராசியில் 4 கிரக கூட்டணி.. கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
சென்னை: ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் நான்கு கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு சதுர் கிரக யோகம் கிடைக்கப்போகிறது. இந்த யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கையும் ஏற்படும். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சதுர்கிரக யோகம்: சூரியன் நீச்சமடையம் ராசி துலாம். இந்த ராசியில் சில நாட்கள் சூரியன், செவ்வாய், கேது, புதன் ஆகிய நான்கு கிரகங்கள் இணைந்து சதுர் கிரக யோகத்தை தரப்போகின்றன. இந்த கிரகங்களை நேர் பார்வையாக ராகு, சந்திரன், குரு பார்ப்பதால் கூடுதலாக சிலருக்கு யோகமும் சிலருக்கு பாதிப்பும் ஏற்படலாம். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

துலாம்: உங்கள் ராசியில் நான்கு கிரகங்கள் கூட்டணி அமைப்பதால் நினைத்த காரியம் நிறைவேற தாமதமாகும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். மறைமுக முதலீடுகள் வேண்டாம். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம். யாரை நம்பியும் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். வரவுக்கு மீறி செலவு செய்ய வேண்டாம். குருபகவான் அருளால் வேலையில் முன்னேற்றமும் புரமோசனும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.
விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே.. விரைய ஸ்தானத்தில் 4 கிரகங்கள் கூடியுள்ளன. ராசி நாதனும் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கும். பெயரும் புகழும் கிடைக்கப்போகிறது. மனதில் இனம் புரியாக கலக்கம் உண்டாகும். வேலையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு: லாப ஸ்தானத்தில் 4 கிரகங்கள் கூடியுள்ளன. தொட்டதெல்லாம் பொன்னாகும். பொற்காலம் உங்களுக்கு தேடி வரப்போகிறது. குருவின் அருளும் பார்வையும் கிடைப்பதால் பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமாக ஐப்பசி மாதம் அமைந்துள்ளது.
மகரம்: பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. வெற்றிகள் தேடி வரும் மாதம். தொழில் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வேலையில் சிக்கல் வர வாய்ப்புள்ளது கவனம் தேவை. வீண் விரைய செலவுகள் வரும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். யாரை நம்பியும் கடன் தர வேண்டாம்.
கும்பம்: பாக்ய ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். அதே நேரத்தில் மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும். வேலையில் கவனமாக செயல்பட வேண்டிய காலம் இது. யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சாமர்த்தியமாக இருந்தால் ஐப்பசி மாதத்தில் வரப்போகும் பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கலாம்.
மீனம்: பெண்களுக்கு பொற்காலம். நகை, ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். நிலம், வீடு வாங்கும் யோகம் கைகூடி வந்துள்ளது.வேலையில் புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது. யாருக்கும் பணம் கடனாகவோ, உதவியாகவே கொடுக்கும் முன்பாக யோசித்து கொடுப்பது நல்லது. மன நிம்மதி தரும் மாதமாக ஐப்பசி மாதம் அமைந்துள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications