ஐப்பசி மாதத்தில் சதுர்கிரக யோகம்.. திடீர் லக்.. கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 6 ராசிக்காரர்கள்
சென்னை: ஐப்பசி மாதத்தில் பண்டிகைகள் நிறைய உள்ளன. நவராத்திரி, தீபாவளி, கந்த சஷ்டி போன்ற பண்டிகைகள் உள்ள நிலையில் சந்திர கிரகணம் நிகழப்போகிறது. நான்கு கிரக சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு சதுர் கிரக யோகம் கிடைக்கப்போகிறது. யாரெல்லாம் கோடீஸ்வர யோகத்தை அனுபவிக்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
சதுர்கிரக யோகம்: சூரியன் நீச்சமடையும் ராசி துலாம். இந்த ராசியில் சில நாட்கள் சூரியன், செவ்வாய், கேது, புதன் ஆகிய நான்கு கிரகங்கள் இணைந்து சதுர் கிரக யோகத்தை தரப்போகின்றன. இந்த கிரகங்களை நேர் பார்வையாக ராகு, சந்திரன், குரு பார்ப்பதால் கூடுதலாக சிலருக்கு யோகமும் சிலருக்கு பாதிப்பும் ஏற்படலாம். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

மேஷம்: சூரியன், செவ்வாய்,புதன் பார்வை நேரடியாக கிடைக்கிறது. பொருளாதார நிலை மேம்படும். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
ஜென்ம ராசியில் குருவின் பயணம், ராகுவின் விலகல் ராஜயோகத்தை தரப்போகிறது. வீடு வாகனம் வாங்குவதற்கான யோகம் கைகூடி வரப்போகிறது. சஷ்டி நாளில் முருகனை வழிபடுவது நன்மையை கொடுக்கும். புது வேலை கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம்: வீடு தேடி உதவிகள் வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் குதூகலத்தை கொடுக்கும். வீட்டில் சுபகாரியம் நடைபெறும்.
கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும் யோகம் தேடி வரப்போகிறது.
மிதுனம்: சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்ந்திருக்கும் காலம் இது. நோய் பாதிப்புகள் நீங்கும். மருத்துவ செலவுகள் குறையும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். பொற்காலமாக உள்ளது. காரணம் லாப குரு வருமானத்தை அதிகரிப்பார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள நான்கு கிரகங்கள் பிள்ளைகள் மூலம் நல்ல செய்தியை தேடி கொண்டு வரும்.
கடகம்: நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் சேர்ந்து யோகத்தை தரப்போகின்றன. மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். அஷ்டம சனி இருப்பதால் கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் குரு பகவானின் பயணம் குதூகலத்தை கொடுக்கும். வேலையில் புரமோசனை தேடிக்கொடுக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.
சிம்மம்: முயற்சி ஸ்தானத்தில் ராசிநாதன் சூரியன் செவ்வாய், புதன், கேது உடன் இணைந்து பயணம் செய்வதால் புது முயற்சிகள் வெற்றியை தேடித்தரும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. சுப காரியங்கள் நடைபெறும். முகத்தில் பொலிவு கூடும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்த கஷ்டங்கள், கவலைகள் மாறும் காலம் வரப்போகிறது. குருவின் பார்வையால் பல வழிகளில் இருந்தும் வருமானம் வரப்போகிறது.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. குடும்ப ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் இணைகின்றன. சதுர்கிரக யோகம் நிறைய பண வருமானத்தை கொடுக்கும். வட்டிக்கு மேல் வட்டி கட்டியவர்கள் மொத்தமாக பைசல் செய்து விட்டு மன நிம்மதி பெறுவீர்கள். அரசு தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரப்போகிறது. வீடு மனை, வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. மகிழ்ச்சிகரமான மாதமாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications