Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐப்பசி மாத ராசி பலன்.. துலாம் ராசியில் நீச்சமாகும் சூரியன்.. கூடவே செவ்வாய்.. 6 ராசிக்காரர்கள் கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் பயணம் செய்வதால் துலாம் மாதம் என்று அழைக்கப்படுகிறது. துலாம் ராசியில் சூரியன் நீச்ச கதி அடைகிறார். கால புருஷ சக்கரப்படி மேஷ ராசியில் இருந்து இது ஏழாவது மாசமாகும். ஐப்பசி மாதத்தில் நவகிரகங்களின் கூட்டணியால் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் துலாம் ராசியில் அமர்ந்திருக்கிறார். புதன் கன்னியில் அமர்ந்திருக்கிறார். புதன் ஐப்பசி 20ஆம் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். குரு மேஷ ராசியில் இருக்கிறார். சுக்கிரன் கடக ராசியில் நிற்கிறார். ஐப்பசி 16 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு மாறுகிறார். சனி கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார். ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலா ராசியில் இருக்கிறார். ஐப்பசி 13ஆம் தேதி ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடம் மாறி செல்கிறார்கள்.

Aippasi month rasi palan 2023: Sun Transit Kanni to Tulam prediction for 6 rasigal

தீபாவளி பண்டிகை, சிவனுக்கு மகா அன்னாபிஷேகம், முருகப்பெருமான் வழிபாடு ஆகியவை புரட்டாசி மாசத்தில் மேற்கொள்ளப்படுகிறது. நமக்கு உணவளிக்கும் சிவபெருமானின் திருமேனிக்கு மகா அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஐப்பசி மாத பௌர்ணமி அன்று. ஐப்பசி மாதம் வருகின்ற சதய நட்சத்திரத்தில் தான் பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டிய தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழன் அவதரித்தார்.

ஐப்பசி மாசம் தேய்பிறையில் வருகின்ற ஏகாதசி திதிக்கு "இந்திரா ஏகாதசி" என்று பெயர். இந்த நாளில் விரதம் இருந்தால் நாம் செய்த பாவமும் நமது முன்னோர்கள் செய்த பாவங்களும் விலகும் என்பது ஆன்மீக ஐதீகம். ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் நீராடினால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு "கடை முழுக்கு" என்று பெயர். நரகாசுரனை வதம் செய்த நாளை இந்த மாதத்தில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். மேலும் கந்த சஷ்டி கவச விரதமும் இந்த மாதத்தில் தான் ஆரம்பமாகிறது.

மேஷம்: வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
அதிகார தோரணையோடும் ஆளுமையோடும் காய் நகர்த்தி காரியங்களை முடிப்பீங்க. அரசியலில் ஒரு நிலையான இடத்தை பிடிப்பீங்க. விறுவிறுப்பாக வியாபாரத்தை நடத்தி பொருளாதார மேம்பாடு காண்பீங்க. எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிப்பீங்க. திருமண முயற்சிகள் ஏதாவது காரணத்தால் தள்ளிப் போகுமுங்க. புத்திசாலித்தனமாக காரியம் செய்து தொழில்துறை போட்டிகளை சமாளிப்பீங்க. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீங்க .அரசாங்க வேலைகள் தடைபட்டாலும் மாதக் கடைசியில் அனுகூலமான நிலையை பெறுவீங்க. குழந்தை இல்லா தம்பதிகளுக்கு நல்ல செய்தி கிடைக்குமுங்க. காதல் திருமணம் கைகூடி வருமுங்க. புதிய வீடு கட்டுவதற்கான முயற்சியில் இறங்குவீங்க. திருச்செந்தூர் முருகனை வழிபடுங்க. விருப்பமான காரியங்கள் நிறைவேறுமுங்க.

ரிஷபம்: கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
எதிரிகளின் சூழ்ச்சியை தைரியமாக முறியடிப்பீங்க. எடுக்கின்ற காரியத்தில் சின்ன சின்ன இடையூறுகள் ஏற்படுமுங்க. பெரிய மனிதர்களின் சந்திப்பால் வியாபாரத்திற்கு தேவையான உதவிகளை பெறுவீங்க. வெளியூர் பயணங்கள் மூலமாக தொழில் துறையை மேம்படுத்துவீங்க. சகோதர வகையில் சில இழப்புகளை சந்திக்க வேண்டி வருமுங்க. எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை கைவிட்டு நடக்காதீங்க. அது பொருள் நஷ்டத்தில் கொண்டு போய் விடுமுங்க. வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்குமுங்க. குலதெய்வ வழிபாடு செய்ய குடும்பத்தோடு செல்வீங்க. பிள்ளைகளின் நடவடிக்கையை கவனமாக பாருங்க. ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு சிரமத்தை கொண்டு வருமுங்க.
திருவண்ணாமலை சென்று வாங்க. பெருமையும் புகழும் அதிகரிக்குமுங்க.

மிதுனம்: எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே...
பிள்ளைகளின் படிப்புக்காக அதிகம் செலவு செய்வீங்க. சிலர் மேல்படிப்புக்கு பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பீங்க. தந்தையாருக்கு உடல்நிலை பாதிப்பு உண்டாகி மருத்துவமனைக்கு அழைத்து செல்வீங்க. வேலை காரணமாக குடும்பத்தை விட்டு சில நாட்கள் பிரிந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகுமுங்க. சிலருக்கு திடீர் வெளிநாட்டு பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டாகுமுங்க. குடும்பத்தில் ஏட்டிக்கு போட்டியாக பேசி சண்டை சச்சரவுகளை வளர்க்காதீங்க. மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு போவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்காதீங்க. பைனான்ஸ் தொழிலில் கவனமுடன் செயல்படுங்க. பொருளாதார முன்னேற்றம் உருவாகி கையிருப்பு கூடுமுங்க. திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்க. சூழும் துன்பங்கள் தூர ஓடுமுங்க.

கடகம்: வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
அரசாங்க வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்குமுங்க. சட்டக்கல்லூரி மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துவாங்க. அலைச்சல் அதிகமாகி சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுமுங்க. வெளியூர் பயணங்களில் போகும் போது கண்ட இடத்தில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க. காதலியுடன் பிரச்சனை ஏற்பட்டு சமாதானப்படுத்த மிகவும் கஷ்டப்படுவீங்க. வாகனங்களில் போகும்போது எச்சரிக்கை தேவைங்க. சிறு விபத்தில் மாட்டி ரத்த காயம் ஏற்பட வாய்ப்பு இருக்குங்க. கல்லூரி மாணவர்கள் தேவையில்லாத பெண் பழக்கத்தை ஏற்படுத்தாதீங்க. படிப்பு கெட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போக வேண்டிய நிலை உண்டாகுமுங்க. தொழிலுக்கு உண்டான தடைகளை தைரியமாக தாண்டுவீங்க. அவசிய தேவைக்காக கடன் வாங்குவீங்க.
தஞ்சை பிரகதீஸ்வரர் பெருமானை வழிபடுங்க. நெஞ்சத்து ஆசைகள் எல்லாம் நிறைவேறுமுங்க.

சிம்மம்: அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று எந்த பிரச்சினையாக இருந்தாலும் தைரியமாக சமாளிப்பீங்க. தொழில் துறைகளில் உள்ள போட்டிகளை தகர்த்து எதிரிகளை திணறடிப்பீங்க. பழைய வீட்டை புதுப்பித்து அழகுபடுத்துவீங்க. பிள்ளைகளுக்கு தேவையான துணிமணிகள் எடுப்பீங்க. பெண்களுக்கு நகை வாங்கி கொடுத்து ஆனந்தத்தை உருவாக்குவீங்க. சில குடும்பங்களில் பேசி வைத்த திருமணங்கள் தள்ளி போக வாய்ப்பு இருக்குங்க. யாரிடமும் கடுமையான வார்த்தைகளை வெளிப்படுத்தாதீங்க. உறவுகளில் விரிசல் உண்டாகுமுங்க. அரசாங்கத்தில் இருந்து தொழிலுக்கான ஒப்பந்தங்களை பெறுவீங்க. மனைவியின் பேச்சை காது கொடுத்து கேட்டு பொறுமையாக நடந்தால் நல்லதுங்க. காளகஸ்திநாதரை வழிபடுங்க. கஷ்டங்கள் பறந்தோடுமுங்க.

கன்னி: அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே...
வாத திறமையால் சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்தி கொள்வீங்க. தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சாமர்த்தியமாக களைந்து எடுப்பீங்க. வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு தேவையான உதவிகள் வந்து சேருமுங்க. அறிமுகம் இல்லாத பெண்களிடம் அதிகமாக பேச்சு வைத்துக் கொள்ளாதீங்க. வருமானம் பெருகி வாங்கிய கடனை அடைப்பீங்க. கூட்டாக சேர்ந்து தொழில் தொடங்குவீங்க. அரசாங்க ஊழியர்களுக்கு இடம் மாற்றம் ஏற்பட்டு புதிய ஊருக்கு போவீங்க. சிலருக்கு பதவி உயர்வு கிடைக்குமுங்க. கையில் இருந்த காசை போட்டு மனை இடம் வாங்குவீங்க. தாய் தந்தையர் ஆசைப்பட்ட பொருளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீங்க. காதலியின் மனம் கோணாமல் நடந்து கொள்வீங்க. காரைக்குடி முத்துமாரியம்மனை வழிபடுங்க. நிறைவான செல்வம் பெறுவீங்க.

துலாம்: தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
ஒற்றைச் சொல்லில் எந்த காரியத்தையும் முடிக்கும் முயற்சியில் இறங்குவீங்க. வங்கிக் கடனை அடைக்க கடுமையாக பாடுபடுவீங்க. நெருக்கமான பெண்களிடமிருந்து ஆதாயமான பலனை அடைவீங்க. விற்பனையாகாமல் கிடந்த மனை இடம் விற்று பிரச்சனையில் இருந்து விடுபடுவீங்க. பங்குப் பரிவர்த்தனை, பிக் காயின் மணி போன்ற வியாபாரத்தில் எச்சரிக்கையாக செயல்படணுமுங்க. நீங்கள் மிகவும் எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைக்க தாமதம் ஆகுமுங்க. விரும்பிய பெண்ணிடம் மனதை வெளிப்படுத்தி காதலை சொல்வீங்க. இணக்கமாக நடந்து உறவுகள் மத்தியில் இறுக்கமான நிலையை கொண்டு வருவீங்க. கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பக்குவமாக நடந்து கொள்ளுங்க. வரவுக்கு மீறி செலவு செய்வதை கட்டுப்படுத்துங்க.
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை வழிபடுங்க. சகல சௌபாக்கியங்களும் சித்திக்குமுங்க.

விருச்சிகம்: போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
அரசாங்க பணியில் இருப்பவர்கள் கவனமாக வேலை செய்ய வேண்டுமுங்க. பணத்திற்கு ஆசைப்பட்டு தவறான காரியங்களில் இறங்காதீங்க. அடுத்தவர் பேச்சைக் கேட்டு குடும்பத்தில் கலகம் பண்ணாதீங்க. எதையும் சிந்தித்து சுயமாக முடிவு எடுங்க. புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வீங்க. வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்குமுங்க. கலைத்துறைவில் இருப்பவர்கள் புகழும் பெருமையும் அடைவீங்க. புதிய வாய்ப்புகள் கைகூடி வருமுங்க. மழலை சத்தம் வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்துமுங்க. ஏதாவது ஒரு இனம் தெரியாத கவலை மனதை பிடித்து ஆட்டுமுங்க. நல்ல நண்பர்களின் உதவியால் சிக்கலான பிரச்சனையிலிருந்து விடுபடுவீங்க.
பழனிமலை முருகனின் பாதம் பணியுங்க. கழனி செழித்து செல்வம் பெருகுமுங்க.

தனுசு: வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
தொட்ட காரியத்தில் எல்லாம் தடங்கல் இல்லாமல் வெற்றி பெறுவீங்க. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை இழுத்து வருமானத்தை பெருக்குவீங்க. கையில் இருக்கும் காசை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வீங்க. சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பாங்க. நெருங்கிய உறவுக்காரருக்கு பண உதவி செய்வீங்க. தொழிலுக்கு ஏற்படும் இடையூறுகளை தகர்த்து எறிவீங்க. வியாபார பார்ட்னுடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு உல்லாச பயணம் செல்லுவீங்க. குடும்பத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துவீங்க. மகளுடைய திருமணத்தை வெகு சிறப்பாக நடத்தி முடிப்பீங்க. பெற்றோரின் சம்மதத்தோடு காதலித்த பெண்ணை கை பிடிப்பீங்க. கோயில் திருப்பணிகளுக்கு பண உதவி செய்வீங்க. பட்டமங்கலம் சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாங்க. தொட்டதெல்லாம் துலங்குமுங்க.

மகரம்: வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
காலத்திற்கு தகுந்த மாதிரி கெட்டிக்காரத்தனமாக காரியம் செய்வீங்க. வியாபாரத்தில் வெற்றி நடை போடுவீங்க. புதிய தொழில் தொடங்கி மற்றவர்களின் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி நிற்பீங்க. நிலம் வாங்கி விற்கும் தொழிலில் கொடி கட்டி பறப்பீங்க. இதுவரை தடங்கலாக இருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்குமுங்க. கலைத்துறையினருக்கு நெருங்கி வந்த வாய்ப்பு கைநழுவி போகக்கூடிய நிலை உருவாகி மனதை சங்கடப்படுத்துமுங்க. நெருங்கிய உறவினர்களிடம் சண்டை சச்சரவுகளில் இறங்காதீங்க. தனியார் துறை ஊழியர்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடுவீங்க. திடீர் செலவுகள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகுமுங்க. அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீங்க.
திருநள்ளாறு தர்ப்ப ஆரண்ய ஈஸ்வரரை வழிபடுங்க. அவமிருத்த யோகம் விலகும்முங்க.

கும்பம்: சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
தொழில்துறைகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்படுதுங்க. வேண்டா வெறுப்பாக காரியம் செய்து வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ளாதீங்க. கட்டுமான தொழிலில் இருப்பவர்கள் புதிய சாதனை படைப்பீங்க. அரசாங்க கான்ட்ராக்ட் உங்களை தேடி வருமுங்க. புதிய வாகனம் வாங்குவீங்க. வாகனத்தில் போகும் போது மிகுந்த கவனமாக செல்வது முக்கியமுங்க. பெண்கள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்க. அனாவசியமாக கடன் வாங்கி அவஸ்தைப்படாதீங்க. வெளியூர் செல்லும் போது விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு போகாதீங்க. அடுத்தவர் மெச்சுவதற்காக ஆடம்பரமாக செலவு செய்வீங்க. கால் வலி பிரச்சனைக்காக மருத்துவரை சென்று பார்ப்பீங்க. நீதிமன்றத்தில் இருக்கும் சொத்து வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியுமுங்க.
ஒத்தக்கடை யோக நரசிம்மரை வழிபடுங்க. ஆயுள் விருத்தியாகும்முங்க.

மீனம்: பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
எந்த காரியத்திலும் ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்து கால் வையுங்க. தொழில் துறைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டாமுங்க. ஆன்லைன் வர்த்தகங்கள் போட்டிப் பந்தயங்களில் எச்சரிக்கையாக செயல்படுங்க. கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இல்லாவிட்டால் நெருங்கிய நட்புகளிடம் பகை உண்டாகுமுங்க. குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ளாமல் மனதை நோகடிப்பது போல் நடந்து கொள்வாங்க. நிதானமாக செயல்பட்டு குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பீங்க. அடுத்தவரின் பேச்சைக் கேட்டு வியாபாரத்தில் வில்லங்கத்தை ஏற்படுத்தாதீங்க. கையில் காசு இருந்தால் நிலத்திலோ நகையிலோ முதலீடு செய்யுங்க. மன நிம்மதிக்காக ஆலய வழிபாடு செய்வீங்க. அழகர் கோவில் கள்ளழகர் பெருமானை வழிபடுங்க. தொழில் விருத்தி அடையும்முங்க.

உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+